அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 டிச
2012
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

அணுவை எதிர்த்து நடந்தவர்!


ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் சதீஷ்குமார். ஆசாரமான சமண குடும்பத்தைச் சேர்ந்தவர். வினோபா பாவேயை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். அவருக்கு 26 வயது ஆனபோது, வாழ்வை வீணாக்குகிறோமா என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அதன்பின், அணு ஆயுதத்தை எதிர்த்து உலகம் முழுவதும் நடைபயணம் செல்ல முடிவு செய்தார்.
வினோபாபாவேயிடம் இதை தெரிவித்தார். சதீஷ்குமாரின் முடிவை பாராட்டிய அவர், இரண்டு நிபந்தனைகளை விதித்தார். ஒன்று, பயணத்திற்காக கையில் பணம் வைத்துக் கொள்ளக் கூடாது. பணம் இருந்தால், உடனே வீடு திரும்பும் எண்ணம் வந்து விடும். பணம் இல்லாவிட்டால்தான், தங்குவதற்கும், உணவிற்கும் அடுத்தவரை நாட வேண்டி யிருக்கும். அப்போது பல தரப்பட்ட மனிதர்களின் குணத்தை புரிந்து கொள்ள முடியும். இரண்டாவது, எப்போதும் சைவ உணவைத்தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் உயிர்க்கொலை தவறு என்ற பயணத்தின் நோக்கம் நிறைவேறும் என்றார்.
1961ம் ஆண்டு டெல்லி காந்தி சமாதியில் இருந்து சதீஷ்குமார் புறப்பட்டார். அவருக்கு உதவியாக, நண்பர் மேனன் சென்றார். அனைத்து பத்திரிகைகளிலும் சதீஷ்குமாரின் பயணம் குறித்த செய்திகள் வந்திருந்தன. ஒன்றரை மாதம் நடந்து, பாகிஸ்தான் எல்லைக்கு இவர்கள் வந்தனர். விசா, பாஸ்போர்ட் எதுவும் இல்லை. யுத்த நெருக்கடியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இருந்த நேரம் அது.
பாகிஸ்தானில் உங்களுக்கு சாப்பாடு கிடைக்காது என்று கூறிய நண்பர்கள் சில பொட்டலங்களையும் கொடுத்தனர். ஆனால், அதை மறுத்த சதீஷ்குமார், "அப்படி சாப்பாட்டை நான் கொண்டு போனால், அது பிற மனிதன் மீது நான் நம்பிக்கை வைக்கவில்லை என்று அர்த்தமாகிவிடும்' என்றார்.
விசா இல்லாமலேயே பாகிஸ்தானுக்குள் செல்ல சதீஷ்குமாரும், மேனனும் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது அவர்களை கடந்து காரில் சென்ற ஒரு நபர் காரை நிறுத்தி, ""நீங்கள் தானே சதீஷ்குமார், உங்கள் விவரத்தை பத்திரிகைகளில் படித்தேன். எனது காரில் வாருங்கள்,'' என்றார். அன்போடு மறுத்த சதீஷ்குமார் அவருடைய முகவரியை மட்டும் வாங்கிக் கொண்டார்.
அன்றிரவு அவரது வீட்டுக்கு சென்று உணவருந்தினர். பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான், பெர்சியா, ஈரான், ரஷ்யா, போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்சு, லண்டன் அங்கிருந்து படகில் நியூயார்க், நியூ ஜெர்சி, பிலடெல்பியா வரை சென்று அங்கு கென்னடியின் சமாதியில் தங்களது பாதயாத்திரையை முடித்தனர். எட்டாயிரம் மைல் தூரத்தை கையில் ஒரு பைசா கூட இல்லாமல் கிடைத்ததை சாப்பிட்டு, தூக்கம் வந்தபோது தூங்கி வெற்றிகரமாக அவர்கள் முடித்துவிட்டனர். "கையில் காசு இல்லாதவன் எல்லா மனிதர்களையும் நம்புவான்' என்கிறார் சதீஷ்குமார். இப்போது அவரது வயது 76.

