ஒரு ஆன்மிகக் குருவைச் சந்தித்தான் பாண்டியன்.
""சுவாமி, நான் இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புகிறேன். அதற்காக, நான் வாழும் நாளிலேயே, என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டேன். இதற்காக, நான் என்னென்ன விரதங்கள் இருக்க வேண்டும்? எந்தெந்த நாட்களில் இருக்க வேண்டும்? எந்த மாதிரியான யாகங்கள் செய்ய வேண்டும்? எந்தெந்த புண்ணியத் தலங்களுக்கெல்லாம் செல்ல வேண்டும்? எந்தெந்த புண்ணியத் தீர்த்தங்களில் எல்லாம் புனித நீராட வேண்டும்? யார் யாருக்கு என்னென்ன தரும காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டும்? என்பதைத் தெளிவாக, எடுத்துக் கூறுங்கள்,'' என்று அவரை வணங்கி கேட்டுக் கொண்டான்.
குரு அவனைக் கூர்ந்து கவனித்தார்.
""உன்னைப் பெற்ற தாய் உயிரோடு இருக்கிறாரா?'' என்று கேட்டார்.
""இருக்கிறார்... ஆனால், நான் அவர்களோடு இல்லாமல், என் குடும்பத்தோடு தனியாக இருக்கிறேன். நான் அவர்களை சரியாக கவனிப்பதில்லை,'' என்றார்.
""உன் தாய்தான் சொர்க்கம். நீ அவர்களை கவனிக்காமல் இருப்பதால், இப்போது நீ மிகப்பெரிய பாவியாக இருக்கிறாய். இப்போது நீ இறந்தால் நிச்சயம் நரகத்துக்குத்தான் செல்வாய். எந்த யாகமும், தருமமும், வணக்கமும், புனிதமும் உன்னை சொர்க்கத்துக்குக் கொண்டு செல்லாது!''
""ஐயோ! சுவாமி!''
""ஆமாம்! உன்னை ஈன்றெடுத்த உன் தாய்தான் உன் சொர்க்கம். நீ சற்று முன்னே சொன்ன அத்தனை நல்ல காரியங்களையும் இன்முகத்தோடு, உள்ளன்போடு அவருக்குச் செய்... நீ நிச்சயம் சொர்க்கம் செல்வாய்!'' என்றார் குரு.
சாட்டையில் அடிவாங்கியதைப் போல் உணர்ந்தான் பாண்டியன். உடனே, தாயின் இருப்பிடம் நோக்கி ஓடினான்.
***
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.