அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 டிச
2012
00:00

**வி.ஜெயராமன், சென்னை: எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுவது சிறந்தது?
கொடுக்கல் - வாங்கல் விவகாரம் இல்லாதவர்களுடன் நட்பு பாராட்டுவது சிறந்தது. கொடுக்கல் - வாங்கல் இருந்தால், நட்பும் போகும், பணமும் போகும்!
***

* சா.சோலைராஜ், திண்டுக்கல்: நம் நாடு முன்னேற...
நாளொன்றுக்கு முளைக்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும். ஆளும் கட்சி, எதிர் கட்சி என, இரண்டே இரண்டு கட்சிகள் தான், நம் பாரதத்தில் இருக்க வேண்டும். மற்ற கட்சிகளை கலைத்து விட, சட்டம் இயற்ற வேண்டும். இரண்டுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் அரசு ஊழியரை, வேலை நீக்கம் செய்ய வேண்டும்; பொதுமக்களில் இரண்டுக்கு மேல் பெற்றால், அனுபவித்து வரும் எல்லா சலுகைகளையும், "ரேஷன்' உட்பட பறித்து விட வேண்டும். கட்டுப்பாடான ஜனநாயகம் வேண்டும். "சோஷலிசம்' என்ற பம்மாத்து கோஷத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.
***

** பி.ராமநாதன், சிவகாசி: பிறர் என்ன சொல்வார்களோ என்ற பயம், எதை செய்ய துவங்கும் போதும் என்னுள் எழுகிறதே...
முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும், இந்த எண்ணம் சாகடித்து விடும். முளையிலேயே முயற்சி சாகடிக்கப்படுவதால், முன்னேற்றம் எங்கிருந்து வரும். இந்த எண்ணம் கொண்டவர்கள், பிறர் பயத்திலேயே எல்லாவற்றையும் இழந்து, "அம்மா... தாயே' என பிற்காலத்தில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவர் அல்லது தற்கொலை செய்து கொள்வர்!
***

*ஏ.விவேகானந்தன், பொள்ளாச்சி: "வாழத் தெரியாதவன் நீ' என, நண்பர்கள் என்னை குறை சொல்கின்றனரே...
உங்களுக்காக உலகம் வளைந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் மேலோங்கி இருப்பதால் இப்படி கூறுகின்றனரோ!
***

*என்.சுப்புராமன், திருவண்ணாமலை: கொடிய துன்பமாக எதைக் கருதுகிறீர்கள்?
திரும்பக் கொடுக்க முடியாத கடன்! வறுமையை விட கொடியது கடன்! தூக்கத்தைக் கெடுக்கும்; மன நிம்மதியை இழக்க வைக்கும்!
***

*சே.புருஷோத்தமன், வில்லாபுரம்: பி.எஸ்.சி., பட்டதாரி நான். வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிந்துள்ளேன். டிகிரி முடித்து மூன்றாண்டாகியும் வேலை கிடைக்க வில்லை. வாழ்வில் முன்னேற துடிக்கிறேன்...
உங்களை நீங்களே நம்ப துவங்குங்கள்... வேலை வாய்ப்பு அலுவலகத்தையும், வேலைக்காக மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்தது போதும் என்ற முடிவுக்கு வாருங்கள்; தானாகவே முன்னேற்ற பாதை உங்கள் கண்களுக்குத் தெரியும்!
***

** ஜே.துரைக்குமார், திருப்பூர்: "படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை' எனச் சட்டம் கொண்டு வந்தால் என்ன ஆகும்?
அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு, "டெபாசிட்' காலியாகி விடும்!
***

*வே.சுவாமிநாதன், பல்லடம்: ஒருவன் முட்டாளாவது எப்போது?
தன்னிடம், சிரிக்க சிரிக்க பேசுபவர்கள் எல்லாம், தனக்கு வேண்டியவர்கள் என, நம்ப ஆரம்பிக்கும் போது!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anna - qatar  ( Posted via: Dinamalar Android App )
31-டிச-201217:22:49 IST Report Abuse
anna உங்கள் பதி்ல்கள் நன்றாக உள்ளது உங்கள் பணி தொடர வாழ்துகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.