Advertisement
இது உங்கள் இடம்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 டிச
2012
00:00

விவரமான ஆசிரியர்!

பிளஸ் 1 படிக்கும் மாணவன் நான். பஸ்சில் கண்டெடுத்த, "பலான' புத்தகத்தோடு வகுப்பிற்கு வந்தான் என் நண்பன் ஒருவன். இதை அறிந்த சக மாணவர்களின் கவனம் சிதறியது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட ஆசிரியர், நண்பனை புத்தகமும், கையுமாக பிடித்து விட்டார். மாட்டிக் கொண்டோமே என்ற பயத்தில், அனைவருக்கும் வியர்த்து விட்டது. ஆனால், ஆசிரியரோ, சிறிதும் புன்னகை மாறாமல், அதே சமயம், கண்டிப்பான குரலில், "செக்ஸ் என்பது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. இதை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாததால்தான் குழப்பங்களும், வியாதியும் வருகிறது. இது போன்ற புத்தகங்கள், பால் உணர்வை தூண்டுவதேயன்றி, போதுமான அறிவை புகட்டுவதில்லை...' என்று ஆரம்பித்து, அறிவியல் பூர்வமான பல நன்மை, தீமைகளை விளக்கினார். பிரமிப்போடு கேட்டுக் கொண்டிருந்தோம்.
பிறகு ஆசிரியரின் ஆலோசனைப்படி, "எய்ட்ஸ் அவேர்னஸ்' என்ற தலைப்பில் பேசுவதற்கு, ஒரு டாக்டரை வரவழைத்தார் தலைமை ஆசிரியர். மனதில் உள்ள சந்தேகத்தை எல்லாம் தீர்த்துக் கொண்டோம். எங்கள் ஆசிரியரைப் போல மற்ற ஆசிரியர்களும் நடந்து கொண்டால், மாணவர்கள் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள்.
எல்.கார்த்திக் ராஜா, சென்னை.

மாற்றி யோசிக்கலாமே!


எங்கள் தெருவிலுள்ள ஒரு மூதாட்டி, இட்டிலி மாவு வியாபாரத்தை சிறப்பாக நடத்தி வந்தார். தினமும், கிலோ கணக்கில், கிரைண்டரில் அரைத்து, ஏரியா மக்கள் அனைவரும் வாங்கிச் செல்லுமளவுக்கு, மாவு விற்பனையில் கோலோச்சி வந்தாள். சமீபகாலமாக ஏற்பட்ட மின்வெட்டால், அந்த தொழிலில் அவருக்கு தொய்வு ஏற்பட்டது.
மின்சாரம் கிடைக்கும் சிறிது நேரத்திற்குள்ளாக, மாவு அரைக்க இயலாமல் திண்டாடினார், மாவு கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு மாவு இல்லை எனச் சொல்லி வந்ததோடு, போதிய வருமானமின்றி கஷ்டப்பட்டவரின் மனதில், ஒரு புது வியாபாரத் திட்டம் உதயமானது.
மாவுக்கடை என்ற விளம்பரப் பலகையை எடுத்து, "கிழங்குக்கடை' என்ற போர்டு மாட்டினார். மரவள்ளி மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை அவித்தும், உதிரியாக்கியும், தாளித்தும் அதன் மேல் தேங்காய் தூவி, சுவையுடன் மக்களுக்கு வினியோகித்தார். அந்த வியாபாரம், இப்போது அமோகமாகவே நடக்க துவங்கி விட்டது. மாவு வியாபாரத்தில் வந்த லாபத்தை விட, கூடுதலாக வர, மூதாட்டி சந்தோஷமடைந்து விட்டார்.
என்ன செய்யறது...மின்சார உற்பத்தி குறைவானதால அரசால், 24 மணி நேரமும் மக்களுக்கு மின்சாரம் தர முடியவில்லை. அதுக்காக அரசையே குறை சொல்லிட்டிருக்க முடியுமா? நம்மளை மாதிரி ஆட்கள், பஞ்சம் பொழைக்கறதுக்கு மாற்று வழியை கையாளத் துவங்கினா, எப்படியும் பொழைக்கலாம். "ஆண்டவன் ஒரு கதவை மூடினா... இன்னொரு கதவை திறந்து வைக்காமலா போவான்...' என்ற, அவளது நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள், மின்சாரத்திற்காக காத்திருந்து கால விரையம் செய்யும் மற்றவர்களுக்கு, ஒரு தூண்டுகோலாய் அமையும் என்பதில் ஐயமில்லை.
