அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 டிச
2012
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான் 25 வயது நிரம்பிய இளைஞன். இளநிலை பொறியியல், 2008ல், முடித்து, நான்கு ஆண்டுகள் சரியான பணிவாய்ப்பு கிடைக்காமல், தற்போது முதுநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறேன். எனக்கு உள்ள பிரச்னை, உடல் ரீதியிலானதா அல்லது மனரீதியானதா என்று புரியவில்லை. நான், அரசினர் பொறியியல் கல்லூரியில், எந்திர பொறியியல் படித்தேன். படிக்கும் காலத்தில், விடுதியில் யாரிடமும் சகஜமாக பழக மாட்டேன். அதிகமாக தனிமையில் இருப்பேன். படிப்பிலும், அந்த அளவுக்கு நாட்டம் செல்லவில்லை. பிறருடன் பழகுவதற்கு அதிகமாக கூச்சப்படுவேன். பிற்காலத்தில், இந்த பழக்கமே எனக்கு எமனாக மாறியது. சகமாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வாகி, பணி நியமனம் பெற்ற பின்பும், என்னால், ஒரு நிறுவனத்தில் கூட தேர்வாக இயலவில்லை. காரணம், கூச்சம் மற்றும் பயம்.
எனக்கு இப்போது, 25 வயது நிரம்பியிருந்தாலும், அந்த அடிப்படை சுபாவம் இன்றும் மாறவில்லை. என் உடல் மிகவும் மெலிந்து, 18 வயது பையனை போல் காட்சியளிக்கிறேன். எடை 50 கிலோ. உயரம் சராசரியாக உள்ளது. மூன்று வேளையும் திருப்தியாக சாப்பிட்டாலும், உடல் எடை கூடவில்லை. என் வயதை ஒத்த நபர்கள், இருசக்கர வாகனத்தில் சீறி கொண்டு செல்கின்றனர். எனக்கு, இருசக்கர வாகனத்தை ஓட்டவே பயமாக இருக்கிறது. இதற்காகவே, நான் மொபைட் வாங்கி வைத்திருக்கிறேன். அதிலும், 30 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்ல மாட்டேன். அதற்கு மேல் வேகமாக செல்லலாம் என்று முயற்சித்தால், என் உடல் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறேன். எனக்கு ஏற்படும் பயத்தை பற்றி, ஆன்மிக பெரியோரிடம் கேட்டபோது, "படைத்த இறைவன் மேல் பயம் ஏற்படுத்திக் கொள். உ<லக பொதுமக்களிடம் உள்ள பயம் போய்விடும்...' என்று அறிவுரை கூறினர். அதன் பின், நான் முடிந்தவரை இறைவன் மேல் பயத்தை ஏற்படுத்தி கொள்கிறேன். ஒரு நாளைக்கு, ஐந்து வேளை இறைவனை வழிபட்டாலும், என்னால் நூறு சதவீதம் முழுமையாக கவனம் செலுத்த இயலவில்லை. மனது, பல விஷயங்களை பற்றி சிந்தனை செய்கிறது; குழப்பி கொள்கிறேன்.
என்னிடம் அதிகமாக பெண்மை தன்மை காணப்படுவதாக, என்னிடம், வெளிப்படையாக பேசும் சிலர் கூறுகின்றனர். சிறிய விஷயத்தில் கூட முடிவு எடுப்பதில் மிகவும் தடுமாறுகிறேன். அமைதியாக, ஒரு இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்யும் போது கூட, என் இதயம் துடிப்பதை உணர முடிகிறது. ஒரு காரியத்தை, தனியாக செய்யும் போது சிறப்பாக செய்யும் நான், மற்றவர்கள் பார்க்கும் போது தடுமாறி விடுகிறேன். இதயம் வேகமாக துடிப்பது போல் உணர்கிறேன்.
ஆனால், நான், இரண்டு வருடம் ஆசிரியர் பணியில் இருந்த போது, என்னுடைய மாணவர்கள், சக ஆசிரியர்கள், முதல்வர் உட்பட அனைவரும், என்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஆசிரியர் பணியில் எனக்கு ஏற்பட்ட பணி திருப்தியின் காரணமாகத்தான், இதே துறையில், என்னை மெருகேற்றி கொள்ள முதுகலை பொறியியலை வேறொரு அரசினர் பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன். எனக்குள்ள பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்களில் இருந்து முழுமையாக மீண்டு, நம்பிக்கையுள்ள இளைஞனாக, வாலிபனாக தந்தையாக வர முயற்சிக்கிறேன். இதற்காக, தங்களின் ஆலோசனையை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் மகன்.


அன்புள்ள மகனுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. விவரம் அறிந்தேன்.
ஏற்கனவே, பயத்துடன், தாழ்வு மனப்பான்மையுடன் சிறு பையன் போன்ற திரேகத்துடன் கூச்ச சுபாவத்துடன் கூடிய உன்னை, மிதமிஞ்சிய இறையச்சம் மேலும், பலவீனன் ஆக்கிவிட்டது. மறுமை பற்றிய கனவில், இம்மையை கோட்டை விடுகிறாய். நியாயமான வெற்றிகள், நியாயமான சந்தோஷங்கள் இம்மைக்கு அவசியம் தேவை. இருபத்தியைந்து வயதிலும், நீ பதினெட்டு வயது உடலமைப்பை பெற்றிருப்பதற்கு, மரபியல் காரணம் இருக்கலாம். உன் பாட்டனார், உன் தந்தையின் உடல்வாகு உனக்கு அமைந்திருக்கும்.
