ஒரு ஊரில் வைத்தியர் ஒருவர் இருந்தார். அவர் வைத்தியத்தில் நல்ல திறமையும், தேர்ச்சியும் பெற்றவர். அவர் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு வைத்தியத் தொழில் செய்யப் புறப்பட்டார்.
அடுத்த ஊரை அடைந்து, அந்த ஊர் தலைமை அதிகாரியைச் சந்தித்தார். தான் வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் கூறினார்.
தலைமை அதிகாரி அனுமதி கொடுக்க, அந்த ஊரில் ஒரு வைத்திய சாலையைத் தொடங்கினார் வைத்தியர். அந்த ஊரில் வைத்தியத் தொழில் நல்ல முறையில் நடக்கும் என அவர் உறுதியாக நம்பினார்.
நாட்கள் ஓடின-
ஆனால், ஊர் மக்களில் ஒருவர் கூட அவரிடம் வைத்தியம் செய்ய வரவில்லை. அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த ஊர் மக்களின் மேல் ஆத்திரமும், கோபமும் கூட வந்தது.
"நான் வெளியூர்க்காரன் என்பதால்தான் தன்னிடம் யாரும் வைத்தியம் செய்ய வரவில்லை' என எண்ணி அவர் மிகுந்த கோபம் கொண்டார்.
ஒருநாள் ஊரின் தலைமை அதிகாரியைச் சந்தித்தார்.
""ஐயா! இந்த ஊர் மக்கள் மிகவும் சிறந்தவர்கள் என நினைத்திருந்தேன். ஆனால், அவர்களோ மிகவும் சுயநலக் காரர்களாக இருக்கின்றனர். நான் வெளியூர்க்காரன் என்பதால், என்னை வெறுத்து ஒதுக்கு கின்றனர். இதுநாள் வரை ஒருவர் கூட என்னிடம் வைத்தியம் பார்க்க வரவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லையே... வெளியூரில் பிறந்ததுதான் நான் செய்த பாவமா?'' என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார் வைத்தியர்.
தலைமை அதிகாரி புன்முறுவலோடு வைத்தியரைப் பார்த்தார்.
""வைத்தியரே! கோபப்படாமல் நான் சொல்வதை சற்று கேளுங்கள். இந்த ஊர் மக்களின் வாழ்க்கை நிலைபற்றி தங்களுக்குத் தெரியாது. இவர்கள் தங்களுக்குள்ளேயே பல நல்ல கொள்கைகளை வகுத்துக் கொண்டு வாழ்கின்றனர். கடவுள் மீது பயமும், பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர்கள். ஒருவர் மேல் ஒருவர் அன்பும், மரியாதையும் செலுத்தி ஒற்றுமையுடன் வாழ்பவர்கள். கடுமையாகவும், நேர்மையாகவும், உண்மை யாகவும், உழைக்கக் கூடியவர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தாலும், எளிமையுடன் வாழ்பவர்கள். ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் பசித்த பிறகே உண்பவர்கள். அதுவும் அளவோடு மட்டுமே உ<ண்பர். இத்தனை நல்ல குணங்களையும், கொள்கைகளையும் இவர்கள் கொண்டுள்ளதால், அனைவரும் உடல் ஆரோக்கியமாகவே உள்ளனர். அதனால் எந்த வியாதியும் இவர்களுக்கு வருவதில்லை. எனவே தான் இவர்களுக்கு வைத்தியமே தேவையில்லாமல் போய் விட்டது. மற்றபடி தங்களை யாரும் இங்கு வெறுக்கவில்லை. இதுதான் உண்மை!'' என்றார் அதிகாரி.
அவரது கனிவான, அன்பான விளக்கம் வைத்தியருக்கு உண்மையை உணர்த்தியதோடு, அவரது கோபத்தையும் தணித்தது.
""ஐயா! உண்மை தெரியாமல் தங்கள் ஊர் மக்களின் மேல் ஆத்திரமும், கோபமும் கொண்டுவிட்டேன். இப்போது உண்மை தெரிந்துவிட்டது. இப்படி ஒரு கட்டுக்கோப்பான மக்களை நான் எங்கும் கண்ட தில்லை. இனிமேல் காணப் போவதுமில்லை. என் போன்ற வைத்தியர்களுக்கு வேலை யில்லாவிட்டாலும் பரவா யில்லை. இவர்கள் கடவுளின் கிருபையால் கடைசி வரை எந்தவிதமான நோய் நொடியும் இல்லாமல், ஆரோக்கியமாகவே வாழட்டும்,'' என்று வாழ்த்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டார் வைத்தியர்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.