இது உங்கள் இடம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2013
00:00

காதலர்களே உஷார்...


என் தோழி, ஆண் நண்பருடன், நகரிலுள்ள பூங்கா ஒன்றுக்கு சென்றிருக்கிறாள். இருவரும், அத்துமீறி விளையாடிக் கொண்டிருந்த சமயம், எவனோ ஒரு இளைஞன், தன் கேமரா மொபைலில், அதை படமாக்கி எடுத்திருக்கிறான். சில தினங்களுக்குப் பின், மீண்டும் அதே பூங்காவுக்கு, தோழி, ஆண் நண்பருடன் சென்ற போது, இருவர் தம்மை அறிமுகம் செய்து, முன்பு தாங்கள் எடுத்த படத்தை, பிரின்ட் போட்டு காண்பித்திருக்கின்றனர்.
அதிர்ந்து போன தோழியும், அவளது ஆண் நண்பரும் பதறியபடி, அழுதனர். அவர்களிடம் பேரம் பேசி, தோழியின் இரண்டரை பவுன் செயின், மோதிரம், நண்பரின் செயின், வாட்ச், ரிங், இருவரது மொபைல்போன் உட்பட, பணமும் கணிசமாக பெற்றுக் கொண்டு, படத்தையும் கொடுத்து, மொபைலில் அழித்து விட்டோம் என்று சொல்லி, மொபைலையும், இவர்களிடமே கொடுத்து, "எஸ்கேப்' ஆகியிருக்கின்றனர். வெளியே தெரிந்தால் கேவலம் என்று, மூடி மறைத்துள்ள தோழி, நகையை தொலைத்ததாக கூறியிருக்கிறாள். பெரும் பிரச்னை <உருவாகி, தற்போது தப்பித்து விட்டாள்.
தோழியரே... பொது இடங்களில் கொஞ்சல், குலாவல் என, ஆண் நண்பருடன் வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
காதலர்களே... இவ்விஷயத்தில், உஷா ராய் இருங்கள்.
— எஸ்.மாரியம்மாள், திருநெல்வேலி.

கணவர்களை நம்பாத மனைவியர்!


நான் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். காப்பீடு செய்யும் ஒருவர், தன் காப்பீடு தொகைக்கு வாரிசுதாரராக, ஒருவரை நியமனம் செய்ய வேண்டியது நடைமுறை அவசியம். இந்த வகையில், ஆண்கள் காப்பீடு செய்யும் போது, திருமணமான ஆண்களில், 95 சதவீதம் பேர், தங்கள் மனைவியைத்தான் வாரிசுதாரர்களாக பதிவு செய்கின்றனர். அதேசமயம், திருமணமான பெண்கள் காப்பீடு செய்யும் போது, குறைந்தபட்சம், 75 சதவீதம் பெண்கள், கணவனை தவிர்த்து, அண்ணன், அக்கா, அம்மா, அப்பா இப்படி உறவு முறைகளில் உள்ள வேறு யாரையாவது தான், வாரிசுதாரர்களாக பதிவு செய்கின்றனர்.
இந்த நிலைக்கு காரணம்... தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், கிடைக்கும் பணத்தை மனைவி பெற்றுக்கொண்டு, குடும்பத்திற்கு உபயோகமாக, ஏதாவது ஒருவழியில் பயன்படுத்திக் கொள்வாள் என்று, ஒரு ஆண் நம்பிக்கை வைத்து செயல்படுவதைப் போல், மனைவியாகிய ஒரு பெண், காப்பீடு செய்யும்போது, தமக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதற்காக கிடைக்கும் பணம், கணவன் கைக்கு போவதை விரும்பவில்லை என்று தெளிவாகிறது.
