Advertisement
இப்படியும் இன்டர்வியூ நடத்தலாம்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012,00:00 IST

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான பாப் பாடகி, கர்ட்னி ஸ்டட்டன். விரைவில், ஒரு பாப் ஆல்பம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதில் நடிப்பதற்கு, ஒரு ஆண் மாடல் தேவைப்பட்டது. இதற்காக, தன் அலுவலகத்தில் சமீபத்தில் நேர்முகத் தேர்வை நடத்தினார். நோட் புக், பேனாவுடன், தன் தாயார், கணவர் ஆகியோருடன் அமர்ந்து, ஒவ்வொருவராக வரவழைத்து, ஒவ்வொருவருக்கும், மார்க் போட்டு, நேர்முகத் தேர்வை நடத்தினார்.
திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை. "பாப் ஆல்பத்தில், என்னுடன் பங்கேற்கும் மாடல், சட்டையில்லாமல் தான் நடிக்க வேண்டும். எனவே, நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் ஆண்கள், சட்டையை கழற்றி விட்டு, போஸ் கொடுக்க வேண்டும். அவர்களின் உடல் கட்டை பார்த்து, பொருத்தமானவரை தேர்வு செய்வேன்...' என்றார்.
கர்ட்னி ஸ்டட்டனின், இந்த விசித்திரமான ஆசையை, அவரது கணவரும், வழி மொழிந்தார். இதன்பின், நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள், தங்கள் சட்டையை கழற்றி விட்டு, கர்ட்னி ஸ்டட்டன் முன், போஸ் கொடுத்தனர். நீண்ட நேரத்துக்கு பின், அவர்களில் ஒருவரை, தன் ஆல்பத்துக்காக தேர்வு செய்தார்.
கர்ட்னி ஸ்டட்டனின், இந்த விசித்திரமான நேர்முகத் தேர்வு, அமெரிக்காவில் உள்ள சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு போனஸ் தகவல்: கர்ட்னிக்கு, 18 வயது தான் ஆகிறது; அவரது கணவர், டக்ஹட்சனுக்கு, 52 வயது.
ஜோல்னா பையன்.

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.