ஜனவரி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2012
00:00

தமிழகம்


ஜன., 2: தமிழகத்தில் ரேஷன் கார்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப் பட்டது.
ஜன., 4: தூத்துக்குடி இ.எஸ்.ஐ., மருத்துவமனை பெண் டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்.
ஜன., 5: தமிழகத்தில் திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஜன., 8: முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு செய்தி வெளியிட்ட "நக்கீரன்' அலுவலகம் மீது அ.தி.மு.க., தொண்டர்கள் தாக்குதல். பின் தவறுக்கு "நக்கீரன்' மன்னிப்பு கேட்டது.
ஜன., 9: முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுக்கிற்கு "மணி மண்டபம்' அமைக்க முதல்வர் ஜெ., உத்தரவு.
ஜன., 10: திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் வீட்டிலிருந்த தேவேந்திரகுல வேலாளர் கூட்டமைப்பு தலைவர் வேளாளர் பசுபதி பாண்டியன் கொலை.
ஜன., 20: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றார்.
ஜன., 20: இளைஞர்களின் எதிர்பார்ப்பு டி.என்.பி.எஸ்.சி., யின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி நட்ராஜ், ஜன., 20ம் தேதி பதவியேற்றார். இதற்குப்பின் ஆன்லைன் மூலம் பதிவு செய்தல், நிரந்தர பதிவு முறை, விரைவில் தேர்வு முடிவு, கீ-ஆன்சர் வெளியீடு, தேர்வானவர்களுக்கு கவுன்சிலிங் முறையில் பணியிடம் என, டி.என். பி.எஸ்.சி.யின், தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
ஜன., 21: சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள், கணினிகள் எரிந்து நாசமாகின.
ஜன., 26: சிறந்த தமிழ் நூல்களுக்கான நிதியுதவியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த, முதல்வர் ஜெ., உத்தரவு.

இந்தியா


ஜன., 3: 99வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு புவனேஷ்வரில் நடைபெற்றது.
* ஆந்திர அரசு, அரசு வேலைகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயதின் அளவை (34 - 36) அதிகரித்தது.
ஜன., 6: டிரினிடாட் அண்டு டொபாகோ பிரதமர் கம்லா பெர்சாத், இந்தியா வந்தார். இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜன., 11: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 2 நாள் பயணமாக திரிபுரா தலைநகர் அகர்தலாவுக்கு வருகை தந்தார்.
ஜன., 16: மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றார்.
ஜன., 21: ஜெய்ப்பூரில் நடந்த சர்வதேச இலக்கிய விழாவில் பங்கேற்க, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிர்ப்பால் பங்கேற்கவில்லை.
ஜன., 26: நாட்டின் 63வது குடியரசு தினத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெளிநாட்டு விருந்தினராக பங்கேற்ற தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷின்வத்ரா, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஜன., 27: பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களை பயன்படுத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு , மத்திய அரசு தடை.
ஜன., 29: வங்கதேசத்தின் குல்னா நகரில், இந்தியா - வங்கதேசம் இணைந்து தெர்மல் பவர் பிளான்ட் நிறுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜன., 29: பிறந்த தேதி சர்ச்சை இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த வி.கே.சிங்கின் பிறந்த ஆண்டு 1951 மே 10 என கல்விச்சான்றிதழ்களில் உள்ளது. ஆனால் யு.பி.எஸ்.சி., தேர்வு, பணியில் சேர்ந்தது என அனைத்து ஆவணங்களிலும் 1950 மே 10 என இருந்தது. இதனால் இவர் ஓய்வு பெறுவதில் குழப்பம் ஏற்பட்டது. சட்ட அமைச்சகம், அட்டர்னி ஜெனரல் அறிக்கையை ஏற்று ராணுவ அமைச்சகம் ஜன., 29ல், அவரது பிறந்த ஆண்டை 1950 என பதிவு செய்ய உத்தரவிட்டது.

உலகம்

ஜன., 1: நைஜீரியாவில் நடந்த கலவரத்தில் 50 பேர் பலியாகினர்.
* பாகிஸ்தான் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் ஐ.நா., சபையில் நிரந்தர உறுப்பு நாடாக சேர்ந்தது.
ஜன., 6: அமெரிக்காவின் அரசு இணையதளத்தில் இந்தியாவின் தவறான வரை படம் வெளியிடப்பட்டதால் சர்ச்சை. இந்திய அரசின் எதிர்ப்புக்கு பின், அதனை அமெரிக்க சரி செய்தது.
* உலகின் உயரமான பாலம் (1,322 அடி) மெக்சிகோ நாட்டில் திறந்து வைக்கப்பட்டது.
ஜன., 17: அமெரிக்காவின் வரலாற்றுப் புகழ் பெற்ற சார்லொட்டஸ்வில்லே என்ற நகரின் மேயராக, இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர சிங் ஹூஜா தேர்வு.
ஜன., 18: அமெரிக்க காங்கிரசில் தாக்கலாக இருந்த 2 மசோதாக்களை எதிர்த்து, இணையக் கலைக் களஞ்சியமான "விக்கிபீடியா' ஒருநாள் வேலை நிறுத்தம்.
ஜன., 20: கோர்ட் அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஜா கிலானி, அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக ஆஜர்.

விளையாட்டு


ஜன. 3: தென் மத்திய ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியாவின் ஆஷிஸ் குமார் தங்கம் வென்றார்.
ஜன. 8: சென்னை ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையரில் கனடாவின் ராவோனிச் சாம்பியன்.
ஜன.10: கடந்த ஆண்டு கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணி கேப்டன் பாய்ச்சங் பூட்டியாவை, கவுரவிக்கும் வகையில் ஜெர்மனியின் பேயர்ன் முனிக் அணியுடன் நட்பு போட்டி நடத்தப்பட்டது.
ஜன. 13: தோகா, ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் அபினவ் பிந்த்ராவுக்கு தங்கம்.
ஜன. 16: 100வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் ஆரம்பம்.
ஜன. 19: டில்லியில் நடந்த, அஜர்பெய்ஜான் அணிக்கு எதிரான பெண்கள் ஹாக்கி தொடரில் இந்தியா கோப்பை வென்றது.
ஜன. 22: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆண்கள் ஹாக்கி தொடரில் இந்தியா கோப்பை வென்றது.
ஜன. 23: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணி சாம்பியன்.
ஜன. 25: தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து சாம்பியன்.
ஜன. 28: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி 0-4 என தோல்வி அடைந்தது.
ஜன. 28: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ், செக்குடியரசின் ஸ்டெபானக் ஜோடி சாம்பியன்.
* பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் அசரன்கா சாம்பியன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yuvaraja boopathi - Virudhunagar,இந்தியா
19-ஏப்-201310:21:51 IST Report Abuse
Yuvaraja boopathi தினமலரின் இந்த பகுதி என்னை போன்று அரசாங்க வேளையில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு நடப்பு நிகழ்வுகளை தரும் ஒரு கற்பக விருட்சம்.இதனை பதிவுஇரக்கம் செய்யும் வகையில் செய்தால் மிகுந்த நன்றி பயக்கும். என்றும் தினமலர் வாசகனாக, யுவராஜ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.