இதிலிருந்து தெரியவரும் உண்மை, சமூகத்தில் இன்று, "கணவன் - மனைவி' என, தம்பதியராக குடும்பம் நடத்தி வந்தாலும், பரஸ்பர புரிதலும், நம்பிக்கையும் ஊசலாட்டமாகத்தான் உள்ளதென்பதோடு, பெரும்பாலான கணவன்கள், மனைவியின் நம்பிக்கைக்கு உரியவராக இல்லாமலோ, அதற்கேற்றாற்போல், அவர்களின் நடவடிக்கை இல்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. இதுபோன்ற போக்கு தொடர்வதென்பது, எதிர்காலத்தில் கணவன் - மனைவி - குடும்பம் என்கிற அமைப்பையே குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு கணவனும், குடும்ப பொறுப்போடும், குறிப்பாக மனைவியின் நம்பிக்கைக்குரியவராகவும் தங்கள் செயல்பாட்டை மாற்றிக் கொள்வதும், சில இடத்தில் கணவன் பொறுப்புணர்வுடன் இருந்தாலும், அதை மனைவி புரிந்துகொள்ளாமல் மனதில், ஒரு அச்சவுணர்வுடனோ, வெறுப்புணர்வுடனோ, சந்தேகப்பார்வையுடனோ கணவனை தவிர்த்து, மற்றவர்கள் மீது நம்பிக்கைக் கொள்ளும் போக்கை மாற்றிக் கொள்வதும் மிக அவசியமானதும், காலத்தின் கட்டாயமுமாகும்.
ஆர்.ரகுவர்மன், கபிஸ்தலம்.

குடிநீர் தர மறுத்த கிராதகன்!


தொலைதூர ரயில் பயணங்களின் போது, நான் சைடு லோயர்பெர்த் ரிசர்வ் செய்து கொள்வேன். இரண்டு லிட்டர் பாட்டிலில் ஜின்னும், இன்னொரு இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டிலில், வோட்காவும் கலந்து வைப்பேன். ஒன்றை பெட்டிக்குள் பத்திரப்படுத்திக் கொண்டு, இன்னொன்றை குடிக்க வைத்துக் கொள்வேன்.
ஒரு வாய் குடிக்க, இருபது பக்கம் வாசிக்க செய்வேன். முழு பாட்டிலும் தீர, நான்கு மணி நேரமாக்குவேன். அந்த இடைவெளியில், நான்கு புத்தகங்களை வாசித்து விடுவேன். ஒரு தடவை என் பெட்டியில், ஒரு கணவன், மனைவி நான்கு வயது மகனும் பயணித்தனர். பொடியன், என் சரக்கு கலந்த வாட்டர் பாட்டிலை கேட்டு, கலாட்டா பண்ண ஆரம்பித்து விட்டான்.
"கொஞ்சுண்டு அவனுக்கு குடிக்க தாங்க சார்...' என்று, கணவன், மனைவி, இதர பயணிகளும், என்னை கெஞ்சினர். குட்டு வெளிப்பட்டு விடும் என்ற பயத்தில், மறுத்தேன்.
தொடர்ந்த களேபரத்தின் ஒரு கட்டத்தில், அம்மாகாரி என் பாட்டிலை பிடுங்கி, சிறிது குடித்து விட்டாள். துப்பவில்லை, வாந்தி எடுக்கவில்லை. கணவனிடம் திரும்பி, "உங்க சனியன் பிடிச்ச வேலையை செஞ்சிருக்கிறார். (மகனிடம் திரும்பி) அச்சுக் குட்டி... அந்த மாமா தண்ணி, ஆயித்தண்ணி. அடுத்த ஸ்டேஷனில் நிக்கட்டும். வேற தண்ணி வாங்கித் தருகிறேன்!' என்றாள்.
அசடு வழிந்தேன். அதன்பின், சரக்கு கலந்த ஒரு பாட்டிலும், சரக்கு கலக்காத ஒரு பாட்டிலும், எடுத்து போக ஆரம்பித்தேன். ஹி...ஹி!
ஓ.ஜம்புலிங்கம், கோவை.

ஏ.டி.எம்., கொள்ளையை தடுக்க...

கடன் அட்டைகளுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருந்த ஏ.டி.எம்., வசதி, தற்போது அனைத்து வங்கிப்பணி, பணபரிவர்த்தனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இயந்திரத்தில் கார்டை நுழைத்து, ரகசிய எண்ணை அழுத்தி, பணம் எடுக்கும் சில நொடிகளில், கார்டின் ஜாதகமும், ரகசியக் குறியீட்டு எண்ணும், திருடர்களால் களவாடப்பட்டு, அதன் மூலம் லட்சக்கணக்கில் திருடப்படும் சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்துள்ளன.