உன்னிடம் அதிகம் பெண்மைத்தன்மை காணப்படுகிறது என கூறியிருக்கிறாய். நான்கைந்து சகோதரிகளுடன் பிறந்து, வளர்ந்த கடைக்குட்டி தம்பியாய் நீ இருக்கக் கூடும். ஒரு காரியத்தை தனியாக செய்யும் போது, சிறப்பாக செய்யும் நீ, மற்றவர்கள் பார்க்கும் போது, சொதப்பி விடுகிறாய். நாம் செய்யும் காரியம், தவறாய் போய், பிறர் இழித்து, பழித்து பேசிவிடுவரோ என, தேவையில்லாமல் பயப்படுகிறாய்.
சிறிய விஷயத்தில் கூட, முடிவெடுக்க திணறுகிறாய். சரியான முடிவுகள் எடுப்பது, தலைமைப் பண்புக்குரியது. அந்த தலைமைப் பண்பு உன்னிடம் மிஸ்சிங். உனக்குள்ள பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க அடுத்தடுத்து, நீ என்னன்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ஆண்மை ததும்பும் விதமாய், உன் ஆடை அணிதலும், மேனரிசங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும். முகத்தில் மிடுக்கையும், கம்பீரத்தையும் பேரரசனுக்குரிய வீரத்தையும் குழைத்துப் பூசிக் கொள். வெளிப்படையாக எல்லாரிடமும் பேசி பழகு. எந்த காரியம் செய்தாலும், முழு முனைப்போடும், அர்ப்பணிப்போடும் செய். பிறரின் அபிப்பிராயங்களை பற்றி கவலைப்படாதே. இறைவனின் மீது பாரத்தை போட்டு, எந்த விஷயத்திலும், முடிவெடுக்க பழகு. பத்து முடிவில் எட்டு முடிவுகள் சரியாக இருந்தால், போதுமானது.
இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறாய்; மாணவர்களும், சக ஆசிரியர்களும் உன் மீது மரியாதை வைத்திருக்கின்றனர். அதனால், உனக்கு பணி திருப்தியும் கிடைத்திருக்கிறது. எல்லாரிடமும் வெளிப்படையாக பேசிப் பழகும் குணத்தை பெற்றாய் என்றால், உன் ஆசிரியத் தொழில், இன்னும் சிறக்கும். உன் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பை ஆரவாரமாய் முடிப்பாய்.
இருசக்கர வாகனத்தில், அசுரவேகத்தில் செல்வது விவேகமல்ல. 30 கி.மீ., வேகம் பாதுகாப்பானது. தாறுமாறாய் ஓட்டி தான், உன் ஆண்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை.
அறவே பய உணர்வு இல்லாமல் இருப்பதும் நல்லதல்ல. அஞ்சுவதற்கு அஞ்சுதல் தேவை என்கிறது திருக்குறள். நீ சிறந்த ஆசிரியனாக எதிர்காலத்தில் திகழப் போவதும், இறைவனுக்கு செய்யும் சிறப்பான தொண்டுதான். இறைபக்தி, இடைவிடாத கடின உழைப்பு, எல்லைமீறாத தன்னம்பிக்கை, துணிச்சல், நேர்மை இவற்றை, உரிய விகிதத்தில் கலந்தால், இம்மையிலும், மறுமையிலும் வெற்றிதான்.
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan Arunachalam - DELHI,இந்தியா
02-ஜன-201313:14:49 IST Report Abuse
Narayan Arunachalam உங்களுக்கு உடல் ரீதியாக பிரச்சினை உள்ளது என்று நினைப்பதால் மன ரீதியிலானா பிரச்சினையும் அதிகமா இருப்பது போல தெரிகிறது.. உடல் ரீதியிலான பிரச்சினைக்கு சிலர் இங்கு ஆலோசனை கூறி இருகிறார்கள்.. நல்ல உடற் பயிற்சி மடதுக்கும் நல்ல பயிற்சியாகும்.. மன ரீதியிலான பிரச்சினைக்கு சில வழி முறைகள்...1) தங்கள் மீது நல்ல எண்ணம் கொண்ட சிலரிடம் உங்கள் தொடர்பை விரிவு படுத்தவும் 2) நிறையா மற்றும் நன்கு படிக்கவும்.. தங்கள் படிப்பு சம்பந்தமாக மட்டும் அல்லாமல்.. பொது அறிவையும் வளர்த்து கொள்ளவும்.. இது மிக மிக அவசியம்.. அப்பொழுது தான் பலருடன் பல விஷயங்களை பற்றி விவாதிக்க முடியும்.. 3) என்னால் முடியாது என்ற என்னத்தை விட்டு.. 100cc பைக் வாங்கி ஓட்டும் வசதி இருந்தால் முதலில் அதை செய்யவும்.. 4) ஆசிரிய பணிக்கு முதுகலை பட்டம் மட்டும் போடாது.. இப்பொழுதே எந்த pirivil ஆராய்ச்சி செய்யலாம் என்று யோசித்து அதற்கான வேளைகளில் இறங்கவும்..உங்கள் துறை சம்பந்தப்பட்ட சம காலத்திய developments என்ன என்று அறிய muyarchikkavum...5) ஆண்களிடம் மட்டும் அல்லது.. பெண்களிடமும் பழகவும் ( ஒரு வரை முறையோடு..) 