* மாற்றம் என்பது இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை. தங்கள் மன அமைவை மாற்றிக் கொள்ள முடியாதவரால் எதையும் மாற்ற முடியாது!
* வெற்றிக்கு வகை செய்யும் சில முக்கியப் பண்புகள்: உண்மை, நேர்மை, அடக்கம், அன்பு, அடுத்தவர் உணர்வை மதிக்கும் தன்மை!
* அபாய நிலைகளை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். அபாயங்களை எதிர்நோக்குவதன் மூலம் நாம் துணிச்சலாய் இருக்கக் கற்றுக் கொள்கிறோம்!
* இணக்கமற்ற சூழ்நிலைகளில் இருந்து வெற்றியை ஈட்டுவதற்காக இடைவிடாது போராடுவதும் ஓய்வின்றிப் போரிடுவதுமே மிகப்பெரிய சாதனைகளுக்கு நீங்கள் கொடுக்கிற விலை.
* உங்கள் குறிக்கோள்களுக்கு எழுத்து வடிவம் கொடுங்கள். அந்நிலையில் அது காணத்தக்கதாயும், உணரத்தக்கதாயும் இருக்கும்! அதன்பிறகு அது வெறும் எண்ணாயிருக்காது... ஏற்கப்பட்ட பொறுப்பாகி விடும்!
* தகுதியான ஒன்றைச் செய்வதற்கு தகுதியான சூழ்நிலை வரட்டும் என்று காத்திருக்காதீர்கள். சாதாரண சூழ்நிலைகளையே தகுதியானதாக்கிக் கொள்ளுங்கள்.
* மதிப்புமிக்க எதுவும் எளிதாய் கைக்கு வந்து விடாது. உழையுங்கள்- தொடர்ந்து உழையுங்கள்... கடினமாய் உழையுங்கள்... அதுவே, நிலையான பலன்களைத் தரும்!
* வாழ்க்கை, முடிவற்ற வாய்ப்புகளைக் கொண்டதாயிருக்கிறது. நம் அச்சங்களைக் கடப்பதன் மூலம், நாம் கற்றுணர முடியுமாயின், நம்முடைய இயற்கைத் தன்மையை நம்மால் வெளிப்படுத்த இயலுமாயின் வாய்ப்புகள் முடிவற்றவை!
* பயன்படுத்தப்படாத துணிவு தன்னால் குறைந்து விடும். பயன்படுத்தப்படாத பொறுப்புணர்வும் படிப்படியாய் மங்கி விடும். பகிர்ந்து கொள்ளப்படாத அன்பு பாழாகிப் போய் விடும்!
* நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடாமுயற்சியை நண்பனாக்கிக் கொள்ளுங்கள், அனுபவத்தை ஆலோசகராக்கிக் கொள்ளுங்கள், எச்சரிக்கை - மூத்த சகோதரனாய் இருக்கட்டும். நம்பிக்கை - அறிவு மிக்க பாதுகாவலராய் இருக்கட்டும்!
* நிலையான வெற்றியைப் பெறுவதற்கு உங்கள் கொள்கையிலும், செயல்முறையிலும் - நீங்கள் நிலையாக இருக்க வேண்டும்!
* வெற்றியால் நீங்கள் வலிமை பெற்று விடுவதில்லை. உங்கள் போராட்டங்களே உங்களை வலிமையுடையவராக்கும்.
வாழ்க்கையின் துன்ப நிலைகளிலும் விட்டுவிடாமல் இருக்கிறீர்களே... அதுதான் வலிமை.
* யார், வாக்கு தவறாதவனோ, நேர்மையாய் சிந்திக்கிறவனோ, வெளிப்படையாய் பேசுகிறவனோ, மக்கள் அவனையே மதிக்கின்றனர். அவனிடம் நம்பிக்கை வைக்கின்றனர்!
* வாழ்க்கையை உருவாக்கப் பயன்படும் காலத்தை வீணடிக்காதீர்கள். உங்களால் முடிந்தவரை, ஒவ்வொரு கணத்தையும் பயனுடையதாக்குங்கள் அது - அளவின்றி வழங்கப்படவில்லை நம் கைகளில்!
* சரியானதோர் திட்டம் சாலையின் வரைபடம் மாதிரி. உங்கள் இலக்கைச் சென்றடைய அதுவே சிறந்த வழி!
* செடிகள் பூப்பதற்குத் தேவை தரமான விதையும், தகுதியான மண்ணும்! நல்ல சிந்தனைகள் வளர்வதற்கும் அதுவே தேவை!
* அறிவாற்றலின் பயன் அரிதாகவே இனங் காணப்படுகிறது. அது, கடின காரியங்களையும் எளிதாக்கும் திறன்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.