ஜக்கி, வேலாண்டிபாளையம்.

அக்குள் அருவருப்பு!


பிசியோதெரபி படிக்கும் நான், கல்லூரியின் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறேன். எங்கள் அறையில், என்னையும் சேர்த்து நான்கு பெண்கள். எங்களில் ஒருத்தி, ஒல்லியாக, உயரமாக, கவர்ச்சியாக இருப்பாள். அவளின் பேரழகு மீது, எங்களுக்கு பொறாமை உண்டு. அவள் குளித்துவிட்டு வந்து, உடை மாற்றினாள். அப்போது, அவளது இரு அக்குள் பகுதியை பார்த்து அருவருப்படைந்தேன். காரணம், அவளது இரு அக்குள்களும் கறுப்படிந்திருந்தன. அக்குள் கறுப்பு விரிவடைந்து, அக்குளுக்கு வெளியே விகாரம் காட்டியது.
எதனால் என வினவியபோது தான் தெரிந்தது, கடந்த ஐந்து ஆண்டுகளாக, டியோடரன்ட்களை பயன்படுத்தி இருக்கிறாள் என்றும். அதனால், ஸ்கின் அலர்ஜி ஆகியிருக்கிறது என்றும். டியோடரன்ட்களை நிறுத்த சொல்லி, தினம் குளிக்கும் போது அக்குள், முன்னங்கழுத்து, பின்னங்கழுத்து முகம் போன்ற பகுதிகளை பாசிபருப்பு மாவு தடவி, தேய்த்து, குளிக்கச் சொன்னேன். இப்போது, அவளின் அக்குள் கறுப்பு வெகுவாய் குறைந்திருக்கிறது.
சகோதரிகளே... டியோடரன்ட்களை தவிருங்கள். உபயோகிக்கும் கட்டாயம் என்றால், 45 செ.மீ., தூரத்தில் வைத்து, ஸ்ப்ரே செய்யுங்கள்.
டபிள்யூ.ஆர்.ஸ்வர்ணலதா, மாயவரம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
04-ஜன-201305:31:11 IST Report Abuse
GOWSALYA குட்டிச&,மகளே சொல்ல மறந்திட்டேன்.....வியஜ் டிவியில "" சொல்வதெல்லாம் உண்மை"' என்று ஒரு நிகழ்ச்சி போகின்றது.அதில 28-09-12 ல் நடந்த நிகழ்ச்சியைப் பாருங்க......பெண் உரிமை எங்கே போகின்றது என்று ?....அதைப் பார்க்கிறச்ச ஏன் பெண்ணாப் பிறந்தேன் என்று என்னையே கேவலமா எண்ணத் தோன்றுகிறது.....இப்படியும் பெண்களா?.....ஐயோ என்ன கொடுமை தெய்வமே?....."" பெண்ணாகப் பிறந்திடப் பெருந்தவம் செய்யணும் "" என்ற சொன்ன நம் நாட்டில் இப்படிக் கொடுமைகளா?...நிச்சயம் பாருங்க ......
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
03-ஜன-201311:43:44 IST Report Abuse
Vaal Payyan சந்தனத்தை பன்னீருடன் குழைத்து பூசினால் வியர்வை நாத்தமே வராது ... கடலை மாவு , காரட் , வெள்ளரி வெண்ணை , பால் எல்லாம் சேர்த்து அரைத்து பூசினால் தோல் சுருங்காது ... எவன் கேக்கறான் .. வெளி நாட்டு எதை கொடுத்தாலும் நாம தான் வாங்கிடுவோமே ...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
01-ஜன-201319:01:58 IST Report Abuse
anandhaprasadh ஐயா ராமன் அவர்களே... ஸ்லீவ்லேஸ் முதலில் நமது கலாச்சாரத்திற்கு உகந்ததா என்று சிந்தியுங்கள்.. உடனே உங்கள் வழக்கமான பல்லவியான பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்று ஆரம்பித்து விடாதீர்கள்... இம்மாதிரியான உடைகள் பெண்களின் மதிப்பைக் குறைக்குமே தவிர ஒருபோதும் அவர்களின் மதிப்பைக் கூட்டாது... உம்மைப்போல் ஊருக்கு ஒருவர்... வேண்டாம் ஐயா... நீர் ஒருவரே போதும்... தமிழகம் திருந்திவிடும்... பெண்களை உண்மையாக மதிப்பவர்கள் மட்டும் எனது கருத்துக்கு தம்ஸ்அப் கொடுக்கவும்...