6) மற்றவள் என்னை பற்றி என்ன நினைகிறார்கள் என்று சிந்திக்கும் முன்.. உங்களை பற்றி நீகள் ஏன் எதிர் மறையாக நினைகிறீர்கள் என்று சிந்திக்கவும்... இறுதியாக சொல்ல போனால்.. சுய ஆளுமை மற்றும் ஆளுமை என்பது புற தோற்றத்திலும் முக்கியம் அக தோற்றத்திலும் முக்கியம்... Ungalidam ulla நல்ல panbu / uyarndha gunam எது என்று kandarindhu அதனை மேலும் செம்மை படுத்தவும்.. உங்களை patriya உங்கள் கண்ணோட்டம் தானாகவே உயரும்.. இங்கு சொல்லப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் இதை செய்யுங்கள்/ அதை செய்யாதீர்கள் என்ற முறையிலே இருந்தாலும்.. தங்களுக்கு எது பொருந்தும் என்று அறிந்து செயல் பாடவும்.. மிக முக்கியமான ஒன்று.. " என்னால் முடிய வில்லை " என்ற சுய பச்சாதாபத்தை ( self pity ) விட்டு வெளியே வர வேண்டும்.. இல்லையேல் அதிலேயே மூழ்கி இன்பம் காண ஆரம்பித்து விடுவீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
Ganapathy Kannan - Singapore,சிங்கப்பூர்
02-ஜன-201312:16:54 IST Report Abuse
Ganapathy Kannan Krishnan (Sarvam Krishnaarpanam....) பெண்களுக்கு காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்கவேண்டும். இரவு 9 மணிக்குமேல் வீட்டிற்கு வெளியே அனுப்பக்கூடாது.... - காலாகாலத்தில் திருமணம் என்ற தங்கள் கருத்து, பெண்கள் தங்கள் வாழ்க்கையில், தங்கள் கால்களில் தன்னம்பிக்கையுடன் நிற்கும் அளவுக்கு கல்வி கற்றபின், திருமணம் செய்து வைக்கலாம் என்று பொருள் தருமானால், அது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் கணவன் என்ற ஒரு ஆணின் கைகளை எதிர்பார்த்து மட்டுமே அவள் வாழலாம் என்னும் அர்த்தம் கொண்டிருந்தால், அது சரியல்ல என்பதே என் கருத்து. அதே நேரத்தில் பாலியல் இச்சைகளால், ஊர்சுற்றித் திரியும் பெண்களும் இங்கு உள்ளார்கள்தானே. அவர்களுக்கான கருத்து அது என்றாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. இன்றுள்ள ஆண் காப்பாற்றுவான் கட்டிய மனைவியை என்ற எண்ணத்தினால், பெண்ணின் கல்வியைத் தடைசெய்து திருமணம் செய்வது ஏற்றுக் கொள்ள இயலாததே. இரவு 9 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியே அனுப்பக் கூடாது என்பதும் அவ்வளவாக பொருந்தாத ஒன்றுதான். சென்னை போன்ற பெருநகரங்களில், அண்ணா சாலையில் வேலைசெய்யும் பெண், 8 மணிக்கு பணியை முடித்து, தாம்பரத்துக்கோ, செங்கல்பட்டுக்கோ, அல்லது வட சென்னைப் பகுதிக்கோ செல்ல வேண்டுமானால், அது சாத்தியப் படுமா. வீட்டில் இருக்கும் பெண்ணாணால் தான் அது சாத்தியம். ஆனால் இரவு நேரத்தில், வெறி பிடித்த ஓநாய்களிடம் துன்பப் பட்டுவிடக் கூடாதே என்றே தாங்கள் சொன்னதாக நான் கருதுகிறேன். "அந்த பெண், ஒரு ஆண் துணையுடன் இரவு 11 மணிக்கு சென்றிருக்கிறாள். அது அவளுடைய முதல் தவறு. கூட்டமில்லாத பேருந்தில் ஏறியது, இரண்டாவது தவறு." - இந்தக் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. டெல்லி போன்ற பெருநகரங்களில் 10.30 அல்லது 11.00 மணி என்பது அகால நேரம் என்று சொல்ல முடியாது. முதல் காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு, குடியிருக்கும் இடத்துக்கு, பேருந்துக்கு காத்து நிற்கையில், அந்த நேரம் வந்து விடும். 11 மணிக்கு பேருந்துக்கு நின்றதையே நாம் தவறு என்றால், கால் சென்டர்களில் வேலை செய்யும் பெண்கள், இன்னும் அகால நேரத்தில் நடமாட வேண்டி உள்ளதே அவர்களையேல்லாம் , இந்த நாய்கள் தூக்கிக் கொண்டு போய், வன்புணர்வு செய்வதையே தொழிலாக் கொள்ளுமா. அதை நாம் நியாயப் படுத்த முடியுமா. இது போன்ற ஆணாதிக்க வெறிநாய்களுக்கு, சட்டம் நம்மைச் சும்மா விடாது என்ற பயம் இருந்தால், குற்றத்தின் சதவீதம் சற்றுக் குறையலாம். இங்குதான் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, பணத்தால் சட்டத்தை வளைத்து விடலாம் எனும் நிலை இருக்கும் போது, பெண்ணைத் தொட நினைப்பவனுக்கு எப்படி பயம் வரும். தனிமனித ஒழுக்கத்தை வளர்ப்பதில் நம் குடும்பங்கள் மற்றும் சமுதாயமும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்று சட்டமும் உறுதியுடன் இருந்தால்தான் காலப்போக்கில் மாற்றம் காணலாம். ஆண் சிறுவனாக இருக்கும்போதே, அவனுடைய பெற்றோர் அவன் பெண்களை மதிக்கும் எண்ணம் கொண்டிருக்குமாறு வளர்க்க வேண்டும். வீட்டில் அவன் பெண்களை மதிக்கத் தொடங்கினால், நாளை