போலந்து நாட்டு துறவியாகிய ஹேபர்ட்ஸ் கெய்ம் என்பவர் எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். அவரைச் சந்திப்பதற்காக வெளிநாட்டிலிருந்து பேராசிரியர் ஒருவர் வந்தார்.
துறவி தங்கியிருந்த அறையைப் பார்த்தார் அவர். அங்கே சில நூல்களும், கயிற்றுக் கட்டிலும், சில பாத்திரங்களும் தான் இருந்தன.
வியப்பு அடைந்த அவர், ""துறவியாரே! உங்களுக்குத் தேவையான பொருள்கள் இங்கே இல்லையே... அவற்றை எல்லாம் எங்கே வைத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு துறவி ""இங்கே உங்கள் பொருள்களும்தான் இல்லை'' என்றார்.
""நான் இங்கே விருந்தினனாக வந்திருக்கிறேன். என் பொருள்கள் எப்படி இங்கே இருக்க முடியும்?'' என்று கேட்டார் அவர்.
""அன்பரே! நானும் இந்த உலகத்தில் விருந்தினனாகத்தான் வந்திருக்கிறேன்,'' என்று பதில் தந்தார் துறவி.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.