பாப் இசை உலகில் கொடி கட்டி பறந்த, மைக்கேல் ஜாக்சனுக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன், அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மற்றும் தூக்க மருந்துகளை, இவருக்கு ஊசி மூலம் செலுத்தியதால், மரணமடைந்தார். ஆனாலும், இவருக்கு ரசிகர்களிடம் உள்ள மவுசு, இன்னும் குறையவில்லை.
சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள, ஏராளமான வி.ஐ.பி.,களும், இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல பாப் பாடகி, லேடி காகா. பேஷன் டிசைனர், டான்சர், மாடல் என, பன்முகத் திறமையுடன் ஜொலிக்கும், லேடி காகாவுக்கும், உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.
மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய, பல பொருட்கள், சமீபத்தில், அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. ரசிகர்களுடன், வி.ஐ.பி.,களும், போட்டி போட்டு, ஏலம் எடுத்தனர். லேடி காகா மட்டும், மைக்கேல் ஜாக்சன், மேடை நிகழ்ச்சியின் போது, அணிந்திருந்த, கையுறை, உடை ஆகியவை உட்பட, 55 பொருட்களை ஏலம் எடுத்தார்.
மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த, ஒரு வெள்ளை நிற உடையை மட்டும், 1 கோடியே, 37 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார், லேடி காகா.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.