அவன் சமுதாயத்தில் கலந்துகொள்ள வரும்போது, வெளியேயும் அவர்களை மதிப்பான். நாங்கள் அருகாமையில் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்யும்பொழுது, குறிப்பிட்ட சில நகரங்களில், அங்கு வசிக்கும் நண்பர்கள், இரவு நேரத்தில் 9 மணிக்குமேல், வெளியே நடமாடாதீர்கள். பாதுகாப்பு இருக்காது என்று சொல்வார்கள். நாங்களும் அதுபோலவே குறிப்பிட்ட நேரத்துக் மேல் அங்கே வெளியே செல்வதில்லை. அது நம் சுய பாதுகாப்புக்கு. ஆனால் வெளியே சென்று ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், துன்பம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தானே. அது போலவே பெண்கள் இரவில் வெளியே செல்ல வேண்டாம் என்று தாங்கள் சொன்னதாக நான் நினைக்கிறேன். ஆனால் அவசியம் வெளியே நடமாடத்தான் வேண்டும் என்ற நிலை உள்ளபோது, நாம் நடமாடும் நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியது யார். அரசும், காவல்துறையும் தானே. ஒவ்வொரு மனிதருக்கும் பின்னால் ஒரு காவல்துறை வீரர் வர இயலாது. ஆனால் குற்றவாளியை, மிக எளிதாக குற்றம் செய்ய ஊக்கம் அளிப்பதாக சட்டம் மற்றும் காவல் அமலாக்கம் இருக்க் கூடாதல்லவா. "இரவில், காமம் தலைதூக்குவது இயற்கை. அந்த நேரத்தில், நவ நாகரிக ஆடை உடுத்தி ஒரு பெண் சென்றால், ஆண்களின் எண்ணம் தவறாகத்தான் செல்லும்."- தயவுசெய்து இதுபோன்று நாம் யாரும் நம்மை சமாதானப் படுத்திக் கொள்ளக் கூடாது. மனைவி வீட்டில் இல்லாத இரவு நேரத்தில், இது போன்ற விலங்குகளுக்கு, வீட்டில் உள்ள தாய், சகோதரிகளைப் பார்த்தாலும், தவறு செய்யத் தோன்றுமா என்ற கேள்விக்கு விடை சொல்லுங்கள். ஆபாச ஆடை, ஆபத்தை தானே வரவழைக்கிறது என்பது ஒருவிதத்தில் உண்மையாக இருந்தாலும், குழந்தைகளும், சிறுமிகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறார்களே அவர்கள் என்ன ஆபாச ஆடை அணிந்தார்கள். இந்த இடத்தில் தான் சட்டம் தன் இரும்புக் கரத்தை, இதுபோன்ற மனித மிருகங்களுக்கு நினைவு படுத்தும் நிலையில் இருக்க வேண்டும். ஆனால் ஆடை நம் மதிப்பை நிர்ணயிப்பதிலும், மற்றவர்களை நம் மிக அருகில் நெருங்குவதற்கோ அல்லது நெருங்காமல் இருப்பதற்கோ பெரும் பங்கு வகிப்பதையும் யாரும் மறுத்து விட முடியாது. இங்கு கருத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. தாங்கள் பெற்ற பெண்களின் பாதுகாப்பில் நாட்டம் உள்ள அனைவரும் தாங்கள் நினைத்தது போல் நினைக்கலாம். மற்றவர்கள் அந்தக் கருத்தில் இருந்து மாறுபடலாம். அதற்காக திரு. ராமன் சொல்லும் "இது போன்ற ஆணாதிக்க அறிவிலிகளை அவர்கள் வீட்டு பெண்கள் எதிர்த்து நிற்க வேண்டும். இந்த பெண்ணின் மரணம் இது மாதிரியான ஆட்களை போதனை செய்ய தூண்ட கூடாது. நேரடியாக குற்றம் புரிபவகளை விட இது மாதிரி ஆசாமிகள் பயங்கர வாதிகள். இதில் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று .... ஒரு வேளை பிடதி ஆசாமியோ?..." இந்தத் தனி மனிதத் தாக்குதல் சரியானதாகத் தோன்றவில்லை. இங்கு நாம் எல்லோரும் அறிவிலிகளே. ஒவ்வொருவரும் அவரவர் கருத்தில் உறுதியாக இருக்கிறார்கள். சிலர் பிறர் கருத்தின் நியாயம் உணர்ந்து, அதை ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது, கருத்துச் சொன்னதற்காக, வசை பாடுவது சரியானதல்ல. மகள் இதுபோன்ற துன்பம் அடைந்தால், கண்ணீர் சிந்தி நிற்கப் போவது, தந்தை, தாய் மற்றும் முழுக் குடும்பமுமே. அதற்காக அவர்கள் தன் மகளைக் காக்க சில யோசனைகளைச் சொன்னால், அவர்கள் மேல் புழுதியை வாரி இறைப்பதில் ஏதும் நியாயம் இருக்கிறதா என்ன ? - அன்புடன் கண்ணன்
Rate this:
Share this comment
Tamilarasi - Coimbatore,இந்தியா
05-ஜன-201303:01:58 IST Report Abuse
TamilarasiSuper apart from this no words மகள் இதுபோன்ற துன்பம் அடைந்தால், கண்ணீர் சிந்தி நிற்கப் போவது, தந்தை, தாய் மற்றும் முழுக் குடும்பமுமே. அதற்காக அவர்கள் தன் மகளைக் காக்க சில யோசனைகளைச் சொன்னால், அவர்கள் மேல் புழுதியை வாரி இறைப்பதில் ஏதும் நியாயம் இருக்கிறதா என்ன ? ellent. You are really lovable...
