Advertisement
ஹெர்குலிஸ்! (13)
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
00:00

இதுவரை: அட்லசு மலையை அடைந்த ஹெர்குலிஸ் அட்லசு தேவனை சந்தித்தான். இனி-

""ஐயா! தங்க ஆப்பிள் பழங்கள் மூன்று வேண்டும். அதற்காகவே, உங்கள் உதவியை நாடி வந்தேன். நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்,'' என்று வேண்டினான்.
""தங்க ஆப்பிள் பழங்களா? அவை உனக்கு எதற்கு?'' என்று எரிச்சலுடன் கேட்டார் அட்-லசு.
நடந்ததை எல்லாம் சொன்ன அவன், ""யுரிஸ்தியசு மன்னன் எனக்கு வைத்த பதினொன்றாவது சோதனை இது.
இதில், நான் வெற்றி பெற்றாக வேண்டும்,'' என்றான்.
சிந்தனையில் ஆழ்ந்த அவர், ""ஹெர்குலிஸ்! மாவீரனாகிய உனக்கு, உதவி செய்ய நினைக்கிறேன். மனிதர்கள் யாராலும் அந்தப் பழங்களைப் பறிக்க முடியாது. எங்களைப் போன்ற தேவர்கள்தான் பறிக்க முடியும்.
""என்னால் அந்தப் பழங்களைப் பறித்து வர முடியும். நான் அங்கு சென்று வரும்வரை இந்த வான மண்டலத்தை யார் சுமந்து நிற்பார்கள்? இதைச் சுமக்கும் வலிமை உனக்கு இருப்பதாகத் தெரிய வில்லையே,'' என்றார்.
தன் வலிமையை அவரிடம் காட்டிப் பெருமை பெற நினைத்தான் ஹெர்குலிஸ்.
""அந்த வான மண்டலத்தை என்னிடம் தாருங்கள். நீங்கள் திரும்பி வந்-து இதை வாங்கிக் கொள்ளலாம்,'' என்றான்.
அட்லசின் கைகளிலிருந்து வானுலகத்தைத் தன் கைளில் வாங்கிக் கொண்டான். அதைத் தன் கைகளால் தூக்கியபடி நின்றான்.
"அப்பாடா! எவ்வளவு காலம் இவ்வளவு கடினமான எடையைத் தூக்கிக் கொண்டு நின்றேன். எப்படியோ, பெரிய சுமை நீங்கியது. மகளைப் பார்க்கப் போகிறோம்' என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்து சென்றார் அட்லசு.
வானுலகம் இவ்வளவு கனமாக இருக்கும், என்று ஹெர்குலிஸ் எதிர்பார்க்கவில்லை. அதைச் சுமக்க முடியாமல் திணறினான்.
கைகளைச் சிறிது அசைத்துப் பார்த்தான். வானுலகத்திலிருந்து விண்மீன்கள் சில பளபளவென்று மின்னியபடியே கீழே விழுந்தன.
""ஐயோ! வானுலகத்தைச் சுமக்க முடியவில்லை; கீழே போடவும் வழியில்லை; அட்லசு என்னை இப்படிச் சிக்கலில் மாட்டி விட்டாரே... எப்போது வருவாரோ தெரியவில்லை? என்ன செய்வேன்,'' என்று சலித்துக் கொண்டான்.
நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.
அட்லசு தேவனைக் கூவி அழைத்தான். அவரும் அவன் அருகில் வந்தார்.
""பேராற்றலும், வலிமையும் நிறைந்தவர் நீங்கள். எவ்வளவோ காலம் வானுலகத்தைச் சுமந்து புகழ் பெற்றீர். இப்போது நீங்கள் ஓய்வு எடுக்க விரும்புவதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.
""என் நிலைமையை நீங்களே பாருங்கள். உங்கள் அளவு எனக்கு வலிமை இல்லை. என் கைகளால் நீண்ட காலம் வானுலகத்தைச் சுமக்க முடியாது. எனக்கு ஓர் உதவி செய்யுங்கள். என்னிடமிருந்து சிறிது நேரம் இந்த வானுலகை வாங்கிக் கொள்ளுங்கள்.
""என் தோளில் தொங்கும் சிங்கத் தோலை எடுக்கிறேன். அதைச் சும்மாடு போலச் சுருட்டித் தலையில் வைத்துக் கொள்கிறேன். அதன் பிறகு வானுலகத்தை நீங்கள் என் தலையில் வையுங்கள். அதைச் சுமந்து கொண்டு நிற்கிறேன்,'' என்று பணிவாகச் சொன்னான்.
அவன் சூழ்ச்சியை அட்லசு அறியவில்லை. தன் கையிலிருந்த தங்க ஆப்-பிள் பழங்களைக் கீழே வைத்தார்.
அவனிடம் இருந்து வானுலகத்தைத் தன் இரு கைகளாலும் வாங்கினார். அதைச் சுமந்தபடி நின்றார்.
ஹெர்குலிசிற்கு அப்போதுதான் உயிரே வந்தது.
""அட்லசு அவர்களே! நன்றி,'' என்று குரல் கொடுத்தான்.
தரையில் கிடந்த தங்க ஆப்-பிள் பழங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
தான் ஏமாந்தது அட்லசிற்குப் புரிந்தது. தன் தலைவிதியை நொந்து கொண்ட அவர், வானுலகத்தைச் சுமந்தபடி நின்றார்.
தங்க ஆப்-பிள் பழங்களுடன் அரசன் யுரிஸ்தியசைக் சந்தித்தான் ஹெர்குலிஸ்.
"ஐயோ! இந்தச் சோதனையிலும் வெற்றி பெற்று விட்டானே...' என்று அதிர்ச்சி அடைந்தான் யுரிஸ்தியசு.