Rate this:
16 members
2 members
34 members
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
02-ஜன-201301:49:14 IST Report Abuse
GOWSALYAஆ.பிரகாஷ் நண்பரே ,நீங்க சொன்னது உண்மையே ,அதுதான் நான் உங்களுக்கு "தமஸ்அப் "" கொடுத்துள்ளேன்.பெண்களின் உடை,நடைகள் தான் அவர்களின் மதிப்பை உயர்த்துமே தவிர,ஆபாச உடைகள்,பேச்சுகள் அல்ல........ராமன் நண்பர் சொன்னாப்போல "பெண் உரிமை"" வேண்டும் ,ஆனால்,இப்படி ஆபாசமா நடந்துகொள்வதில்,பெண்களுக்கு தீமையே தவிர,நன்மையல்ல....
Rate this:
8 members
0 members
13 members
Share this comment
குட்டி chuvar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜன-201302:22:52 IST Report Abuse
குட்டி chuvarஒரு பெண்ணாக இருந்து கொண்டு பெண்களை அடிமைப்படுத்தும் உங்களை போன்றவர்களால்தான் இன்னும் பெண்கள் அடிமைத்தனத்தில் உழல்கிறார்கள். நீங்க எந்த தலைமுறையோ எனக்கு தெரியாது ஆனால் கற்காலத்தில் இன்னும் வாழ்கிறீர்கள் என்பது மட்டும் தெள்ள தெளிவாக தெரிகிறது.ஐயகோ பெண்ணடிமை பேசும் ஆண்களும் இருந்து கூட பெண்களை காப்பாற்றிவிடலாம். ஆனால் உங்களை போன்ற பெண்களிடம் இருந்து அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை.. என் செய்வேன்.. தினமும் என்னைக் காப்பாற்று ராமா என்று மன்றாடும் பெண்குலத்திற்கு என்ன பதில் சொல்வேன். என்னை மட்டும் நம்பி இவர் பெண்குலத்தை எப்படியாவது காப்பாற்றுவார் என்ற ஒரே நம்பிக்கையில் பெண்குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்க்குலத்திற்கு என்ன பதில் சொல்வேன்??குடியிருக்கும் வீட்டில் நீங்களே இப்படி குண்டுபோடலாமா? பாயாசம் சாப்பிடும் இடத்தில் இப்படி பாம் போடலாமா ?நான் ராமாவதாரம் எடுத்ததன் அர்த்தத்தையே அசைத்து பார்க்கிறீர்களே ? இது நியாயமா? இது அடுக்குமா? இதுபோல் பத்தாம்பசலித்தனம் பேசும் இல்லையில்லை நூறாம்பசலித்தனம் பேசும் உங்களை போன்ற பெண்கள்தான் பெண் முன்னேற்றத்தின் பெரும் தடைக்கற்கள். உங்களுக்கெல்லாம் பொறாமை - உங்களுக்கு கிடைக்காதது இந்தக் காலத்து பெண்களுக்கு கிடைக்கிறதே, உங்களால் செய்ய முடியாததை இந்தக் காலத்து பெண்கள் செய்கிறார்களே என்று.என்றுதான் பெண் விடுதலையின் உண்மையான அர்த்தம் உங்களைப்போன்றவர்களுக்கு புரியுமோ தெரியவில்லை.. -( சரி ராமன் சார் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவோம்னு நானே பதில் சொல்லிட்டேன். இந்த சில்லறை விஷயங்களை நாங்க பாத்துக்கறோம். நீங்க அக்குளில் முடிவளர்ப்பதின் அவசியம் / நவீன உலகில் ஸ்லீவ்லெஸின் அதிமுக்கிய பங்கு / கலாசாரத்திற்கு கல்லறை கட்டும் புதிய ஸ்லீவ்லெஸ் டிசைன்கள் என்று இந்த பூவுலகிற்கு பயனுறும் வகையிலான உங்கள் ஆராய்ச்சியை தொடர்ந்து செய்யுங்கள். இந்தியவை குறிப்பாக தமிழ் நாட்டை 21ஆம் நூற்றாண்டுக்கு முன்னேற்றிச் செல்வதில் இந்தத் தகவல்கள் மிகவும் அவசியமானவையாச்சே... டிசைன் டிப்ஸ் குடுங்க...உங்க நிறைய பேருக்கு உதவும்.) ...
