| E-paper

 
Advertisement
தாய்லாந்தின் கோப்ரா கிராமம்!
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2013
00:00

பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையே, நல்லிணக்கம் ஏற்பட்டு, ஒற்றுமையாக வாழ்வதை பற்றி கேள்விப்பட்டிருக் கிறோம். ஆனால், மனிதர்களும், விலங்குகளும், ஒரே ஊரில், நல்லிணக் கத்துடன், ஒற்றுமையாக வாழ்வது, அதிகம் கேள்விப்படாத விஷயம்.
தாய்லாந்து நாட்டின், வட கிழக்கு மாகாணத்தில் உள்ள, பான் கோக் சா-ன்ங்கா என்ற கிராமத் தில், கடந்த, 60 ஆண்டுகளாக இப்படி ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறி வருகிறது. அதுவும், விலங்குகள் என்றால், சாதாரண விலங்குகள் அல்ல; கொடிய விஷத் தன்மை உடைய, பாம்புகளுடன், இந்த ஊரில் வசிக்கும் பொதுமக்கள், ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.
பான் கோக் கிராமம், 60 ஆண்டுகளுக்கு முன், எந்த வளமும் இல்லாமல் இருந்தது. இங்கு வசித்த மக்கள், ஒருவேளை சோற்றுக்கே வழி இல்லாமல், வறுமையில் வாடினர். அப்போது, இந்த கிராமத் துக்கு வந்த ஒரு டாக்டர், அங்குள்ள மக்களை திரட்டி, "வீட்டுக்கு வீடு, ஏதாவது செல்லப் பிராணிகளை வளருங்கள். அவற்றுக்கு, சில வித்தைகளை கற்றுக் கொடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், அந்த வித்தைகளை அரங்கேற்றுங் கள். கணிசமான வருமானம் கிடைப்பதோடு, நாளடைவில், சுற்றுலாப் பயணிகளும், இந்த கிராமத்துக்கு வரத் துவங்கி விடுவர்...' என, ஐடியா கொடுத்தார்.
டாக்டர் கொடுத்த, ஐடியாவை செயல்படுத்த துவங்கினர். ஆனால், சொல்லி வைத்தாற்போல், அனைத்து வீடுகளிலுமே, பாம்புகளை வளர்க்க துவங்கினர். எதிர்பார்த்தது போலவே, பாம்பு வித்தைகளை பார்ப்பதற்காக, சுற்றுலா பயணிகளும், அந்த கிராமத்துக்கு படையெடுத்து வரத் துவங்கினர். இப்போதும், இந்த பாம்பு வளர்க்கும் நடைமுறை, இந்த கிராமத்தில் தொடர்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும், மனிதர்கள் இருக்கின்றனரோ, இல்லையோ... கண்டிப்பாக, ஒரு பாம்பாவது இருக்கும். இங்குள்ள 140க்கும் மேற்பட்ட வீடுகளில், ஆயிரக்கணக்கான பாம்புகள் வளர்கின்றன. விஷத் தன்மையற்ற விளையாட்டு பாம்புகளிலிருந்து, கொடிய விஷத் தன்மையுடைய, நாக பாம்புகள் வரை, வித விதமான பாம்புகளை வளர்க்கின்றனர்.
இந்த கிராமத்தை, தற்போது, "கோப்ரா வில்லேஜ்'என்று தான், சுற்று வட்டார மக்கள் அழைக்கின்றனர். பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, பாம்புகளுடன் கொஞ்சி விளையாடுகின்றனர். இந்த பாம்புகளை, தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களைப் போல் கருதி, பாசத்துடன் வளர்க்கின்றனர். ஏதாவது ஒரு பாம்பு இறந்து விட்டால் போதும், ஒட்டு மொத்த கிராமமுமே, துக்கத்தில் மூழ்கி விடும்.
இந்த ஊரில் வசிக்கும், 72 வயதான புலாஸ் சாய் என்பவர் கூறியதாவது:
பாம்புகள், எங்களையும் கடிப்பதுண்டு. இதுவரை, 21 தடவை, பாம்புகள் என்னை கடித்துள்ளன. கை விரல்களில் தான், அதிகம் கடிப்பட்டிருக் கிறேன். கொடிய விஷத் தன்மையுடைய பாம்புகள் கடித்தால், உடனடியாக, கடிபட்ட விரலை துண்டித்து விடுவேன். இதுவரை, நான்கு விரல்களை வெட்டித் தூக்கி எறிந்திருக்கிறேன். ஆனாலும், பாம்புகள் மீது, பயமோ, கோபமோ வந்தது இல்லை. அவைகள், எங்கள் குடும்பத்தின் செல்லப் பிள்ளைகள்.
இவ்வாறு தைரியத்துடன் கூறுகிறார், புலாஸ் சாய்.
ம்ம்ம்... இந்த கிராம மக்களுக்கு, "ரிஸ்க்' எடுப்பது, "ரஸ்க்' சாப்பிடுவது போல் இருக்கிறது.
***

எஸ். ரித்விக் முகில்

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.