"சைபர் க்ரைம்' போலீசும் கொள்ளையைத் தடுக்க, "பின் எண்ணை' அவ்வப்போது மாற்றச் சொல்லி அறிவுறுத்துகிறது. ஆனாலும், கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாக@வ உள்ளன. இதை முற்றிலும் தடுக்க, ஒரு உபாயம் உள்ளது. மிஷினில் கார்டை நுழைத்து, பின் எண்ணையும் அழுத்திய பின், வந்திருப்பவர் கார்டின் உண்மையான உரிமையாளர் தானா என்பதை அறிய, இயந்திரம் அவரது பிறந்த தேதி மற்றும் தந்தையின் பெயரை மிஷினில் அழுத்தச் சொல்லலாம்.
இதனால், பரிவர்த்தனைக்கு, ஓரிரு நிமிடங்கள் கூடுதலாகலாம். ஆனால், நம்முடைய அட்டையின் ரகசிய எண்ணும், மற்ற விவரங்களும் திருடப்பட்டு, அதன் மூலம் நிகழும் கொள்ளை தவிர்க்கப்படும். வங்கிகளும், காவல் துறையும் கவனத்தில் கொள்ளுமா?
ஜெ.கும்பகர்ணன், சென்னை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthil - Houston,யூ.எஸ்.ஏ
10-ஜன-201323:29:23 IST Report Abuse
senthil கௌசல்யா அம்மா, ஆண்கள் மட்டும் இப்டி பண்ணல பொம்பள புள்ளகளும் இந்த சேட்டைய தான் பண்ணுதுங்க. பொதுவா பொண்ணுககிட்ட யாரும் தண்ணி பாட்டில் இரவல் வாங்க மாட்டாங்க...அது ஒரு பிளஸ் அதுங்களுக்கு...ரெண்டு மூணு காலேஜ் பொண்ணுக ஒன்னா ட்ரைன்ல போனா கவனிங்க ... ஒரே பாட்டில்ல எல்லாமும் மாத்தி மாத்தி குடிக்கும்... அந்த திருட்டு முழியும் ஒவ்வொரு முழுங்குக்கும் மூஞ்சி போற அஷ்ட கோணலையும் சொல்லாமலே சொல்லும் பாட்டில்ல இருக்கறது வெறும் "தண்ணின்னு" :)
Rate this:
Share this comment
Cancel
R Bhaskaran - Abu Dhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜன-201318:49:06 IST Report Abuse
R Bhaskaran குடிநீர் தர மறுத்த கிராதகன், இதை படிச்சிட்டு ஜாலியா சிரிங்க, அதவிட்டுட்டு கமன்டேல்லாம் எழுத வேண்டாம்,
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - Blore,இந்தியா
09-ஜன-201312:52:45 IST Report Abuse
நக்கீரன் ரகுவர்மன் அவர்களே நீங்க ஏன் இப்படி நினைக்க கூடாது? என்ன தான் கணவன் நம்பிக்கைக்கு உரித்தாக நடந்து கொண்டாலும் இந்த பெண்கள் சாகும் வரை தன் குடும்பம், அப்பா & அம்மா தான் பயனடைய வேண்டும் என்றே தான் நினைக்கிறார்கள் என்று??
Rate this:
Share this comment
Cancel
Kalakkal Mano - Chennai,இந்தியா
07-ஜன-201313:53:23 IST Report Abuse
Kalakkal Mano அனைத்தும் அருமையான விஷயங்கள்.. except that drinking in train... Drinking itself its a wrong thing.. that too in train...
Rate this:
Share this comment
Cancel
- shenzhen,சீனா
07-ஜன-201312:22:43 IST Report Abuse
 இந்தியாவில் தொடாமல் தான் காதலிக்க வேண்டுமா?கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்து கொள்வது குற்றமா? காதலிப்பவர் அரசல் புரள ஆக பார்க் இல் கட்டி பிடிப்பதும் குற்றமா?இதை விளக்கு பிடித்து படம் எடுத்தவனை தண்டிப்பதற்கு சட்டம் இல்லையா? உண்மையாக காதலிப்பவர் துணிந்து "என்ன செய்ய முடியுமோ செய்து பார்" என்று சொல்வதற்கு சட்டமும் சமூகமும் அவர்களுக்கு துணிவும் வாராமைக்கு யார் பொறுப்பு? அரை கிழவன் (30 வயது) ஆகும் வரை அவனவன் காசு,காசு என்று வீதியில் ஓடுவது எனக்கென்னமோ சரியாக படவில்லை.யோசித்து சட்டம் போடுங்கள்.,
Rate this:
Share this comment
தமிழன் - சென்னை,இந்தியா
07-ஜன-201315:13:49 IST Report Abuse
தமிழன்சரியான கருத்து இதைச் சொன்னால் இங்குள்ள 99% பேர் சண்டைக்குத் தான் வருவர்....