Rate this:
6 members
0 members
5 members
Share this comment
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
04-ஜன-201301:50:18 IST Report Abuse
GOWSALYAதாயே குட்டிச& நான் ஒன்றும் பத்தாம் பசலியல்ல ,,,இல்லை இல்லை நூறாம்பசலியல்ல ......நான் ஒரு ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை.அத்தோடு இப்போ வசிப்பிடமும் ஐரோப்பாவில்... யாரைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் வாயில் வந்தபடி கன்னாபின்னா என்று பேசக்கூடாது....பெண்களுக்கு சமஉரிமை உண்டு....பெண்கள் எல்லாத் துறையிலும் முன்னேறனும்,இல்லையெனச் சொல்லவில்லை.அதற்காக அநாகரீகமா நடக்கக் கூடாது என்றுதான் சொன்னேன்.என்னைச் சொல்லும் நீங்க உங்க அம்மா எந்தக் காலமோ?......அம்மாடி,உடை,நடைகளில் நாகரீகம் வேணும்,ஆனால் அநாகரீகம் கூடாது....எந்தத் தாயும் தன் மகள் ,அடுத்தவா ஆத்துக்குப் போகும்போது,வரதட்ஷணையா கொண்டுபோகும் நகை பணத்தை விட தூய்மை ஆகப் போகணும் என்றுதான் கடவுளைப் பிரார்த்தனை செய்வாள்.அதற்கு நாம கொஞ்சம் மரியாதையா இருக்கவேண்டாமா?...தாலி கட்டிய கணவனுக்கே சொந்தமான உடம்பை ,கண்டவன் கெட்டவன் எல்லாம் பார்க்கப் பெண்கள் உடை அணிந்தால்,அதை என்ன ஏன்னு சொல்வது ?....பாரதியின் "' பெண்விடுதலை"" சொன்னது வேறு,நீங்க சொல்வது { உடைகள் } வேறு.....தாயி......"" தான் தான் பட்டாத்தான் தெரியும் தலிவலியும் காய்ச்சலும்"என்று சொல்வார்கள்.அதேபோல நீங்க இப்போ இளம்பெண்ணாக இருக்கீங்க,ஆனால் நீங்க தாயாகும் போதுதான் தெரியும் { அதுவும் உங்களுக்கு 2 பெண் பிள்ளைகள் பிறக்கணும் }.....பெண்களின் நாகரீகம் பேச்சிலும்,உடையிலும்,நடையிலும் பண்பிலும் இருக்கணும்.அதனால் தான் என் அன்புக் கணவருடன் { 5 வருஷம் காதலித்து } 40 வருஷம் இன்னமும் காதல் மனைவியா ஒரு குற்றம்குறை இல்லாம இருக்கேன்.{ அம்மாடி,முக்கியமா ஒன்னு சொல்லணும் ,,நான் ஒரு பட்டதாரி,என்கணவர் படித்தது 8 ம் வகுப்பு தமிழ்.}......இது எல்லாத்தையும் வாசித்துவிட்டு "' பூ இதெல்லாம் ஒரு சப்பமாட்டார் "' என்று சொன்னாலும் பரவாயில்லை.சகோதரர் ராமனிடம் பெருமளவு பணமிருக்கணும்:அதை வைச்சு எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தில் இப்படி எழுதுறாக போல......கோபமா.....வேண்டாம் மகளே..அதிகமா கோபப்பட்டால் சீக்கிரமே பாட்டியாகிடுவீங்க .......
Rate this:
2 members
0 members
13 members
Share this comment
anandhaprasadh - Bangalore,இந்தியா
04-ஜன-201317:47:44 IST Report Abuse
anandhaprasadhவெரி குட் கௌசல்யா அக்கா... குட்டிச&-க்கு நெத்தியடி... அம்மணி குட்டிச&... முதலில் சுதந்திர வாழ்க்கைக்கும் தறிகெட்ட வாழ்க்கைக்கும் இருக்கும் வித்தியாசத்தைப புரிந்துகொள்... சுதந்திரம் என்பது பாதை வகுக்கப்பட்டு ஓடும் வாய்க்கால் போல... பாதை நிர்ணயிக்கப்பட்டதால் தண்ணீரின் ஓட்டத்திற்குத் தடை என்று அர்த்தமல்ல... அது பயனைத் தரும்.... தறிகெட்ட வாழ்க்கை காட்டாற்று வெள்ளம் போல.... எதற்கும் பயன்படாது.......