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
01-ஜன-201302:11:59 IST Report Abuse
GOWSALYA எல்லா,+ எல்லா விதத்திலும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை....என்று தான் சொல்லணும்......இதற்குமேலும் சுதந்திர நாளைக் கொண்டாடினால்,அபத்தமே.........யாரும் என்மேல கோபம் கொள்ளவேண்டாம்.........நன்றி........ஆசிரியர் + தினமலர் பணிப்பாள சகோதரர்கள் + கருத்துகளின் நண்பர்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....வரும் புத்தாண்டு 2013 எல்லோருக்கும் ஒரு நல்லாண்டாக இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்கப் பிரார்த்திப்போம்.
Rate this:
Share this comment
Venkat Venkatesan - chennai,இந்தியா
05-ஜன-201307:41:31 IST Report Abuse
Venkat Venkatesanகௌசல்யா, உங்க ஆதங்கம் புரியிது, ஒன்னு நீங்க இப்ப இருக்குற சமுதாய அமைப்பால எதோ ஒருவகைல பாதிப்படஞ்சுருக்கணும், இல்லைன்னா, உங்களால மத்தவங்க போல சராசரியா, எஞ்ஜாய் பண்ண முடியாம இருக்கணும்னு நா நெனக்கிறேன். நம்மள மாதிரி ஆளுங்களுங்களோட ஆக்கபுர்வமான சேவைக்காகதான், இந்த சமுதாயம் ஏங்குது கௌசல்யா, இந்த பாசிட்டிவ் ஆங்கிள்ல பாத்தா, ஒரு நேரத்துல இருக்குற அமைப்பு சரியாதான் இருக்கோங்கிற சந்தேகமும் வர்றது யதார்த்தம், ஆனா அப்டியும் சொல்ல முடியாது, சரியான முறைல யோசிச்சு, விவாதிச்சு களத்துல இறங்க வேண்டியிருக்கு... அதான் உண்ம.. ...
Rate this:
Share this comment
Cancel
A.Mansoor Ali - Riyadh.Athika.,சவுதி அரேபியா
31-டிச-201212:10:45 IST Report Abuse
A.Mansoor Ali அன்பு தம்பிக்கு நீ யாக குழம்பி கொள்கிறாய்..வேறு ஏதும் இல்லை..நீ எனக்கு போன் செய் விளக்கம் தருகிறேன்..00966-509150390.
