சென்னையில் சாந்தி ஆர்ட்ஸ் பவுண்டேஷன் மற்றும் அறக்கட்டளை சார்பில், பிரபல லய வித்வான் சங்கீத கலாநிதி டாக்டர் டி.கே.மூர்த்தியின் வாழ்நாள் சாதனைகளைப் பாராட்டும் விதத்தில், 25 ஆயிரம் ரூபாய் காசோலை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. "மிருதங்க மாமன்னன்' என்ற விருதும் அளிக்கப்பட்டது.
சாந்தி ஆர்ட்சின் 17ம் நூற்றாண்டு இசை நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லால்குடி ஸ்ரீமதி பிரும்மானந்தம் வழங்கிய, வயலின் இசை நிகழ்ச்சி, செவிகளுக்கு சுகானுபவம் எனலாம். இந்த இசை அமைப்பின் ஆதரவில் நடைபெற்று வரும் இசை நிகழ்ச்சிகளில், இளம் கடலூர் ஜனனீ பாடிய விதம் திறமை ஜொலித்தது.
டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் சீடரான ஜனனீ. அவர் கையாண்ட சிம்மவாஹினி ராக ஆலோபனை. இருபத்தியேழாவது மேள ராகமான அவரது, இசைச் சிறப்பை பிரதிபலித்தது. இந்நிகழ்ச்சியில் பாடிய மற்ற ராக ஆலாபனைகள் பந்துவராளி மற்றும் பிரதான கல்யாணி இரண்டிலும், மூன்று ஸ்தாயிகளில் அதிதாரஸ்தாயி வரை அநாயாசப் பிரவேசம் செய்து, பளிச்சென்று விரிவுகளை கையாண்ட விதமும் மனம் கவர்ந்தது.
குரு டாக்டர் பாலமுரளியின் த்விஜாவந்தி தில்லானா படு க்ளாஸ், நிகழ்ச்சியின் நிறைவில், வயலினில் ஜெயந்தி கேசவ் கச்சிதம் - நயமான வாசிப்பு, மிருதங்கத்தில் மன்னார்கோவில் பாலாஜியின், முதல்தர வாசிப்பை மெச்சலாம். சிவராம கிருஷ்ணன் கடம் வாசிப்பும் சிறப்பாக இருந்தது. கடலூர் ஜனனீ இளம் இசை சுனாமி. "கீ' போர்டு, கர்நாடக இசை மட்டுமின்றி ஒரு இசையமைப்பாளராகவும், இந்த இருபதே வயதில் சாதனை படைத்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.