Rate this:
2 members
0 members
7 members
Share this comment
Cancel
Aleem Raja - kampala,உகான்டா
01-ஜன-201315:47:47 IST Report Abuse
Aleem Raja எந்த வாசனை திரவியங்கள் பயன்படுத்தினாலும் அதை நமது நமது அக்குள் பகுதியில் நேரடியாக பயன்படுத்தாமல்,உடுத்தும் உடைகளில் பயன்படுத்தினால் நல்ல பலன் கிட்டும்.இது எனது அனுபவம்.
Rate this:
2 members
1 members
6 members
Share this comment
Cancel
empillai - chennai,இந்தியா
31-டிச-201213:19:02 IST Report Abuse
empillai MTC பஸ் டிரைவர்கள் யாருமே சென்னையில் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. சிவப்பு, மஞ்சள், பச்சை என்று வேறுபாடு எல்லாம் அவர்களுக்கு கிடையாது. ரோடில் போகும் மற்ற கார் ஸ்கூட்டர் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. போகிற போக்கில் எமன் உடைய அதிகாரபூர்வ வாகனமாக எருமைக்கு பதில் MTC பஸ்கள் மாறினாலும் ஆச்சரிய படுவதிற்கில்லை. PillaiEM, Chennai
Rate this:
1 members
1 members
4 members
Share this comment
Cancel
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
30-டிச-201216:19:13 IST Report Abuse
Rajagiri.Siva மூதாட்டியின் தொழில் யுக்தி பாரட்டுக்குறியது...வெற்றியின் ரகசியம் இதுதான்...
Rate this:
0 members
2 members
20 members
Share this comment
Cancel
Raman - Chennai,இந்தியா
30-டிச-201203:28:42 IST Report Abuse
Raman கார்த்திக் ராஜா - உங்கள் ஆசிரியர் பாராட்டப்பட வேண்டியவர். இது உண்மையாகவே நடந்தது கொள்வோம். பாலியியல் கல்வியை பள்ளிகளில் எதிர்ப்பவர்கள் இதனை படிக்க வேண்டும். ஜக்கி பாட்டிமா நல்ல வியாபார அறிவு உடையவர். முடங்காமல் மாற்று வழி தேடிய அவர் பாராட்டுக்குரியவர். ஸ்வர்ணலதா, Deodrant தவிர்க்க வேண்டிய ஒன்றல்ல. அது ஒத்து கொள்கிறதா என்று சோதித்து பார்த்துவிட்டு பிறகு உபயோகிக்கலாமே? வெளிநாடு செல்லும் எங்கள நிறுவன ஊழியர்களுக்கு சொல்லும் ஒரு முக்கிய அறிவுரைகளில் இது ஒன்று. வியர்வை நாற்றம், வாய் துர நாற்றம் இரண்டும் அவசியம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அருகில் அமர்ந்து வேலை செய்யும் பலரை முகம் சுளிக்க வைக்கும் வியர்வை நாற்றம். வியர்வை இயற்கையில் நாற்றமடிக்காது. அது நம் உடம்பை குளிர்விக்க தேவையான ஒன்று. சோப் உபயோகிப்பதால் இந்த பகுதிகளில் அமிலத்தன்மை குறையும். அதனால் நுண்ணுயிர்கள் இங்கு வளர அது வழி வகுக்கிறது. அவை வெளியிடும் கழிவு பொருட்களால் உருவாவது வியர்வை நாற்றம். அக்குள் பகுதியில் வளரும் முடி இந்த நாற்றத்தை குறைக்கும். நம்புங்கள். நவீன உலகத்தின் எதிர்பார்ப்புகள் (ஸ்லீவ்லெஸ் போன்று) இந்த deodrant ஐ அவசியமாக்குகிறது. அதனை தவிர்த்து வியர்வை நாற்றத்துடன் இருந்து மற்றவர்கள் உங்களை ஒதுக்குமாறு செய்யாதீர்கள்.
Rate this:
4 members
3 members
54 members
Share this comment
R Bhaskaran - Abu Dhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜன-201312:40:16 IST Report Abuse
R Bhaskaranஇதுல இவ்வளவு விஷயம் இருக்கா ?...
Rate this:
0 members
1 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.