அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கண்ணை பார், பேசு!


காலையில் படுக்கையில் இருந்து எழுவதில் தொடங்கி, இரவு மீண்டும் படுக்கையை விரிக்கும் வரை, ஒரு நாளில் நாம் எவ்வளவு தகவல் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பிறருடன் வார்த்தை உரையாடல்கள் மேற்கொள்வதுதான் தகவல் தொடர்பு என்பது இல்லை. நமது உடல், மொழி, சைகை, சிரிப்பு என சின்னச் சின்ன விஷயங்களும் நம்மை இந்த உலகத்துடன் எப்போதும் தொடர்பிலேயே வைத்திருக்கும். அந்தச் சமயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள்...
* எப்போதும் சின்ன புன்னகை ஒன்றை அணிந்திருங்கள்.
* பிறர் சொல்வதைக் கவனியுங்கள்; காது கொடுத்துக் -கே-ளுங்-கள்.
* பதில் மரியாதையை எதிர்பாராமல் பிறருக்கு மரியாதை செலுத்துங்கள்.
* அடிக்கடி எதிராளியின் கண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளத் தவறாதீர்கள்.
* உங்களிடம் யாராவது கேட்டாலொழிய அறிவுரை வழங்காதீர்கள்.
* மற்றவர் முன் ஒருவரைப் பாராட்டுங்கள். அவரையே கண்டிப்பது என்றால், தனிமையில் கண்டியுங்கள்.
* இந்த உலகத்திலேயே சிறந்த இசையாக ஒவ்வொருவருக்கும் தோன்றுவது, அவரவரின் பெயர் ஒலிக்கும் ஓசைதான். வஞ்சனை இல்லாமல் எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அவர்களைப் பெயர் சொல்லி அழையுங்கள்.
* எப்போதும் தற்பெருமையோ, அதீத ஆக்ரோஷத்தையோ வெளிப்படுத்தாதீர்கள். நமது 80 சதவீத தகவல் தொடர்புகள் ஒரு வார்த்தை உரையாடல் கூட இல்லாமல் மேற்கொள்ளப்படுபவை. அவற்றில் சொதப்பினால், அது ஒட்டு மொத்தமாக நமது செயல்பாடுகளையே பாதிக்கும்!

குக்கர் - குக்கி!

குக்கரின் அடிப்பகுதியில் படியும் கரியைப் போக்க அதைக் கவிழ்த்துப் போட்டுத் தேய்க்க கூடாது. அப்படித் தேய்த்தால் மேல்பகுதி தரையில் உராயும் போது காஸ்கட் வளையம் விரிந்து விடும்.
குக்கரில் காஸ்கட் தளர்ந்து போய்விட்டால் ப்ரிட்ஜில் ஒருநாள் வைத்திருந்து பிறகு போட்டுப் பார்த்தால் சரியாக இருக்கும்.
குக்கரின் அடியில் பழுப்பு நிறம் சேர்ந்து விட்டால், அதை எலுமிச்சைத் தோலால் தேய்த்து விட்டு பிறகு மாத்திரைகள் மடித்து வரும் அலுமினியம் பேப்பரால் தேய்த்தால் மிகவும் பளிச்சென்று ஆகிவிடும்.

கலப்படமா கண்டுபிடிக்கலாம்!


