கேள்வி பதில்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 டிச
2012
00:00

கேள்வி: என் வீட்டில், பெர்சனல் பயன்பாட்டிற்கு கம்ப்யூட்டர் ஒன்றை வைத்துப் பயன்படுத்த விரும்புகிறேன். இந்த கம்ப்யூட்டரில் ப்ராசசர் டபுள் கோர் ஆக இருக்க வேண்டுமா? அல்லது சிங்கிள் கோர் ஆக இருந்தால் போதுமா?
என். தேவபாக்கியம், புதுச்சேரி.
பதில்:
கேள்விக்கு நன்றி. இந்த கேள்வி சிங்கிள்/ டபுள் கோர் என இருக்கக் கூடாது. டூயல் கோர் / குவாட் கோர் என இருக்க வேண்டும். ஆனால், இதற்கான பதில், நீங்கள் என்ன பணிகளுக்காக வீட்டில் வைத்து, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் திட்டமிடுகிறீர்கள் என்பதைப் பொருத்தது.
மின்னஞ்சல் பார்க்க, வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ஏதேனும் சிறிய அளவில் ஹோம் ஒர்க் செய்திட, எப்போதாவது யு ட்யூப் வீடியோ பார்க்க என்றால், டூயல் கோர் போதும். கிராபிக்ஸ், அனிமேஷன், எச்.டி. மூவி பார்த்தல், கேம்ஸ் விளையாடுதல் எனில், உங்கள் பயன்பாடு எளிதாகவும், அதிக மகிழ்ச்சியைத் தருவதாகவும் அமைய குவாட் கோர் ப்ராசசர் இருந்தால் நல்லது.

கேள்வி: புதிதாகக் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கியவுடன், அவற்றில் உள்ள பாகங்கள், துணை கூடுதல் உறுப்புகள், செயல் திறன், அடிப்படை செயல்பாட்டிற்கான ஹார்ட்வேர் உறுப்புகள் ஆகியவற்றை எப்படி அறிந்து கொள்வது? கம்ப்யூட்டரைச் சுற்றி உள்ள பெட்டி அல்லது சில நேரங்களில் பில்களில் போட்டது உண்மை என்று அறிவது?
சி. உமா மகேஸ்வரி, சென்னை.
பதில்:
நல்ல கேள்வி. கம்ப்யூட்டரை திறந்து பார்த்தாலும், அதன் முக்கிய கூடுதல் அம்சங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதற்கென உள்ள புரோகிராமினை இயக்கினால், அது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுக் காட்டும்.
அதன் பெயர் Sandra. இதனை வழங்குவது SiSoftware என்ற நிறுவனம்.இது அடிப்படையில் இலவசமாய்க் கிடைக்கிறது. ஆனால் கூடுதல் தகவல்கள் பெற கட்டணம் செலுத்திப் பெறலாம். இலவசமாய்க் கிடைக்கும் புரோகிராமே நமக்குப் போதும். கம்ப்யூட்டரின் பிரிவுகள் அனைத்தும் இன்னும் சிறப்பாகச் செயல்பட சில பரிந்துரைகளையும் தரும். இந்த புரோகிராமினை http://www.sisoftware.net என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

கேள்வி: என் லேப் டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 பயன்படுத்துகிறேன். இதில் பிரிண்ட் ஸ்கிரீன், ஸ்கிரீன் ஷாட் எடுத்தாலும், இமேஜ் புரோகிராமில் பயன்படுத்த முடியவில்லை. என்ன காரணம்?
சி.ஆகாஷ் செல்வன், தாம்பரம்.
பதில்:
உங்கள் கேள்வியைச் சற்று எளிதாக்கியிருக்கலாம். நீங்கள் பிரிண்ட் ஸ்கிரீன் கொடுத்து, ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் அதனை பெயிண்ட் போன்ற புரோகிராமிற்குக் கொண்டு செல்ல இயலவில்லை. விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இந்த வசதி சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்பு, ஸ்கிரீன் ஷாட் எடுக்க விண்டோஸ் கீயுடன் PrtScn கீயை அழுத்தி, கிளிப் போர்டில் சேவ் செய்யப்படும் இமேஜை, பெயிண்ட் போன்ற இமேஜ் கையாளும் புரோகிராமில் பேஸ்ட் செய்து பைலாக மாற்றி, விருப்பப்படும் பார்மட்டில் சேவ் செய்தீர்கள். தற்போது இந்த வேலையை விண்டோஸ் 8 செய்கிறது. நீங்கள் விண்டோஸ் மற்றும் PrtScn கீயினை அழுத்தினால் போதும். திரைக் காட்சி பைலாக, My Pictures\Screenshot போல்டரில் சேவ் செய்யப்படுகிறது. இது PNG பார்மட்டில் சேவ் செய்யப்படும். உங்களுக்கு வேறு பார்மட்டில் தேவை எனில், பின்னர் மாற்றிக் கொள்ளலாம்.

