கறிவேப்பிலை பற்றி தெரிஞ்சிக்கலாமா குட்டீஸ்...!
சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படுவதில் கறிவேப்பிலையும் ஒன்று. இது மலைகளிலும், காடுகளிலும், வீட்டில் தோட்டங்களிலும் பயிராகக் கூடிய ஒரு பெருஞ்செடியின் வகையை சார்ந்தது.
கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு. அவை காட்டு கறிவேப்பிலை; நாட்டு கறிவேப்பிலை. காட்டு கறிவேப்பிலை மருந்தாகவும், நாட்டு கறிவேப்பிலை உணவாகவும் பயன் படுகிறது.
காட்டு கறிவேப்பிலை பெரிதாக, கசப்பு உள்ளதாக இருக்கும். நாட்டு கறிவேப்பிலை சிறிதாகவும் இனிப்பும், துவர்ப்பும், மணமும் உள்ளதாகவும் இருக்கும்.
கறிவேப்பிலையில் தாதுப்பொருள், நார்ச்சத்து, வைட்டமின் போன்றவை அடங்கியுள்ளன. இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், இளநரையை தடுக்கும். வயிற்று கோளாறுகளால் அவதிப்படுவர்கள் கறிவேப்பிலை பொடியுடன், வெந்தயம் அரைத்து சேர்த்து சாப்பிடலாம்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.