கேசரி பருப்புகளில் கலப்படம் செய்தல் சிறிதளவு பருப்பு 50 ml.of dil.HCL சேர்க்கவும். பின்-பு கொதி நீரில் சுமார் 15 நிமிடம் வைக்கவும். பிங்க் கலர், தோன்றினால் கேசரி பவுடர் இருப்பதை தெரிவிக்கும்.
நெய்யில் பிசைந்த உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு முதலியன கலப்படம் செய்தல்.
5 ml., மாதிரியை ஒரு சோதனைக் குழாயில் கொதிக்க வைக்கவும். குளிர வைத்து ஒரு சொட்டு அயோடின் கரைசல் சேர்க்கவும். நீல நிறம் ஸ்டார்ச் இருப்பதை தெரிவிக்கிறது. கொதிக்க வைத்ததும் கலர் மறையும். குளிர வைத்தால் கலர் மீண்டும் தோன்றும்.
கோதுமைமாவில் அதிகமாக மணல் அல்லது தூசி சேர்த்து கலப்படம் செய்தல். சிறிதளவு மாதிரியை சுமார் 10ட்டூ. கார்பன் டெட்ரா குளோரைடுடன் குலுக்கி நிறுத்தவும். கல் மற்றும் மணல் துகள்கள் அடியில் சேரும்.அதிகப்படியான தவிடை கோதுமை மாவில் கலப்படம் செய்தல் நீரின் மேல் தூவவும், மேற்பரப்பில் தவிடு மிதக்கும்.

விசைப்பலகை பயன்பாட்டு கட்டளைகள்!


சென்னை சைபர் க்ரைம் தடுப்பும் பிரிவும், ட்விட்டர் இணையதளத்தில் இயங்குகிறது. சமூக வலைத் தளங்களில் இயங்குபவர்கள் பாதுகாப்பாக இயங்க பாயிண்டுகளை பட்டியலிடுகின்றனர்.
*இணையங்களில் வாசிக்கும் எதையும் ஆராயாமல் நம்பிவிடாதீர்கள்.
* விஷயம் தெரியாமல் எதையாவது டவுன்லோடு செய்துவிடாதீர்கள். சில சாப்ட்வேர்கள் மூலமாக, உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் அனைத்தையுமே உளவு பார்க்க முடியும்.
* உங்களுக்கு சம்பந்தமில்லாத இ-மெயிலோ, தனிச் செய்தியோ வந்தால் அதற்கு பதிலளிக்காதீர்கள்.
* செய்திகளைப் பகிர்வதில் கவனம் தேவை. நீங்கள் பகிர்வதை உலகமே பார்க்கும் என்கிற எண்ணத்தோடு செயல்படுங்கள்.
* சண்டைகளில் ஈடுபடாதீர்கள். நேரடி வாழ்வில் நாம் பயன்படுத்தாத சொற்களை இணையச் சண்டைகளில் பயன்படுத்துகிறோம். உங்களோடு யாரேனும் மோசமாக சண்டையிட்டாலும் அவர்களை சட்டை செய்யாதீர்கள்.
*இணையத்தில் நீங்கள் எதைச் செய்தாலும் அதை திரும்பப் பெறவே முடியாது. அழித்தாலும் அது சர்வரில் இருக்கும். ஏதோ அவசரத்தில் நீங்கள் பகிரும் படமோ, செய்தியோ, கருத்தோ பத்தாண்டுகள் கழித்தும் இணையத்தில் இருக்கப் போகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!


இது, சுண்டைக்காய் வேப்பம் பூ துவையல் செய்முறை நேரம்.
தேவையானவை: சுண்டைக்காய்-20 (எண்ணிக்கையில்) வேப்பம் பூ-ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் வற்றல்-மூன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம் பருப்பு-2 ஸ்பூன், உப்பு-தேவையான அளவு, இஞ்சி-ஒரு சிறுதுண்டு, எண்ணெய்-2 ஸ்பூன்.
செய்முறை: சுண்டைக்காயை தனியாக எண்ணெய் விட்டு வறுக்கவும். பொன்னிறமாக வேப்பம்பூவையும் வறுக்கவும். உளுத்தம் பருப்பையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி மிளகாய் வற்றலுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். முதலில் உளுத்தம் பருப்பை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிய உடன் சுண்டைக்காய், வேப்பம் பூ, மிளகாய் வற்றல், புளி, இஞ்சி எல்லாம் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்தத் துவையலை போட்டு சாப்பிடலாம். வயிறு மந்தமாக இருந்தால் இந்தத் துவையல் சாப்பிட்டால் வயிறு சரியாகிவிடும். பித்தத்திற்கு மிகவும் நல்லது.
என்றும் அன்புடன் அங்குராசு.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.