Rate this:
Share this comment
Stay Hungry. Stay Foolish. - La Jolla,யூ.எஸ்.ஏ
09-ஜன-201300:23:20 IST Report Abuse
Stay Hungry. Stay Foolish.அய்யா பெரியவரே, பொது இடங்களில் முத்தம் கொடுத்து கொள்வதும் கட்டி அணைப்பதும் ஒரு சாதாரண நிகழ்வு என்ற அளவுக்கு நம் சமூகம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை. ஒரு வாதத்திற்கு உங்கள் கருது சரியாக இருப்பினும் நடைமுறைக்கு இன்னும் ஒவ்வாதது. அதனால் அதுவரை கொஞ்சம் அடக்கி வாசிப்பது உங்களுக்கு தான் நலம் பயக்கும். நானும் திருமணத்திற்கு முன் பெண் தோழிகளிடம் அனைத்தும் பண்ணியுள்ளேன். ஆனால் அதை எல்லாம் பொது இடங்களில் மற்றவர் முன்னிலையில் செய்ததில்லை. நான்கு சுவற்றுக்குள் மட்டுமே....
Rate this:
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
07-ஜன-201309:45:43 IST Report Abuse
Vaal Payyan கண்ணியம் இல்லாத காதல் இப்படி தான் முடியும் ... அவர்கள் கொடுத்த விலை காதுலுக்கு இல்லை காமத்துக்கு ... இரண்டாவது கட்டுரை அருமை ... நூற்றுக்கு நூறு உண்மை ... ரயிலில் குடிப்பதே தவறு .. அதில் இந்த அதி புத்திசாலிதனம் தேவையா நண்பரே
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
07-ஜன-201308:12:47 IST Report Abuse
காயத்ரி பார்வை மொழி சொல்லாத பல கதைகளைச் சொல்லுமே, மெளனமொழி காதலர்களின் சொல்லாத சங்கீதத்தை இசைக்குமே...பொது இடங்களில் கண்ணியம், கட்டுப்பாடு, நிதானத்துடன் இருக்கும்...உண்மையான காதல் சதை சார்ந்ததாக மட்டும் இருக்காது, காதலர்கள் மட்டுமில்லாமல் கணவர், மனைவியும் வெளி இடங்களில் நாகரிகமாகப் பழகுதல் நலம், பெண்கள் ஆபாச உடை அணிந்தோ அரை குறையாகவோ புகைப்படங்கள் எடுத்து அழிப்பதும் பிரச்சினைக்குள்ளானது, எனவே எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.அந்தரங்கம் புனிதமானது, அதனை அம்பலத்தில் ஏற்றுவது தவறு.
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
06-ஜன-201322:22:39 IST Report Abuse
Sami காமம் தவிர்த்து காதல் உணர்வு இன்றைய சமூகத்தில் இருக்குமெனில் அது இப்படி பொது இடங்களின் அசிங்கபடவேண்டியதில்லை. புரிதல் தவிர்த்து புணர்தல் நோக்கில் மறைவிடம் தேடி அலையும் பேய்கள். மனங்களும், குணங்களும் மாசுபடர்ந்த இக்காலங்களில் சுயதேவைகள் மட்டும் சுவையாக இருக்கும். யாருக்கும் சொல்லி திருத்த பிறக்கவில்லை யாம், நடப்பவை கண்டு மனம் பொருக்கவுமில்லை யாம். மிக மோசமாக எழுத தோன்றுகிறது. இருப்பினும் கண்ணியம் கருதி சிலவரிகள் மட்டும்...உண்மைகாதல் என்பது மேம்போக்கான சுயபச்சாதாபம். ஈன்றவர் முன் மூடிமறைத்தாலே அதன் உண்மை விளங்கிடும். நாகரீக உலகம். செய்வர் செய்யட்டும், பார்ப்பவர் பார்க்கட்டும். மரபும், மானமும் உண்மையும், உணர்வுகளும், உறவுகளும் இவற்றோடு இணைந்த நல இல்வாழ்க்கையும் சமாதி ஆகி பலகாலம் ஆகிவிட்டன. எதோ வாழ்கிறோம். எதோ செய்கிறோம் இறக்கும் வரை இனிக்கட்டும் இருக்கும் வாழ்க்கை.