Rate this:
Share this comment
Cancel
Raman - Chennai,இந்தியா
31-டிச-201200:33:49 IST Report Abuse
Raman இந்த பெண்ணின் (மாணவி, இளம் பெண்) மரணம், அதுவும் 23 வயது பெண் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண்ணை பெற்றவர்கள் எல்லோரும் வெகுண்டு எழ வைத்த நிகழ்வு இது. அதனால் கருத்து எழுத கூடாது என்று இருந்தேன். ஏனெனில் அது கோபத்தில் தோன்றிய ஒரு கருத்து ஆக இருக்கும். நிதானமற்ற பழிக்கு பழி என்ற எண்ணமே மிகுந்திருக்கும். பெண்கள் இந்த கடந்த தலைமுறையில்தான் வெளியில் வந்து முன்னேற துவங்கி உள்ளனர். கல்வி அறிவு பெற்று. பொருளாதார சுதந்திரம் பெற்று. தங்கள் வாழ்க்கையை ஒரு ஆண், ஆண் சார்ந்த ஆதிக்க சமூகம் என்றில்லாது இருக்க முயன்று வருகிறார்கள். மீடியா, அத்துடன் இத்தகைய முன்னேற்றத்தை தங்கள் குழந்தைகளுக்காக வரவேற்க்கும் பெற்றோர், அரசின் விளம்பரங்கள், இவை நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதே நேரம் பாலியியல் வன்கொடுமை என்பது காலம் காலமாக இருக்கும் ஒன்று. தம் பலத்தை காட்டவும், பெண்களை ஒடுக்கவும் இது பயன்பட்டது. (ஏனெனில் அதில் பாதிக்கப்படுவது அவர்கள்தான்). அன்று, ஆண் பொருள் ஈட்டவும், பெண் குழந்தை பெற்று பராமரிக்கவும் என்று இருந்தனர். ஆணை, பொருளாதார ரீதியாக, சார்ந்து பெண் இருக்க நேரிட்டது. அதனையே கலாசாரம் என்று மூளை சலவை செய்து பல நூற்றாண்டுகள் அவர்களை அடிமைகளாக, சார்ந்து இருப்பவர்களாக (depe_ndent) இருக்க வைத்தனர். மேலும் பெண்கள் இனவிருத்திக்கு தேவையானவர் என்பதால், அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். அது மெதுவாக அவர்களை பலவீனமாக்கியது உண்மை. விலங்கினங்களில் பெண், தாய் ஆனவள் ஆணுக்கு சற்றும் குறையாதவளாக இருப்பாள். சில கொரில்லா கூட்டத்தில் பெண்களே உணவு ஈட்டுவது முதல் எல்லா வேலைகளையும் செய்வார்கள் . ஆண் ஆனவன் வெறும் விந்தனுவிற்கும் பாதுகாப்பிற்கும் மட்டுமே இருப்பான் . இதனை ஏன் சொல்கிறேன் என்றால் அது மனித இனத்திலும் இருக்கிறது. ஆனால் இங்கு பெண்களுக்கு தடைகள் அதிகம். அதனை சமமாக்கி முன்னேற முயன்ற அவர்களை ஆண் சமூகம் பல நூற்றாண்டுகளாக அடக்கி ஆண்டு இருக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளில் இருந்து வெளிவர தொடங்கியது இந்த தலைமுறையினர்தான். அந்த வளர்ச்சியை பொறுக்க இயலாத ஆதிக்க, பழமைவாத இயக்கங்கள் (கலாசார காவலர்கள் என்ற பெயர் இவர்களுக்கு உண்டு) அதன எதிர்ப்பை பல்வேறு முறைகளில் காட்டி இருக்கின்றன. ராம் சேனா - சுதந்த்திரமாக இருக்கும் பெண்களை பயமுறுத்தி அடக்குவது. கல்லூரி முதல்வர்கள் உடை கட்டுபாடு என்று மிரட்டி அவர்களை அடக்குவது இவை ஒரு வகை என்றால், காவல் நிலையங்கள் கற்பழிப்பு (அட காவலர்களே இதனை செய்கிறார்களே என தைரியமூட்டும்), தலிபான் அமைப்பு போன்று கல்வி மறுப்பு இவையும் அடக்கம். குடும்ப மானம் என்று கௌரவ கொலைகள் (சாதி பெயரால் இருந்தாலும் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள்) வேறு. பாகிஸ்தானில் gang-rape செய்யப்பட்ட பெண்ணின் குற்றவாளிகளை அவர்கள் செய்தது சரியே என்று தீர்ப்பளித்தது இவை எல்லாம் இந்த வளர்ச்சியை கண்டு மிரண்ட ஆண் சமூகம் செய்ததது. அத்தகைய செயல்களை சட்டமும் சமூகமும் தண்டிக்காது விட்டது, விடுவது - அது சரியான செயல் என்று ஏற்க்ப்பட்டதற்கு சமம். ஒரு பெண் பாலியில பலாத்காரம் செய்யப்பட்டால் அவளை இழிவுபடுத்தி பேசுவது, அவளை குற்றமானவள், "அப்படிப்பட்டவள்" என்று புறக்கணிப்பது என்று பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்பிற்கு உல்ளகாக்குவது இவை எல்லாமே நாம் செய்து கொண்டிருக்கும் அநாகரிக செயல்கள். அதில் பெருமை வேறு. பள்ளிக்கு செல்லும் பெண் சிறார்களை பஸ்ஸில் தொந்தரவு செய்தல், இடித்தல் போன்றவை ஏற்கப்படுகிறது. சினிமா போன்ற வெகு ஜன ஊடகங்களில் அது heroism என்று மிகைப்படுத்தப்படுத்தப்பட்டு பாராட்டப்படுகிறது. ஒரு பத்து வயது சிறுவன் அதனை பார்த்தால் - அட அடுத்த வீட்டு பெண்ணின் சட்டையை பிடித்து இழுத்தால் நாமும் ஒரு என்று எண்ண விழைகிறான். . கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட அரசியல் வாதிகள் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவர்கள், (மேலை நாட்டில் sex scandal உருவானால் அந்த ஆளின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிடும் - இங்கோ ஆரம்பமாகும்). கற்பழித்த ராணுவ அதிகாரி ஜனாதிபதி விருது பெறுபவர்கள் என்றிருந்தால் இளம் சமுதாயம் என்ன நினைக்கும்? பெண்களை