Advertisement
ஜூலை
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 டிச
2012
00:00

தமிழகம்

ஜூலை 10: மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்புமணி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜர்.
ஜூலை 10: துபாய் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய (தமிழக) மீனவர்கள் மீது அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மீனவர் பலி. இருவர் காயம்.
ஜூலை 14: மத்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து உத்தரவு.
ஜூலை 18: தமிழக விவசாயத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் நீக்கம்.
ஜூலை 23: முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க, தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
ஜூலை 24: நாட்டில் உள்ள புலிகள் சரணாலயப் பகுதிகளில், சுற்றுலா நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை.

இந்தியா

ஜூலை 4: ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கின் குற்றப்பத்திரிகையில், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் பெயர் சேர்ப்பு.
ஜூலை 10: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ ஹூசைன் லூங், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.
ஜூலை 11: நாட்டிலேயே முதல்முறையாக அனைத்து மக்களும் வங்கி வசதி பெற்ற மாவட்டமாக, கேரளாவின் எர்ணாகுளம் தேர்வு.
ஜூலை 13: ஒடிசா சட்டசபையில், உள் ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வழங்கும் தீர்மானத்துக்கு ஒப்புதல்.
* உத்தரகண்ட் முதல்வராக உள்ள விஜய் பகுகுனா, சித்தர்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார்.
ஜூலை 19: மேற்கு வங்க மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி., டெரக் ஓ பிரைன், ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளித்த முதல் ஆங்கிலோ - இந்தியன் ஆனார்.
ஜூலை 23: உத்தர பிரதேசத்தில், மாயாவதி ஆட்சியில் மாற்றப்பட்ட 8 மாவட்டங்களின் பெயர்களை, மீண்டும் அதே பெயருக்கு மாற்றினார் முதல்வர் அகிலேஷ்.
ஜூலை 26: ராகிங் தடுப்பு இணையதளத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் துவக்கினார். இதன் முகவரி தீதீதீ.ச்ணtடிணூச்ஞ்ஞ்டிணஞ்.டிண
ஜூலை 30: மத்திய அரசின் மின் தொகுப்பில், மின் கிரிடு செயலிழந்ததால், வட இந்திய மாநிலங்களில் பெரிய மின் வெட்டு ஏற்பட்டது. 19 மாநிலங்கள் இருளில் மூழ்கின.
ஜூலை 31: மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் நிதியமைச்சராக சிதம்பரம், உள்துறை அமைச்சராக சுஷில்குமார் ஷிண்டே நியமனம்.

உலகம்


ஜூலை 10: இந்தியாவில் பிறந்து சட்ட படிப்பு படித்த, பாக்., முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பக்ருதீன் இப்ராகிம், பாகிஸ்தானின் தலைமை தேர்தல் ஆணையராக நியமனம்.
ஜூலை 12: நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி, நிலை தடுமாறி கவிழ்ந்தது. கொட்டிய பெட்ரோலை அள்ளியதில் 200 பேர் பலி.
ஜூலை 15: உத்தர பிரதேசத்திலிருந்து, நேபாளத்தின் நவால் பாசரி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்குச் சென்ற பக்தர்கள், பஸ் கவிழ்ந்ததில் 39 பேர் பலி.
ஜூலை 18: மெக்சிகோவில் உள்ள லாஸ் காபோஸ் நகரில் 7வது "ஜி20' உச்சி மாநாடு நடந்தது.
ஜூலை 26: எகிப்தின் புதிய பிரதமராக ஹசிம் கண்டில் பொறுப்பேற்பு.
ஜூலை 31: அமெரிக்காவின் ரூடி தீவில், கிரே'ஸ் ஸ்டோர் என்ற பலசரக்கு கடை, 1788ல் துவக்கப்பட்டது. இக்கடை, 224 ஆண்டுகளுக்குப் பின் மூடப்பட்டது.

விளையாட்டு

ஜூலை 1: ஆசிய ஆல் ஸ்டார் தடகளப் போட்டியில், இந்திய வீரர் சந்தீப் சிங் 1500 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார்.
ஜூலை 2: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமிற்கு, ராணுவத்தின் கவுரவ "லெப்டினன்ட் கர்னல்' பதவி.
ஜூலை 7: கொரியா பாட்மின்டன் தொடரில், இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
* விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரினா வில்லியம்ஸ் சாம்பியன்.
ஜூலை 8: விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் பெடரர் கோப்பை வென்றார்.
ஜூலை 10: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்ரிக்காவின் பவுச்சர் ஓய்வு.
ஜூலை 27: லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி துவங்கியது.
ஜூலை 31: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.