Rate this:
Share this comment
Cancel
Madhumita - madurai,இந்தியா
06-ஜன-201319:54:46 IST Report Abuse
Madhumita ஆர்.ரகுவர்மன், கபிஸ்தலம் அவர்கள் இன்சூரன்ஸ் பற்றி சொன்னார். இது முற்றிலும் உண்மை என்று சொல்ல முடியாது. நான் இன்சூரன்ஸ் எடுக்கும் போது சமர்ப்பிக்கும் ஆவணங்களில் என் தந்தையின் பெயர்தான் இருந்தது. வேறு வழி இல்லாமல் என்ன தந்தையில் பெயர்தான் ஒப்புக்கொண்டேன். அவர்கள் சொன்னது கெசட்டில் கணவர் பெயரை மாற்றிவிட்டு ஆவணத்தில் மாற்றும்படி அறிவுறுத்தினார்கள். ஆண்கள் இன்சூரன்ஸ் எடுப்பது மிகவும் எளிது. பெண்கள் இவர்தான் என் கணவர் என்று சொன்னால்கூட இன்சூரன்ஸ் கம்பனிகள் நம்புவது இல்லை. நாங்கள் என்ன செய்வது. தவறு யார்மீது.. பெண்கள் மீதா அல்லது இப்படிப்பட்ட இன்சூரன்ஸ் கம்பனிகள் மீதா.
Rate this:
Share this comment
Cancel
News Commitor - chennai,இந்தியா
06-ஜன-201311:36:29 IST Report Abuse
News Commitor ஓ.ஜம்புலிங்கம், உங்க விசயத்தலைப்புல நீங்க "கிராதகன்" ஆயிட்டீங்க. நீங்க கொஞ்சம் குடிச்சாலும் குடிகாரன் தான், என்ன மொடாக்குடிகாரன் இல்லை அவ்வளவுதான். ஆக நீங்க ரயில்வே ரூல்ஸ மீறிட்டீங்க. பையன் அதே "தண்ணி"ய கேட்டதும், அம்மா உங்கட்டயிருந்து புடுங்கி அத குடிச்சது எல்லாம் நம்புறதுக்கு கொஞ்சம் யோசனையாவே இருக்கு. அதெல்லாம் இருக்கட்டும், "தம்பி, எனக்கு வயிறு சரியில்ல, டாக்டர் ஒரு மருந்துப் பொடிய குடுத்துருக்காரு அத தண்ணியில கலந்திருக்கேன், நீ குடிக்ககூடாது.." நிலமைய சுருக்கமா சமாளிச்சிருக்கலாம். அடுத்தது "ஏ.டி.எம்., கொள்ளையை தடுக்க" கும்பகர்ணன் குடுத்திருக்குற யோசனையை கண்டிப்பா பாராட்டியே ஆகவேண்டும். ஆனா, பின் நம்பர திருட்ரவனால நீங்க குடுக்குற அடுத்தடுத்த டேட்டா-வையும் திருட அதிக கஷ்டம் இருக்காது. அதனால இங்க செக்யூரிட்டி சிஸ்டத்தை அதிகரிக்க, PIN மற்றும் விரல் ரேகை மூலம் அக்கௌன்ட்டை அக்செஸ் செய்ய, சாப்ட்வேர் மற்றும் ஹர்ட்வார் கம்பனிகள் R&D செஞ்சிட்டிருக்காங்க. இப்ப வர்ற பல லேப்டாப்கள் finger-prints மூலம் லாகின் செய்ற வசதியோட வந்துட்டிருக்கு, என்னோட லேப்டாபும் அப்பிடித்தான். ஆக, என்னும் கொஞ்சநாள்ல இந்த வசதி எல்லா ATMல யும் வந்துரும்னு நெனைக்கிறேன், என்ன IT மார்க்கெட் டௌன் ஆகாம இருக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.