அந்த காலத்துல... நாட்டுல நடந்த முக்கிய நிகழ்வுகள் மக்களோட உணர்வுகள், அறிஞர்களோட சிந்தனைகள் வல்லுனர்களோட கருத்துக்கள், நடந்திட்டிருந்த ஆராய்ச்சியோட குறிப்புகளைத்தான் "டைரி'னு சொல்லி எழுதி வைச்சிருக்காங்க.
"டைப்' அடிக்கிறவங்களை "டைப்பிஸ்ட்' டெரரான வேலைகளை செய்றவங்களை "டெரரிஸ்ட்'னு சொல்ற மாதிரி, டைரி எழுதுறவங்களுக்கு, "டைரிஸ்ட்'னு பேர் வைச்சு கூட கூப்பிட்டிருக்காங்க. இவ்வளவு ஏன்? போர் காலங்கள்ல நடந்த சம்பவங்களை பத்தி தெரிஞ்சுக்க, அந்த பகுதி மக்களோட டைரி குறிப்பைத்தான் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்கன்னா பார்த்துக் கோங்களேன்! அப்படி ஒரு முக்கியமான சம்பவம்தான், "ஹோலோ காஸ்ட்!' இரண்டாம் உலகப்போர் சமயத்துல ஜெர்மனியோட நாஜி படைகள் நடத்தின யூத படுகொலையில, மூணுல ரெண்டு பங்கு யூதர்களை நாஜிக்கள் விதவிதமா துன்புறுத்தி சாகடிச்சிருக்காங்க. அப்போ... மீதமிருந்த யூத மக்களோட மனநிலை என்ன? எப்படியெல்லாம் இந்த படுகொலைகள் நடந்தது? இந்த விவரங்கள் எல்லாம் யூதர்கள் தங்களோட டைரியில எழுதி வைச்ச குறிப்புகள் மூலமாத்தான் வெளி உலகத்துக்கு தெரிய வந்துச்சு. குறிப்பாக, "ஆனி ப்ராங்க்ன்னு' ஒரு பொண்ணு ரத்தமும், சதையுமா அந்த படுகொலை களை பத்தி தன்னோட டைரிக் குறிப்புல எழுதியிருந்தாங்க. உலகத்துக்கு ஜெர்மனியோட முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுனது இந்த டைரிதான்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.