Advertisement
ஜூன்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2012
00:00

தமிழகம்


ஜூன் 1: அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை, இந்தாண்டு முதல் முப்பருவ கல்வி முறை, தொடர் மதிப்பீடு முறை அறிமுகம்.
ஜூன் 4: அரசு அனுமதியின்றி குவாரி நடத்த துணை போனதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது.
* சேலம், அங்கம்மாள் காலனி, குடிசைகளை தீ வைத்த சம்பவத்தில், ரவுடிகளை தூண்டியதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது.
ஜூன் 7: சிவகங்கை லோக்சபா தொகுதி தேர்தல் வெற்றி தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை, ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி.
ஜூன் 15: புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றி. தே.மு.தி.க., டெபாசிட் பெற்றது.

இந்தியா


ஜூன் 3: தடை உத்தரவை மீறி, அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை செல்ல முயன்ற, 600 யாத்ரீகர்கள் கைதாகி விடுதலை.
ஜூன் 5: மும்பை பல்கலை தயாரித்த, வினாத்தாளை "அவுட்'ஆக்கியது தொடர்பாக, பேராசிரியர்கள், பல்கலை உதவியாளர்கள் உட்பட 14 பேர் கைது.
ஜூன் 9: சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, ஆந்திர ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு நிராகரிப்பு.
* உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள், லோக்சபா எம்.பி., ஆக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஜூன் 15: ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 15 இடங்களில் ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி வெற்றி பெற்றது.
ஜூன் 24: மத்திய உள்துறை அமைச்சகத்தில் தீ விபத்து. பெரும் சேதமில்லை.
* மகாராஷ்டிராவில் 2002ல் பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில், தூக்குத்தண்டனை பெற்ற கைதி இறந்து 5 ஆண்டுகளுக்குப்பின் கருணைமனு நிராகரிப்பால் விமர்சனம்.
* உத்தரபிரதேசத்தில் அம்ரோகா அருகே பேருந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 15 பேர் பலி.

உலகம்


ஜூன் 1: எகிப்தில் 31 ஆண்டுகளாக அமலில் இருந்த அவசர சட்டம் முடிவுக்கு வந்தது.
ஜூன் 3: நைஜீரியாவின் அபுஜா நகரில் இருந்து, லாகோஸ் நகருக்கு சென்ற டானா ஏர்லைன்ஸ் விமானம் தீ விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி.
ஜூன் 4: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், 5.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜூன் 6: ஆப்கானிஸ்தானின் காந்தகார் பகுதியில், தற்கொலை படையினர் நடத்திய 2 தாக்குதல்களில் 41 பேர் பலி.
ஜூன் 13: இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் டேனியல் ஹில்லெல், 2012ம் ஆண்டுக்கான உலக உணவு பரிசை பெற்றார்.
ஜூன் 18: இந்திய வம்சாவளி அமெரிக்க பேராசிரியர் அஞ்சலி ஜெயினுக்கு, அமெரிக்காவின் யேல் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், அசோசியேட் டீன் பதவி வழங்கியது.
ஜூன் 20: கிரீஸ் நாட்டின் புதிய பிரதமராக ஆன்டனிஸ் சமரா பதவியேற்பு.
ஜுன் 24: பராகுவே அதிபர் பெர்னான்டோ லுகோ மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கம். புதிய அதிபராக, பிரடரிக்கோ பிரான்கோ பதவி ஏற்பு.
ஜூன் 27: வங்கதேசத்தில் பலத்த மழையினால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 83 பேர் பலி.

விளையாட்டு


ஜூன் 3: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா.
ஜூன் 4: ராஜ்யசபா எம்.பி.,யாக சச்சின் பதவி ஏற்பு.
ஜூன் 9: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் ரஷ்யாவின் ஷரபோவா சாம்பியன்.
ஜூன் 10: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் இந்தியாவின் செய்னா நேவல் சாம்பியன் பட்டம் பெற்றார்.
* நூறாவது சதம் கண்ட சச்சினை பாராட்டும் விதமாக, இவருக்கு "விஸ்டன் இந்தியா' விருது வழங்கப்பட்டது.
ஜூன் 15: லண்டன் ஒலிம்பிக் டென்னிசில் இந்தியாவின் பயசுடன் இணைந்து விளையாட பூபதி, போபண்ணா மறுப்பு.

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.