அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2013
00:00

*பி.காந்திமதி நாதன், திருப்புவனம்: என் மகன், படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கிறான். ஏதாவது தொழிலில் ஈடுபடுத்த விரும்புகிறேன். எந்த தொழில் துறையில் இறக்கலாம்... யோசனை கூறுங்களேன்...
தரகர் - புரோக்கர் - கமிஷன் ஏஜன்ட்... இதெல்லாம் பழைய பெயர்கள்... இப்பெயர்களை கவுரவக் குறைவாக நினைக்க ஆரம்பித்து, "மீடியேட்டர்' என, தங்கள் பெயரை மாற்றி கொண்டுள்ளனர் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள். இவர்களின் தொழில்தான், "மினிமம் ரிஸ்க்கில்' ஏராளமாக, சுலபமாக காசு பார்க்கும் தொழிலாக உள்ளது.
***

*எஸ்.சரவணன், ஆவடி: பழனி, சபரிமலை போன்ற தலங்களுக்கு, கடன் வாங்கி மாலை போட்டு, திண்டாடி நிற்பவர்கள் பற்றி...
கடன் வாங்கி தம்மை தரிசிக்க வரும்படி, எந்தக் கடவுளும் போதிக்கவில்லை... அவரவர் ஊரில் உள்ள கோவில்களுக்கு போனாலே போதும்! கடன் வாங்கி மாலை போடுபவர்கள், "கொழுப்பு' கூடிப் போனவர்கள்; திண்டாடத்தான் செய்வர்!
***

* டி.லோகேஷ், சிதம்பரம்: மனைவியை அடிமையாக நினைக்கும் கணவனை திருத்துவது எப்படி?
கணவன் கையை எதிர்பார்க்காத, பொருளாதார சுதந்திரம் அடையும் பெண், துணிச்சல் பெறுகிறாள்; அவளை அடிமையாக நடத்த கணவன் துணிவதில்லை. அப்படியே நடத்த முயன்றாலும், "பினான்ஷியலி இன்டிபெண்டன்ட்'டாக இருக்கும் பெண்கள், சுயபச்சாதாபம் கொள்வதில்லை!
***

*கே.கோவிந்தராஜன், போடிநாயக்கனூர்: ஆங்கில மொழி அகராதியை தலைகீழாகத் திருப்பி விட்டேன்... "கக்கூஸ்' என்பது ஆங்கில மொழி சொல் இல்லையா?
இல்லையாம்... அது, ஹிந்தி, தமிழ் மொழிச் சொல் கூட இல்லையாம்! டச்சு மொழியாம். கழிப்பிடத்தை அம்மொழியில், "கக்கூயூஸ்' என்று சொல்வராம். அதுதான் திரிந்து, இப் போது உள்ள வடிவத்தை எடுத்துள்ளது என்றார் விவரம் அறிந்த உதவி ஆசிரியர் ஒருவர்!
***

** எஸ்.வெங்கடேஷ், ராஜபாளையம் : தங்களை யாரும் கவனிப் பதில்லை என்ற மனநிலைக்கு ஆட்பட்டுள்ளனரே வயதானவர்களில் பலர்... இதை மாற்றுவது எப்படி?
இந்த மனநிலைக்கு உள்ளானவர் களை, இனி எவ்வளவு தான் கவனித் தாலும், தம் சுயபச்சாதாபத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். ஆனால், மனசாட்சிக்கு விரோதமில்லாமல், இவர்களை கவனிப்பது உரியவர்களின் பொறுப்பு! நாமும் வயதான காலத்தில், இந்த மாதிரியான மனநிலைக்கு உள்ளாகி விடக் கூடாது என்பதில் அனைவரும், இப்போதே பக்குவப் படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட வேண்டும்.
***

*எம்.வடிவேல் முருகன், கண்டமங்கலம்: நீங்கள் சென்ற வெளிநாடுகள் பலவற்றில், ஏதாவது ஒரு நாட்டிலாவது, நம் நாட்டில் காணப் படுவது போல நடை பாதைகள், குப்பைக் கூளங்களுடன் அருவருப் பாக காட்சியளிப்பதைப் பார்த்திருக் கிறீர்களா?
எல்லா நாடுகளிலும், நம்மூர் போன்ற சில ஏரியாக்கள் இருக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவில் நியூயார்க் - குயின்ஸ் போன்ற பகுதிகளில், ஜப்பானின் டோக்கியோ நகரின் சில பகுதிகள், ரொம்ப மோசம்! நடைபாதை குப்பை அருவருப்பு யூனிவர்சல் தான்!
***

** பி.கணேஷ் பாபு, சென்னை: நடிகன் - அரசியல்வாதி ஒப்பிடுங்களேன்!
இருவருமே நடிகர்கள் தான்; பணத்தை வாங்கிக் கொண்டு நடிக்கிறான் நடிகன்; பணம் கிடைக்கும் என்று நடிக்கிறான் அரசியல்வாதி! ஆக, இருவருமே பணம் பண்ணி விடுகின்றனர்.
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anandhaprasadh - Bangalore,இந்தியா
08-ஜன-201319:00:09 IST Report Abuse
anandhaprasadh திரு. காந்திமதி நாதன் ஐயா... உங்கள் மகனை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு உணவுப்பொருட்கள், காய்கறி, கைவினைப்பொருட்கள் முதலான பலவிதப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் சுயதொழில் செய்யச்சொல்லுங்கள்.. அதில் கடின உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம்.. இது தொடர்பாக மக்கள் தொலைக்காட்சியில் திரு.ராமச்சந்திரன் என்பவர் வியாழன் தோறும் பேசுகிறார்... சென்னையில் பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறார்... அதுபற்றி மேற்கொண்டு அறிந்துகொண்டு உங்கள் மகனை அதில் ஈடுபடச் சொல்லவும்.. வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
07-ஜன-201312:36:27 IST Report Abuse
E.V. SRENIVASAN அந்துமணி மஸ்கட் வந்ததில்லை என்று நினைக்கிறன். இங்கு எந்த ஒரு அபராதமும் இல்லை, ஆனாலும் சுத்தமாக இருக்கும். ஏனெனில் இந்தியாவில் போடுவதை போல இங்குள்ள இந்தியர்களும் போடத்தான் செய்கின்றனர். ஆனால் அதேசமயம், இங்குள்ள "பலிதியா" என்று அரபிக் மொழியில் அழைக்கபடும் முனிசிபாலிட்டி ஏராளமான ஊழியர்களை (பெரும்பாலும் இந்தியர்களே) வைத்துள்ளது. இவர்களின் வேலை தெருவில் உள்ள மட்டும் அல்ல எதாவது விபத்து நேரத்தாலும் உடனடியாக தெருவில் உள்ள கண்ணாடி துண்டுகள் முதலியனவை சுத்தமாக அப்புறபடுதிவிடுவர். மேலும் தெருக்களில் மண் சேராமால் இருக்க Brush கொண்டு பெருக்குவர். சுகாதார அடிப்படையில் அவர்களும் நாள் முழுவதும் குனிந்து குப்பைகளை எடுக்காமல் நின்றபடியே எடுக்குமளவிற்கு மேலே கைபிடியுடன் கிழே குப்பையை பற்றிக்கொள்ளும் படி ஒரு சிறிய தடி போன்று ஒன்றும் கொடுத்துள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.