திறமையான திருடன்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
00:00

வாமனன் என்ற வணிகர் பொருள்களை வாங்குவதற்காக, நிறைய பணத்துடன் புறப்பட்டார். இரவு நேரம் வந்தது. வழியில் இருந்த சத்திரம் ஒன்றில் தங்கினார். அங்கே நிறைய பேர் தங்கி இருந்தனர். எல்லாரும் சாப்பிட்டு விட்டுப்படுத்தனர்.
யாராவது தன் பணத்தைத் திருடி விடுவார்களோ என்ற அச்சத்தில், அவருக்குத் தூக்கம் வரவில்லை. நள்ளிரவு நேரம் வந்ததும், தன்னை மறந்து தூங்கிவிட்டார்.
திடீரென்று அவருக்கு விழிப்பு வந்தது. இடுப்பில் கை வைத்துப் பார்த்தார். அங்கே பணப்பை இல்லாததை அறிந்து திடுக்கிட்டார்... அங்கே உள்ளவர்களைப் பார்த்தார். எல்லாரும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
"இவர்களில் எவனோ ஒருவன்தான் திருடன். அவனை எப்படி கண்டுபிடிப்பது' என்று சிந்தித்தார்.
திருடனுக்கு கண்டிப்பாகத் தூக்கம் வராது. தூங்குவது போல நடிப்பான். அதை வைத்து அவனை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
அங்கே தூங்கிக் கொண்டிருந்த ஒவ்வொருவர் மார்பிலும் கை வைத்துப் பார்த்தார். ஒருவரின் இதயம் மட்டும் படபடவென்று அடித்தது, அவருக்குத் தெரிந்தது.
"இவன்தான் திருடன். நம்மிடம் சிக்கிக் கொண்டான். இனி இவனால் தப்ப முடியாது. இந்த இரவு நேரத்தில் எல்லாரையும் எழுப்பி எதற்காகத் தொல்லை தர வேண்டும்? பொழுது விடிந்ததும் பார்த்துக் கொள்வோம். இவனை அடையாளம் கண்டுபிடிக்க என்ன செய்யலாம்' என்று சிந்தித்தார். அவன் தலைமுடியைச் சிறிது வெட்டி எடுப்போம். இவனால் தப்பிக்க முடியாது என்று நினைத்தார்.
தான் வைத்திருந்த கத்தியை எடுத்த அவர், அவன் தலைமுடியில் சிறிதளவு அறுத்து எடுத்தார்.
பிறகு அவர் படுத்துத் தூங்கத் தொடங்கினர்.
முடி அறுபட்டவன் தன் திருட்டு வெளிப்பட்டதை அறிந்தான். "பொழுது விடிந்தால் எல்லாருக்கும் தெரிந்து விடும். தப்பித்து வெளியே செல்லவும் வழி இல்லை. சத்திரத்து கதவு பூட்டப்பட்டு உள்ளது. என்ன செய்வது' என்று சிந்தித்தான்.
நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. கத்தரிக்கோலை எடுத்த அவன், அங்கே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தலை முடியை எல்லாம் ஒன்று போல வெட்டினான்.
அதே போலத் தன் தலை முடியையும் வெட்டிக் கொண்டான். இனி யாராலும் தன் திருட்டைக் கண்டுபிடிக்க முடியாது என்று தூங்கத் தொடங்கினான்.
பொழுது விடிந்தது. விழித்த வாமனன் சத்திரத்துக் காவலனிடம் சென்று, நடந்ததை எல்லாம் சொன்னார்.
""நான் திருடனின் தலைமுடியைக் கத்தியால் வெட்டி எடுத்து உள்ளேன். அதை வைத்துத் திருடனை எளிதாக கண்டுபிடித்து விடலாம்,'' என்றார்.
காவலனுடன் வந்த அவர் அங்கே இருந்த அனைவரின் தலைகளையும் பார்த்தார். எல்லார் தலைமுடியும், ஒழுங்காக வெட்டப்பட்டு இருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டார்.
தன்னை விட திருடன் திறமைசாலியாக உள்ளான். நான் தூங்கியதும், அவன் எல்லாருடைய தலைமுடியையும் வெட்டி உள்ளான். அவனைக் கண்டுபிடிக்க வழி இல்லையே... என்று குழம்பினார்.
அவரின் நிலையைப் பார்த்த காவலன், ""இங்கே உள்ள நீதிபதி திறமையானவர். எப்படியும் திருடனைக் கண்டுபிடித்து விடுவார். நானே எல்லாரையும் அழைத்துக் கொண்டு நீதிமன்றம் வருகிறேன்,'' என்றான்.
அவர்கள் எல்லாரும் நீதிமன்றம் வந்தனர்.
நீதிபதியை வணங்கிய வாமனன் நடந்ததை எல்லாம் விளக்கமாக சொன்னார்.
இதைக் கேட்ட நீதிபதி, ""இவர் திறமையானவர் என்றால், திருடன் இவரை விட திறமையானவனாக இருக்கிறான். எப்படித் திருடனைக் கண்டுபிடிப்பது,'' என்று சிந்தித்தார்.
அறிவு நிறைந்த அவருக்கு நல்ல வழி ஒன்று தோன்றியது.
அங்கிருந்த ஒவ்வொருவரையும் பார்த்து, ""நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
ஒருவர், ""நான் வணிகர்,'' என்றார்.
இன்னொருவர், ""நான் தச்சன்,'' என்றார்.
அடுத்தவர், ""நான் சிற்பி, '' என்றார்.
நான்காமவர், ""நான் தையல்காரன்,'' என்றார்.
அடுத்தவர், ""நான் உழவன்,'' என்றார்.
ஆறாமவர், ""நான் புலவன்,'' என்றார்.
அவர்களில் தையல்காரனைப் பார்த்து, ""நீதான் திருடி இருக்கிறாய். உண்மையை ஒப்புக் கொண்டு அவர் பணப் பையைத் தந்துவிடு. உனக்குக் குறைவான தண்டனையே கிடைக்கும்,'' என்றார்.
""நான் திருடவில்லை,'' என்று சாதித்தான்.
""நீ திறமையாகத் திருடி இருக்கலாம். ஆனால், என்ன முயற்சி செய்தாலும் உண்மையை மூடி மறைக்க முடியாது. அது எப்படியும் வெளிப்பட்டே தீரும்.
உன் தொழில் திறமையே நீ திருடன் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டது. தையல்காரனாகிய உன்னால் மட்டுமே இவர்கள் முடியை ஒன்று போல வெட்டி இருக்க முடியும். வேறு யாராலும் இப்படிச் செய்திருக்க முடியாது. இனி நீ தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது,'' என்று மிரட்டினார் அவர்.
தன் திருட்டு வெளிப்பட்டதை அறிந்த அவன் தலை கவிழ்ந்தான். தான் திருடி வைத்திருந்த பணப்பையை நீதிபதியிடம் தந்தான்.
அவனுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தார்.
அந்தப் பணப்பையை வாமனனிடம் தந்தார். வாமனன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
remo - chennai  ( Posted via: Dinamalar Android App )
08-ஜன-201309:38:58 IST Report Abuse
remo nice story
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.