மே
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2012
00:00

தமிழகம்


மே 1: மதுரையில் நடந்த பாஜ., மாநாட்டுக்கு அத்வானி வருகை தர இருந்த நிலையில் சைக்கிள் டைம்பாம் வெடித்ததால் பரபரப்பு.
மே 10: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 180 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் தீயில் எரிந்தது. பின் சீரமைக்கப்பட்டு மே 29ல் மீண்டும் உற்பத்தி.
மே 23: நேர்மையான, கண்டிப்பான அதிகாரி, என பெயர் எடுத்த மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றம். அன்சுல் மிஸ்ரா புதிய கலெக்டரானார்.
மே 30: பெட்ரோல் விலை உயர்வுக்கு (ரூ. 7.50) எதிர்ப்புத் தெரிவித்து, பா.ஜ., இடதுசாரி கட்சிகள் நாடு முழுவதும் "பந்த்'.

இந்தியா


மே 3: 2012ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை பட ஹீரோ அப்புகுட்டிக்கு வழங்கப்பட்டது.
மே 4: மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் விளம்பர தூதராக, "தேசிய விருது' பெற்ற பாலிவுட் நடிகை வித்யா பாலன் நியமனம்.
மே 5: டில்லியில் நடந்த, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநாட்டில், ஜெ. உட்பட 10 முதல்வர்கள் எதிர்ப்பால் ஒருமித்த கருத்து இல்லை.
மே 8: மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, கோல்கட்டா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், முதல்வர் மம்தாவை சந்தித்தார்.
மே 8: "ஹஜ்' பயணிகளுக்கான மானியங்களை குறைக்க, சுப்ரீம்கோர்ட் உத்தரவு.
மே 9: பதவி உயர்வு, போயிங் 787 டிரீம்லைனர் விமான பயிற்சி திட்டத்தை மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம். 58 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்தது.
மே 13: சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட "உலகின் சக்தி வாய்ந்த அன்னை யர்கள்' பட்டியலில் காங், தலைவர் சோனியா 6வது இடத்தை பெற்றார்.
மே 14: உலகின் மிகப்பெரிய இந்து கோவில், பீகாரில் அமைய உள்ளது. இது 50 ஏக்கர் பரப்பளவில், 300 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது.
மே 21: நாட்டின் புனித நதியான கங்கையை தூய்மைப்படுத்த 7 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
மே 22: பத்ரிநாத்திலிருந்து, ரிஷிகேஷ் செல்வதற்காக, 45 பக்தர்கள் பயணம் செய்த பஸ், கங்கை ஆற்றில் விபத்துக்குள்ளானதில், 22 பக்தர்கள் பலி.
மே 24 : ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது.
மே 29: மியான்மரில் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டின் ஜனநாயகத் தலைவர் அவுங் சாங் சூகியை சந்தித்தார்.
மே 31: நாட்டில் காடுகள் அதிகம் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் (11.24 சதவீதம்) பெற்றது.

உலகம்


மே 14: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், 13 இந்தியர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி.
மே 22: 2010 பிப்., 8ல், கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் ராணுவ தளபதியாக சரத் பொன்சேகா, பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை.
மே 25: ஜப்பானைச் சேர்ந்த தமே வட்டானபி என்ற 73 வயது பெண், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கின்னஸ் சாதனை.

விளையாட்டு


மே 6: ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய பெண்கள் அணி சாம்பியன்.
மே 13: 7வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா வெண்கலம்.
மே 18: மும்பை வான்கடே மைதானத்தில் பாதுகாவலருடன் ஏற்பட்ட பிரச்னையால், நடிகர் ஷாருக்கான்(கோல்கட்டா அணி உரிமையாளர்) நுழைய 5 ஆண்டுகள் தடை.
மே 20: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.
மே 27: ஐ.பி.எல்., பைனலில் சென்னை அணியை வீழ்த்தி, கோப்பை வென்றது கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.