கண்ணே என் கண்ணே!

* ஓடும் வண்டியில் படிப்பதை தவிர்ப்பேன்!
* நிமிர்ந்து நேராக அமர்ந்து கொண்டுதான் படிப்பேன்!
* படிக்கும்போது இடப்புறமிருந்து வெளிச்சம் வரும்படி படிப்பேன்!
* தொலைக்காட்சி பார்க்கும்போது... டி.வி.,க்கு 5 அடி தூரத்தில் அமர்ந்து பார்ப்பேன்!
* 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஜன்னலுக்கு வெளியே பார்வையை செலுத்திவிட்டு, பின்பு படிப்பேன்! (அப்படி பார்ப்பது
வேடிக்கை பார்க்க அல்ல... கண்களுக்கு இதம் தரவே)
* முகவாய்கட்டையை சற்றே உயர்த்தி மேல் இமைகள் கீழே இருக்கும்படி வைத்து டி.வி.,யை பார்ப்பேன்!
* கணினியை பயன்படுத்தும்போது 20, நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வையை திரையில் இருந்து வேறு பக்கமாக திருப்புவேன்!
* தூரத்தில் உள்ள பொருள்களை பார்த்துவிட்டு வந்து கணினியை பார்ப்பேன்!
* கணினியில் வேலை பார்க்கும்போது இரவில் அதிக நேரம் கண்விழிக்க மாட்டேன்!
இதெல்லாம் உலகையே பார்க்க வைக்கும் உனக்காக செய்வேன், "என் கண்ணே என் கண்ணே!'

கலாம் காலம்!

""எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதாவது, நம் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு, "என்னால் முடியும்!' என்ற நம்பிக்கை மிகவும் முக்கியம். அது நல்ல புத்தகங்களில் இருந்தும், நல்ல பெரியோர்களிடம் இருந்தும், நல்ல ஆசிரியர்களிடம் இருந்தும், தெய்வீகப் பெற்றோர்களிடம் இருந்தும்தான் கிடைக்கும். "என்னால் முடியும்!' என்ற நம்பிக்கை உங்களுக்குள் உதயமானால், மக்களுக்கு நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வளரும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தால், இந்தியாவால் முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டால், வளமான இந்தியாவை... ஓர் அமைதியான இந்தியாவை நம்மால் உறுதியாக அமைக்க முடியும். 60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, "நம்மால் செய்ய முடியும்' என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்!''

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது, "இளநீர் அல்வா'! பேரை கேட்டாலே மிரட்டுதா?
ஒருமுறை இளநீர் அல்வாவை செய்து சாப்பிட்டும், சாப்பிடவும் கொடுத்து பாருங்கள். சாப்பிட்டவர்கள் உங்களுக்கு தங்கள் சொத்தையே கூட எழுதி வைத்தாலும் வைப்பார்கள் அம்மா! உங்களின் உண்மையான சொத்துக்களான குட்டீஸ் செம ஜாலி ஆகிடுவாங்க.
தேவையான பொருட்கள்: இளநீர்-4, சர்க்கரை -250 கிராம், அரிசி மாவு- 100 கிராம், நெய்- 100 கிராம்.
செய்முறை: நல்ல வழுக்கையாக உள்ள இளநீரை தேர்ந்தெடுக்கவும். உப்பு சுவை இல்லாததாக இருந்தாலும் சுவை கூடும்.
சர்க்கரையை சிறிது இளநீரில் கலக்கி, அடுப்பில் வைக்கவும். நன்றாக கொதித்ததும், மீதமுள்ள இளநீரையும் சேர்க்கவும். அரிசி மாவை தண்ணீரில் கலக்கவும். இந்த கலவையை வடிகட்டவும். வடிகட்டிய கலவையை இளநீர் சர்க்கரை பாகுடன் சேர்க்கவும்.மிதமான தீயில் கைவிடாமல் மெதுவாக கிண்டவும்.அரிசி மாவு வாசனை போகும் வரை கிளரவும். கடைசியில் நெய் சேர்த்து அல்வா பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.