கேள்வி: டெஸ்க் டாப்பில் பைல்கள் அதிகம் உள்ளன. இவற்றைக் கிளீன் செய்திடவா என்று கேட்கும் பாப் அப் விண்டோ வராமல் தடுக்க முடியுமா?
என்.எஸ். மறைமலை, கடம்பூர்.
பதில்:
குப்பையாய் ஏன் வைத்திருக்கிறீர்கள். கொஞ்சம் கிளீன் செய்திடுங்கள் என்று நம் நண்பர் அல்லது தோழி கூறினால், உடனே அவர்களை முறைக்கலாம். கம்ப்யூட்டரை அப்படி வெறுப்பாக பார்த்தால் நாம் தான் பைத்தியக்காரனாவோம். இருப்பினும் நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்படி கம்ப்யூட்டரை செட் செய்தால் தானே நாம் ராஜாவாக இருக்கலாம். இதோ, அதற்கான வழி.
உங்கள் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) தேர்ந்தெடுங்கள். டிஸ்பிளே ப்ராப்பர்ட்டீஸ் (Display Properties) திரை கிடைக்கும். இதில் டெக்ஸ்க்டாப் (Desktop) டேப்பினைத் தேர்ந்தெடுங்கள். அதில் கஸ்டமைஸ் டெஸ்க் டாப் (Customize Desktop) என்ற பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். அடுத்து டெஸ்க்டாப் ஐட்டம்ஸ் (Desktop Items)என்று ஒரு புதிய விண்டோ கிடைக்கும். இதில் “Run Desktop Cleanup Wizard every 60 days” என்று உள்ள இடத்தில் காணப்படும் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடுங்கள். சிரித்துக் கொண்டே ஓகே கிளிக் செய்திடுங்கள். இனி எந்த எச்சரிக்கை செய்தியும் வராது.

கேள்வி: என் அலுவலகத்தில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டினை அழகாக அமைத்து பாராட்டு வாங்குகிறேன். சில வேளைகளில், பெரிய செல்களில், ஒன்றிரண்டு எழுத்துக்களை அமைக்கையில், சற்று வித்தியாசமாக, பொருந்தாமல் உள்ளது. இதனை நெட்டு வாக்கில், அல்லது குறுக்காக அமைக்க முடியுமா?
என். கஜேந்திரன், சிவகாசி.
பதில்:
தாராளமாக அமைக்கலாம், கஜேந்திரன். இதற்கு எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும்.இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், எந்த பைலையும் திறந்து படிக்கலாம் என்று படித்தேன். பைலை இதன் மூலம் திறக்க முடியுமா? அதற்கு என்ன செய்திட வேண்டும்?
என். கே. ஜெயபிரகாஷ், கோவை.
பதில்:
தாராளமாக திறக்கலாம். இதனை நான் முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேஜிக் என எழுதி உள்ளேன். ஒரு பைலை அதன் புரோகிராம் மூலம் திறப்பதற்கான நேரத்தைக் காட்டிலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் குறைவான நேரத்தில் திறந்துவிடலாம். குறிப்பாக படங்கள் கொண்ட பைல்களை இந்த வகையில் விரைவாகத் திறக்கலாம்.
மேலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வெகு விரைவில் கம்ப்யூட்டரில் லோட் ஆகும். ஆனால் படங்களைத் திறக்கும் பிக்சர் மேனேஜர், அடோப் போட்டோ ஷாப் போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் திறந்து இயங்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
பைலை இதில் திறக்க என்ன செய்ய வேண்டும்? அந்த பைலை அப்படியே மவுஸால் இழுத்து வந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவில் போட்டுவிட வேண்டியதுதான்.
பட பைல்கள் மட்டுமின்றி டெக்ஸ்ட் பைல்களையும் இது திறக்கும். அவுட்லுக் இமெயில்கள், ஏன் எம்.எஸ்.ஆபீஸ் டாகு மெண்ட்களையும் இது திறக்கும். ஆனால் இதற்கு மட்டும் அந்த கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இது போதாதா? சரி, அப்படியானால் ஒரு போல்டர் முழுவதையும் அப்படியே இழுத்துவந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவில் போடவும். அனைத்து பைல்களும் காட்டப்படும். பின் திறக்கப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.