பிப்., 3: "2 ஜி' அலைக்கற்றை ஊழல் வழக்கில், ஒதுக்கீடு செய்யப்பட்ட 122 லைசென்ஸ்களையும் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. பிப்., 8: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.திருமலை நியமனம். பிப்., 9: திருமங்கலம் அருகே திருமணத்திற்கு சென்று திரும்பிய வேன் சாலை யோர கிணற்றில் கவிழ்ந்து 10 பேர் பலி. பிப்., 13: 2011ம் ஆண்டு, சிறந்த தமிழ் நூலுக்கான "சாகித்ய அகாடமி' விருது, "காவல்கோட்டம்' நாவலுக்கு வழங்கப்பட்டது. ஆசிரியர் வெங்கடேசன். பிப்., 19: இ.கம்யூ., மாநில தலைவராக தா.பாண்டியன் மீண்டும் தேர்வு. பிப்., 20: தமிழக அரசால் நியமிக்கப்பட்ட இனியன் தலைமையிலான குழு, "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது' என அறிக்கை தாக்கல் செய்தது.
இந்தியா
பிப்., 7: சிறப்பாக செயல்படாத ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, கட்டாய ஓய்வு அளிப்பதற்கான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. பிப்., 8: கர்நாடக சட்டசபையில் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா. பிப்., 9: குஜராத் கலவரத்தில், சேதம் அடைந்த 500 வழிபாட்டு தலங்களுக்கு, நஷ்ட ஈடு வழங்க அம்மாநில ஐகோர்ட் உத்தரவு. பிப்., 10: மும்பையில், 2003ல் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில், 52 பேர் பலியான வழக்கில், 3 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. பிப்., 14: டில்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே காரில் குண்டுவெடிப்பு. பெரும் சேதமில்லை. பிப்., 15: ""சமூக இணையதளங்களை கண்காணிக்கும் திட்டம் இல்லை'', என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் பதில். பிப்., 21: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஜெயலலிதா, மம்தா உள்ளிட்ட 7 முதல்வர்கள் எதிர்ப்பு. பிப்., 26: போலியோவால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்.
உலகம் பிப்., 2: எகிப்தில் கால்பந்து ரசிகர்களுக்கு இடையே நடந்த மோதலில் 74 பேர் பலி. பிப்., 5: இங்கிலாந்தில் பிறந்து 17 மணி நேரமே ஆன பெண் குழந்தைக்கு, இருதய ஆப்பரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டது. பிப்., 6: பிலிப்பைன்ஸ் நாட்டில் நிகழ்ந்த பூகம்பத்தில் 44 பேர் பலியாகினர். பிப்., 8: பொருளாதார சிக்கலில் உள்ள மொரீசியஸ்க்கு, இந்தியா சார்பில் 1,350 கோடி ரூபாய் கடன் வழங்குவதாக மன்மோகன் சிங் அறிவிப்பு. பிப்., 11: தென்ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் புகைப்படம், அந்நாட்டின் ரூபாய் நோட்டில் இடம் பெற்றது. பிப்., 18: ஊழல் புகாரில் சிக்கிய ஜெர்மனி அதிபர் கிறிஸ்டியன் பதவி விலகினார். பிப்., 21: மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 44 கைதிகள் பலி. பிப்., 24: இலங்கை இறுதிக்கட்ட போரில், மனித உரிமைமீறலில் ஈடுபட்ட இலங்கை ராணுவ தளபதி ஷாவேந்திர சில்வா, ஐ.நா., அமைதிப்படை குழுவில் இருந்து நீக்கம். பிப்., 27: ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை, கொலை செய்யும் சதித்திட்டத்தை உக்ரைன் போலீசார் முறியடிப்பு. 2 பயங்கரவாதிகள் கைது.
விளையாட்டு
பிப். 3: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான "டுவென்டி-20' தொடரை, இந்தியா 1-1 சமன் செய்தது. பிப். 9: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் "ஹால் ஆம் பேம்' பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் சேர்க்கப்பட்டார். பிப். 10: தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ருஷ்மி சக்ரவர்த்தி, குஜராத்தின் அங்கிதா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.