Advertisement
கடவுளிடம் சரணடைந்து விட்டால்...
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 டிச
2012
00:00

பகவானை கருணைக்கடல் என்பர். கடலிலிருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை; அதுபோல், பகவான் யாருக்கு எவ்வளவு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதில்லை. அவனது கருணையைப் பெற, அவனை வழிபடலாம் நாம். அதை விட, அவனையே சரணடைந்து விட்டால் போதும், காப்பாற்றுகிறான் அவன். அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்... "அர்ஜுனா... என்னை சரணடைந்து விடு; உன்னை நான் காப்பாற்றுகிறேன்...' என்றார்.
இதை, சரணாகதி தத்துவம் என்கின்றனர். ராமாயணத்தில் இந்த சரணாகதி தத்துவம் உள்ளது. ராமனை சரணடைந்து உயிர் தப்பினான் காகாசுரன்; ராமனை சரணடைந்து ராஜ்ய சுகம் பெற்றான் விபீஷணன். இப்படியாக சரணாகதிக்கு ஏற்றம் உள்ளது. நம்மால் எதுவும் செய்து விட முடியாது.
அதனால், "பகவானே... நீதான் கதி. உன்னையே சரணடைகிறேன். நீ என்ன செய்கிறாயோ, அதை செய்... நான் ஏற்றுக் கொள்கிறேன்...' என்று பகவானை சரண டைந்து விட்டால், காப்பாற்றுவது அவன் கடமை. "எல்லாம் என் சாமர்த்தியம்; பகவானால் என்ன செய்ய முடியும்?' என்று வீம்பு பேசினால், தோற்பது நாம் தான்.
பனைமரம் நிமிர்ந்து நின்றாலும், பெருங்காற்று அடிக்கும்போது வேரோடு பெயர்ந்து விழுகிறது. அதே சமயம், நாணல் வளைந்து கொடுத்து, மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. அதுபோல, பகவானிடம் வீராப்பு பேசி பயன் இல்லை; எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து, சரணாகதி ஆகிவிட்டால் போதும், அவன் காப்பாற்று வான்.
ஏனென்றால், அவன் கருணைக் கடல். ஒரு சின்ன தீபத்திலிருந்து ஆயிரம் தீபம் ஏற்றினாலும், சின்ன தீபத்தில் ஜோதி குறைவதில்லை. அது போல், பகவான் எவ்வளவு பேருக்கு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதேயில்லை.
நாம் செய்ய வேண்டியது சரணாகதி ஒன்று தான். பக்தியுடன், "பகவானே... நீதான் கதி! என்னால் ஒன்றுமில்லை...' என்று சொல்லி, அவனை சரணடைந்து விட்டால் காப்பாற்றுவது அவன் கடமை.
சரணாகதி ஒன்று தான் பகவானின் கருணையைப் பெற வழி. ஞாபகமிருக்கட்டும்!
***

ஆன்மிக வினா-விடை!






பிரதோஷ வேளையில், சிவனுக்கு படைக்கக்கூடிய பொருள் எது?
பிரதோஷ வேளையில், சிவனுக்கு வில்வ இலை மாலையை படைத்து வணங்க வேண்டும்.
***

வைரம் ராஜகோபால்

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
03-ஜன-201302:27:48 IST Report Abuse
GOWSALYA Inthir ,எங்கள் மீது எங்களுக்கே நம்பிக்கை வேணும்,அடுத்து பெற்றோர் + பெரியோர்களுக்கு மதிப்பும் ,மரியாதையும் கொடுக்கணும்.......உண்மையே....ஆனால்,இது எல்லாம் இருந்தாலும் நிச்சயம் கடவுள் கிருபையும் வேணும் அல்லவா?,,ஆனால், நீங்க சொல்வது கடவுளை நம்புவது வீண் என்பதுபோல இருக்கிறது....
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
inthir - Bangalore,இந்தியா
02-ஜன-201309:44:10 IST Report Abuse
inthir its not exactly correct......believe yourself then respect others automatically you reached peak....
Rate this:
7 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.