ஆண்டுதோறும் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, வரும் பிப்ரவரி மாதம் துவங்குகிறது. இதில், விளம்பர தூதுவராக, காஜல் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அளவில் தற்போது காஜல், புகழ் பெற்று விட்டதால், அவரிடம் இந்த பொறுப்பை கொடுத்ததோடு, பல கோடி ரூபாயையும் சன்மானமாக வழங்கியுள்ளனர். அதனால், புதுமையான முறையில் விளம்பர யுக்திகளை கையாள ஆலோசித்து வருகிறார் காஜல். — சினிமா பொன்னையா
வாசுகி என்ற படத்தில் அறிமுகமான நடிகை ஸ்வேதா. இப்போது, தன் பெயரை ஸ்வேதா ராவ் என்று மாற்றி, கவர்ச்சி நடிகையாகவும் உருவெடுத்துள்ளார். மேலும், ஜெயம்ரவி நடிக்கும், பூலோகம் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரிலும் நடிக்கிறார்.
கரு.பழனியப்பன் எடுக்கும் ரீ - மேக் படம்!
சொந்தமாக கதை தயார் செய்து, படம் பண்ணினால், சோக கதையாகி விடும் என்று உஷாராகி விட்டார் கரு.பழனியப்பன். அதனால், தற்போது, தான் இயக்கும், ஜன்னல் ஓரம் என்ற படத்தை, மலை யாளத்தில் ரிலீசான, ஆர்டினரி என்ற படத்திலிருந்து ரீ - மேக் செய்கிறார். இப்படத்தில் விமல், விதார்த் மற்றும் பூர்ணா, மனீஷா ஆகியோர் நடிக்கின்றனர். — சி.பொ.,
அதிரடி வேடத்தில் ஜெய் குகைய்னி!
நடிகை லட்சுமி ராமகிருஷ் ணன் இயக்கிய, ஆரோகணம் படத்தில் அறிமுகமான ஜெய் குகைய்னி, அடுத்து சத்திய மூர்த்தி என்ற புதுமுக இயக்குனரின் சார்லஸ் ஷபிக் கார்த்திகா என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஒரு கொலையை நேரில் பார்த்து விடும் இவரை, வில்லன்கள் துரத்துவார்களாம். ஆனால், அவர்களுடன் ஆவேசமாக மோதி, அவர்களை துவம்சம் செய்வாராம் ஜெய் குகைய்னி. தன் நடிப்புக்கு கிடைத்திருக் கும் வரவேற்பை, அடுத்து சில டைரக்டர்களை அணுகி, வெயிட்டான வேடங்களுக்கு அப்ளிகேஷன் போட்டு வரு கிறார். சகலமும் கற்றவன் தன்னைச் சார்ந்து இருப்பான்! — எலீசா
தமன்னாவுக்கு சிபாரிசு செய்த அஜீத்!
இயக்குனர் சிவா இயக்கத்தில், அஜீத் நடிக்கும் படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், நடிக்க விருப்பம் தெரிவித்த அவர், சம்பள விஷயத்தில் எகிறி பேசியதால், அவருக்கு பதிலாக தமன்னாவை, "புக்' செய்து விட்டனர். அதுவும், அஜீத்தின் நேரடி சிபாரிசின் பேரிலேயே மீண்டும் கோடம்பாக்க கோதாவில், குதித்திருக் கிறார் தமன்னா. ஆடப்போன கங்கை, அண்டையில் வந்தாற் போல! — எலீசா
லேப் டாப்பை தவறவிட்ட அமிதாப்!
இத்தாலியில் நடந்த, இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்த அமிதாப்பச்சன், அங்கு தங்கியிருந்த ஸ்டார் ஓட்டலில், தன் லேப்டாப்பை தவற விட்டுவிட்டு மும்பை வந்து விட்டார். இதனால் வேதனை அடைந்த அமிதாப், உடனே அந்த ஓட்டலுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். அடுத்த விமானத்திலேயே அதை மும்பைக்கு அனுப்பி வைத்து, அவரது அபிமானத்தை பெற்றுவிட்டார் ஓட்டல் உரிமையாளர். — சி.பொ.,
அறிவுமதி அதிரடி பேச்சு!
தெலுங்கில் ராம்சரண், இலியானா நடித்த, ஆரஞ்ச் என்ற படம், ராம் சரண் என்ற பெயரில் தமிழுக்கு, "டப்' ஆகியுள்ளது. இந்த படத்திற்கு, பாட்டெழுதிய அறிவுமதி, யுகபாரதி, விவேகா அகியோரின் பெயருக்கு முன், "கவிப்பேரரசுகள்' என்ற பட்டத்தையும் கொடுத்திருந்தனர். ஆனால், அந்த பட்டத்தை ஏற்க விரும்பாத அறிவுமதி, "நாங்கள், பட்டுக் கோட்டையாரின் வழிவந்தவர்கள்; எங்களுக்கு எந்த பேரரசு பட்டமும் தேவையில்லை. அப்படியொரு பட்டத்தை வைத்துக்கொண்டு, யாருக்கும் அடிவருடிகளாக இருக்கவும் விரும்பவில்லை' என்று, நெற்றி பொட்டில் அடித்தார் போல் பேசியுள்ளார். — சினிமா பொன்னையா
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.