தங்க ஆப்-பிள் பழங்களை அவனிடம் தந்தான் ஹெர்குலிஸ்.
ஹீரா தேவதையின் கோபத்திற்கு ஹெர்குலிஸ் ஆளாக வேண்டும். நிறைய துன்பப்படவேண்டும் என்று நினைத்தான் யுரிஸ்தியசு,""இந்தப் பழங்களை நீயே வைத்துக்கொள்,'' என்றான்.
அதினா தேவதைகளை நினைத்தான் ஹெர்குலிஸ். அவன் முன் தோன்றினாள் அதினா.
""தாயே! இந்தப் பழங்களை ஹீரா தோட்டத்தில் சேர்த்து விட வேண்டும்,'' என்று வேண்டினான்.
பழங்களைப் பெற்றுக் கொண்டு, அவள் அங்கிருந்து மறைந்தாள்.
யுரிஸ்தியசைப் பார்த்து, ""நீ எனக்கு வைக்கும் கடைசிச் சோதனை என்ன? சொல்,'' என்றான்.
""ஹெர்குலிஸ்! பாதாள உலகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பாய். அந்த உலகத்தை மூன்று தலைகளை உடைய பயங்கரமான நாய் ஒன்று காவல் காக்கிறது. அதன் பெயர் செரிபரசு. அதன் காவலை மீறி யாரும் உள்ளேயும் செல்ல முடியாது. வெளியேயும் வர முடியாது,'' என்றான் யுரிஸ்தியசு.
""ஆமாம், எதற்காக அந்தக் கதையைச் சொல்கிறாய். நீ எனக்கு வைக்கப் போகும் சோதனையைச் சொல்,'' என்று எரிச்சலுடன் கேட்டான் ஹெர்குலிஸ்.
""பாதாள உலகக் காவல் நாயான செரிபரசை நீ இங்கே கொண்டு வர வேண்டும். இதுதான் நான் உனக்கு வைக்கும் கடைசிச் சோதனை,'' என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
அங்கிருந்து புறப்பட்டான் ஹெர்குலிஸ்.
"செத்தவர்கள் உலகமான பாதாள உலகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். அங்கே செத்தவர்கள் மட்டும்தான் செல்ல முடியும். உயிருடன் உள்ளவர்கள் யாரும் செல்ல முடியாது. அப்படியே சென்றாலும் உயிருடன் திரும்பி வர முடியாது. அங்கே செல்லவே முடியாத போது காவல் நாயான செரிபரசை எப்படி அழைத்து வருவது? யாராலும் இயலாத செயலைச் சோதனையாக வைத்து இருக்கிறானே. இத்தனை சோதனைகளில் வெற்றி பெற்று விட்டேன். முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது.
"இந்தச் சோதனையிலும் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதற்கு வழி ஏதும் தெரியவில்லையே. என்ன செய்வது?' என்று குழம்பினான்.
"கடவுளர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த முயற்சியில் வெற்றி பெற முடியும்' என்ற முடிவுக்கு வந்தான்.
புனிதமான இலியசு மலையில் அமர்ந்து நெடுங்காலம் தவம் செய்தான். கடவுளர்களை முறைப்படி வழிபட்டு முடித்தான்.
தவத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, மலையிலிருந்து இறங்கினான்.
அவனைச் சந்தித்த முதியவர் ஒருவர், ""ஆர்கேடிய மலையில் ஓர் ஊற்று கிளம்பு கிறது. அது ஆறாகி ஓடுகிறது. அது கடலில் கலக்காமல் பெரிய மடுவிற்குள் விழுந்து மறைகிறது. அந்த ஆறு வழியாகச் சென்றால் பாதாள உலகம் செல்லலாம்,'' என்றார்.
கடவுளர்கள்தான் வழி காட்டுகின்ற-னர் என்று மகிழ்ச்சி அடைந்தான்.
ஆற்றை தொடர்ந்து சென்ற அவன் அந்த மடுவை அடைந்தான்.
மடுவில் ஆற்று நீர் விழுந்த இடத்தைப் பார்த்தான். அங்கே தண்ணீர் நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது. அதில், இரும்புத் துண்டு ஒன்றைப் போட்டான். அந்த இரும்பு உருகிப் போயிற்று.
என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற துணிவு கொண்ட ஹெர்குலிஸ், அந்த ஆற்றில் குதித்தான். ஆறு அவனை மடுவிற்குள் இழுத்துச் சென்றது.
பாதாள உலகத்திலிருந்த ஏரியில் அவனைச் சேர்த்தது அந்த ஆறு.
அந்த ஏரியில் ஒரே ஒரு படகுதான் இருந்தது. அதில் படகோட்டி ஒருவன் இருந்தான்.
அவனைப் பார்த்து ஹெர்குலிஸ், ""என்னை அக்கரையில் சேர்த்து விடு,'' என்றான்.
""இறந்து போனவர்களின் ஆவியை மட்டுமே படகில் ஏற்றிச் செல்வேன். உயிருடன் இருப்பவர்களை ஏற்றிச் செல்ல மாட்டேன். அதற்குப் பாதாள உலக அரசரின் அனுமதி வேண்டும்,'' என்றான்.
- தொடரும்.

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.