கற்பழித்தால் பாராடப்படலாம் என்றல்லவா? இது எல்லாம் நடக்கும் வரை இந்த கொடுமை ஒழிய வாய்ப்பில்லை. அரசியல்வாதிகளையும், காவல் துறையினரையும் நம்பி பிரயோசனமில்லை. ஏனெனில் அவர்கள் தான் இதில் அதிகம் ஈடுபடுகிறார்கள். பிரதியுஷா என்ற நடிகை இறந்தது அறிந்து இருப்பீர்கள். ஒரு பிரபல நடிகையே எதிர்க்க ஆதரவின்றி மரித்தார் எனில் ஒரு சாதாரண குடிமகன் என்ன செய்ய இயலும் ? பண பலம், அதிகார பலம் இவற்றை எதிர்க்க முடியாத இயலாமை வேறு. இதற்கு அடிப்படையில் நாம் மாற வேண்டும். சட்டம் மாற்றாது. தண்டனை மாற்றாது (இன்றும் ஆயுள் தண்டனை என்ற சட்டம் இருந்தும் கற்பழித்த ஒரு ராணுவ அதிகாரி ஜனாதிபதி விருது பெறுகிறார் ). பெண்களை இதனை கொண்டு மீண்டும் அடக்க முற்படுவர். வீட்டில், இருட்டினால் பூட்டி வைக்க வேண்டும், படிப்பை குறைக்க வேண்டும். ஆண் நண்பர்கள் கூடாது. காதல் கூடாது. சுதந்திரம் கூடாது. வீட்டிற்கு யாரேனும் வந்தால் பின்னறையில் ஓடி ஒளிய வேண்டும் என்று. அதனை தடுக்க வேண்டும். இந்த நிகழ்வையும் மீறி அவர்களை முன்னேற்ற உதவ வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு முறைகளை கற்று தரலாம். அதனை விட பள்ளிகளில் அவர்களை மதிக்க கற்று தர வேண்டும். பாலியல் கல்வி, ஆண்-பெண் சமமாக பழக அனுமதிப்பது, பெண்களை போக பொருளாக சித்தரிக்காமல் இருப்பது - அதனை ஆதரிக்காமல் இருப்பது - இவை அடுத்த தலைமுறையேனும் பாதுகாப்பாக வசிக்க உதவும். அடுத்து, சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளை - இம்மாதிரி குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை தேர்ந்தெடுக்க மறுக்க வேண்டும் - அவர் உங்கள் சாதி, உங்கள் கட்சி ஏன் உங்கள் உறவினராக இருந்தால் கூட. இவை எல்லாம் கனவே. நடைமுறையில் பெண்களுக்கு தற்காப்பு முறை கற்று தரலாம். எதிர்த்து நிற்கும் துணிவு தரலாம். பாதிக்கப்பட்ட பெண்களை இழிவாக பேசாமல் ஆதரிக்கலாம். எதிர்த்து நிறக நிதியுதவி செய்யலாம். அவர்களை துன்புறுத்துபவர்களை எதிர்க்கலாம். அடுத்த முறை பஸ்ஸில் ஒரு பெண் இடிக்கப்பட்டால் தட்டி கேட்க விழையவும். பெண்ணை தரக்குறைவாக பேசுவதை நிறுத்தலாம். அவர்களை பலவீனமானவர்கள் என்று கூறாமல் ஆதரவளிக்கலாம். ஊக்குவிக்கலாம். Random acts of violence can not be prevented. That is real life fact. A free country like US has 83000+ forcible rape convictions in a year. That is a country where women are free. But that does not push them back to middle ages. I am just worried that society using this as an excuse will start imposing restrictions and push the progress back by decades. We are witnessing this in PMK Leader Ramadoss activities/claims/declarations on how they have to protect their "women". I hope and pray that we don't go the wrong way.
Rate this:
Share this comment
villan - chennai,இந்தியா
03-ஜன-201306:21:11 IST Report Abuse
villanநீங்கள் சொல்வது சரி..உடை சுதந்திரம் என்ற பெயரில் ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் உடைகள் அணிகின்றனரே..இதையும் நீங்கள்??????...
Rate this:
Share this comment
Narayan Arunachalam - DELHI,இந்தியா
03-ஜன-201313:24:13 IST Report Abuse
Narayan Arunachalamதவறான கேள்வி அசோக்.. பெண்ணின் உடைகள் மட்டுமே ஆணின் உணர்ச்சியை தூண்டும் என்பது ஏற்கமுடியாத வாதம்.. மேலும் இங்கு உடை சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை... நாம் யார் அவர்களுக்கு சுதந்திரம் தருவதற்கு.. பெரும்பாலான ஆண்கள்.. திரண்ட மார்புடனும் ( வீட்டில் இருக்கும்போது) அல்லாத மற்ற இடங்களில் பெண்களை கவரும் விடுவதில் உடை அணிவதில்லையா? இதனால் பெண்களின் உணர்ச்சி தூண்டப்படாது என்று உங்களால் சொல்ல முடியுமா? பெண்கள் அப்படி உடை அணிந்தாலும்.. உங்கள் கண்கள் ஏன் அங்கு செல்ல வேண்டும்? இன்றைய சமூகத்தில்.. அதிகமான பிரச்சினைகளின் அடிப்படையே ஒரே ஒரு விஷயம் தான்... அது.... 1) பெண்ண என்பவள் ஒரு போகப் பொருள் 2) ஆண்கள் அவர்கள் மீது உரிமை கொண்டாட முடியும் 3) ஆண்கள் கொடுத்தால் தான் அவர்களுக்கு சுதந்திரம்..இந்த மாதிரியான மனப்போக்கு மாறும் பொது.. அவர்களும் நமக்கு சமம் ஆனவர்களே.. எல்லா விஷயங்களிலும் மற்றும்.. அவர்களது வாழ்கை முறையை வகுத்து கொள்ளும் அளவிற்கு நாம் அவர்களுக்கு உரு துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது... அவர்கள் மீதான கொடுமைகள் தானாக குறையும்...
