ஏழு சிமியோன்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
00:00

ஆனால், அவர்கள் அப்போதும் தூங்கிக் கொண்டு தான் இருந்தனர்.
ஓர் இருண்ட நிலவறையில் அடைக்கப்பட்டான் சிமியோன். அவனுடைய கை, கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டன.
மறுநாள் காலை, தலையை வெட்டும் இடம். அதிகாரிகள் காத்திருந்தனர். மன்னர் ஜார் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இளைய சிமியோன் இழுத்து வரப்பட்டான். கொடிய பிரபு ஆணவமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தான்.
சிமியோனின் மனதில் ஒரு திட்டம் உதித்தது. மன்னர் முன் பணிவுடன் நின்றான்.
""ஓ, கருணை மிக்க மன்னவா! நான் சாகப் போகிறேன். எனக்குக் கடைசி விருப்பம் ஒன்று உள்ளது. அதை நிறைவேற்றுவது தொன்று தொட்டு நடைமுறையில் உள்ள வழக்கம். சாவதற்கு முன் என்னுடைய குழலை ஊதி, இசைக்க நான் ஆசைப்படுகிறேன். அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும்!'' என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டான்.
""வேண்டாம், மன்னவா! குழல் ஊத இவனை அனுமதிக்க வேண்டாம்!'' என்று அலறினான் கெட்ட பிரபு.
ஆனால் அரசர் சொன்னார், ""நம்முடைய முன்னோர்களின் நடைமுறைகளுக்கு எதிராக நான் செயல்பட மாட்டேன். உன்னுடைய இறுதி ஆசையை நீ நிறைவேற்றிக் கொள் சிமியோன். ஆனால், ஒன்று, விரைவாக முடிக்க வேண்டும்,'' என்றார்.
உடனே, குழலை உதடுகளில் பொருத்தி ஊதத் தொடங்கினான் இசை மேதை சிமியோன்.
எழுந்தது இன்னிசை. பள்ளத் தாக்குகளில் பரவியது. புல் வெளிகளைத் தாண்டியது. குன்றுகளில் எதிரொலித்தது. ஆறு சிமியோன்கள் தூங்கிக் கொண்டிருந்த கப்பலை எட்டி அவர்களின் காதுகளில் ரீங்காரமிட்டது. மறு நொடியில் விழித்தெழுந்தனர் சகோதரர்கள்.
""நம்முடைய தம்பி ஏதோ ஆபத்தில் இருக்கிறான்!'' என்று கத்தியபடி அரண்மனையை நோக்கிப் புயலாய்ப் பறந்தனர்.
கொலைக் களத்தில் கூர் வாள்களை ஓங்கியபடி நின்றனர் கொலையாளிகள். எந்த நொடியிலும் சிமியோனின் தலை சீவப்படலாம்! ஆ! அதோ அங்கே வந்து சேர்ந்து விட்டனர் ஆறு சிமியோன் களும்! சிங்கம் புலிகள் போல, ஜார் மன்னரைச் சூழ்ந்து கொண்டனர்.
""எங்களுடைய தம்பியை விடுதலை செய். ஜார் அழகி எலீனாவை அவனுக்குத் தந்து விடு. இல்லை என்றால்...'' என்று இடி முழக்கம் செய்தனர்.
ஜாருக்குப் பயம் வந்து விட்டது. ஏனெனில் சிமியோன்களின் திறமைகளைக் கண்கூடாகக் கண்டவர்.
""உங்களுடைய தம்பியையும், எலீனாவையும் உடனே அழைத்துச்செல்லுங்கள். அப்படி ஒன்றும் அதிசயமாக நான் அவளை விரும்பவில்லை!'' என்றார் சற்றே நடுங்கிய குரலில்.
அடுத்து, அழகி எலீனாவுக்கும் இளைய சிமியோனுக்கும், இனிதே திருமணம் நடந்தது. உலகமே அதுவரை கண்டிராத வகையில் தடபுடல் விருந்து! அனைவரும் வயிறு முட்ட உண்டனர். மனங் குளிர வாழ்த்தி பாடினர்.
மாப்பிள்ளை சிமியோன், தன் குழலை ஊதிக் குதூகலமான நாட்டியப் பாடல் ஒன்றை இசைத்தான்.
அதைக் கேட்டு மன்னர் ஆடினார். மணமகள் ஆடினாள். அமைச்சர்கள், பிரபுக்கள், பெண்-கள், குதிரைகள், மாடுகள் என ஒரே ஆட்டம் பாட்டம்தான்!
சதிகாரப் பிரபுவும் ஆடினான். ஆனால், வித்தியாசமான ஆட்டம், கடுமையான ஆட்டம், வேகம் குறையாத குதியாட்டம்! அவனுடைய உடம்பு சக்தி முழுவதும் இழந்து சக்கையானது. கண்கள் இருண்டன, கால்கள் பின்னின. தரையில் விழுந்தான், எழுந்திருக்கவே இல்லை. இறந்து போனான். மன்னரும் கூட இறந்து போனார். ஏழு சிமியோன்களும் அந்த நாட்டை ஆண்டனர். மூத்தவன் ஜார்மன்னராக முடிசூட்டிக் கொண்டான். மக்கள் இவர்கள் ஆட்சியில் இன்பமாக வாழ்ந்தனர்.
-முற்றும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.