Rate this:
Share this comment
Cancel
praven.dr@gmail.com - UK,யுனைடெட் கிங்டம்
30-டிச-201216:39:44 IST Report Abuse
praven.dr@gmail.com Now, improving your body language can make a big difference in your people ss, attractiveness and general mood. There is no specific advice on how to use your body language. What you do might be interpreted in several ways, deping on the setting and who you are talking to. You’ll probably want to use your body language differently when talking to your boss compared to when you talk to a girl/guy you’re interested in. These are some common interpretations of body language and often more effective ways to communicate with your body. First, to change your body language you must be aware of your body language. Notice how you sit, how you stand, how you use your hands and legs, what you do while talking to someone. You might want to practice in front of a mirror. Yeah, it might seem silly but no one is watching you. This will give you good feedback on how you look to other people and give you an opportunity to practise a bit before going out into the world. Another tip is to close your eyes and visualize how you would stand and sit to feel confident, and relaxed or whatever you want to communicate. See yourself move like that version of yourself. Then try it out. You might also want observe fris, role models, movie stars or other people you think has good body language. Observe what they do and you don’t. Take bits and pieces you like from different people. Try using what you can learn from them. Some of these tips might seem like you are faking something. But fake it til you make it is a useful way to learn something new. And remember, feelings work backwards too. If you smile a bit more you will feel happier. If you sit up straight you will feel more energetic and in control. If you slow down your movements you’ll feel calmer. Your feelings will actually reinforce your new behaviours and feelings of weirdness will dissipate. In the ning easy it’s to exaggerate your body language. You might sit with your legs almost ridiculously far apart or sit up straight in a tense pose all the time. That’s ok. And people aren’t looking as much as you think, they are worrying about their own problems. Just play around a bit, practice and monitor yourself to find a comfor balance. You can learn much more about improving your social life and relationships in Simplicity course (there is a written guide a social ss workbook included in that course) and in The Power of Positivity.
Rate this:
Share this comment
Cancel
Rajagiri.Siva - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
30-டிச-201216:36:30 IST Report Abuse
Rajagiri.Siva உடற்பயிற்சியும், மனபயிற்சியும் மேற்க்கொண்டால் கண்டிப்பாக பயனை தரும்...
Rate this:
Share this comment
Cancel
De V - tirunelveli,இந்தியா
30-டிச-201211:55:17 IST Report Abuse
De V ஒரு நண்பன் ஒரே ஒரு நண்பன், உனக்கு தந்தையாக, தாயாக மேலும் இந்த உலகில் உள்ள பல முக (மனைவியை தவிர ) உறவுகளை ஒரு முகத்தில் உனக்கு தருபவனாக ஒருவனை தேடி பிடி மேலே சொன்ன அனைத்து பிரச்சனையும் தீரும். மணி.ப , நெல்லை
Rate this:
Share this comment
Cancel
Arvind - Raleigh,யூ.எஸ்.ஏ
30-டிச-201211:34:49 IST Report Abuse
Arvind இளைன்ஜெர் டேச்டோச்டோர்னே மற்றும் தைரொஇட் டெஸ்ட் செய்து கொள்ளவும். Better consult with ocrinologist.
Rate this:
Share this comment
Cancel
PR Makudeswaran - madras,இந்தியா
30-டிச-201209:49:27 IST Report Abuse
PR Makudeswaran யாரிடமும் பழகாமல் பேசாமல் இரண்டு வருடம் ஆசிரியர் பணி எப்படி.? நல்ல ஆசிரியர் என்ற பாராட்டு ?. எனக்கு புரியவில்லை. சீரான உடற்பயிற்சியும் நல்ல உணவு பழக்கமும் நாளடைவில் கட்டுக்கோப்பான உடல் வாகை தரும்.. பக்க விளைவுகள் இல்லை என்று உறுதி செய்துகொண்டால் ஹார்மோன் ஊசிகள் சரிதான்.ஆனால் எல்லாவற்றிற்குமே ஆங்கில மருந்துகள் நிரந்தர தீர்வை தருவது இல்லையே. எல்லோரிடமும் கூடி பேசி பழக முயல வேண்டும்.நல்லதை நினைத்து நல்லதை செய்தால் இறைவன் நல்லவிதம் முடித்துவைப்பான்.அதில் அச்சம் வேண்டாம்.எப்படி முடியுமோ என்று நினைத்து பயந்து கொண்டிருத்தால் எதையும் செய்ய முடியாமல் போய்விடும்.முதலில் தோல்வியாக முடியலாம். அதுதான் முதல்படி.இரண்டாம் படியில் வெற்றி காத்துக்கொண்டு இருக்கும்..இறையருள் துணை புரியட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.