உ.பி.யை கலக்கும் இளம் சிவப்பு படை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2013
00:00

உ.பி.,யில் உள்ள பண்டல்கண்ட் பகுதியில், கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால், சிறு சிறு பிரச்னைகளை கூட, பேச்சுவார்த் தைக்கு பதிலாக, துப்பாக்கி குண்டுகள் மூலமாகத் தான், தீர்த்துக் கொள்கின்றனர் இங்குள்ள மக்கள்.
கடத்தல், அடிதடி, ஜாதி மோதல்கள் ஆகியவை, இங்கு சர்வ சாதாரணம். இங்கு வசிக்கும், மேல் தட்டு வர்க்கத்தினர், கீழ் தட்டு மக்களை, காலம் காலமாக அடிமைப்படுத்தி வைத்திருந் தனர். பண்டல்கண்ட் பகுதியின் பல இடங்களிலும், இப்போதும், இந்த நடைமுறை தொடர்கிறது.
பாதிக்கப்பட்ட மக்கள், போலீசில் புகார் செய்தாலும், எந்த பலனும் கிடைப்பது இல்லை. பொறுத்துப் பொறுத்து பார்த்த மக்கள், சினிமாக்களில் வருவது போல், தங்களை காக்க, சூப்பர் ஹீரோ, யாராவது வருவார் என்று, காத்திருக்கவில்லை.
"தன் கையே, தனக்கு உ<தவி' என, கொதித்தெழுந்து, தங்களை காக்க, தாங்களே, ஒரு பாதுகாப்பு அணியை உருவாக்கியுள்ளனர். இதில், ஆச்சரியப்படும் விஷயமும் <உண்டு. இந்த பாதுகாப்பு அணியில் இடம் பெற்றுள்ள அனைவருமே, 22லிருந்து, 50 வயதுக்குட்பட்ட பெண்கள். ஒருவர் கூட, ஆண் இல்லை.
பண்டல்கண்ட் பகுதியைச் சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், இந்த அணியில் உள்ளனர். இவர்கள் அனைவரும், இளம் சிவப்பு நிற புடவை அணிந்துள்ளனர். தினந் தோறும், காலை, மாலை வேளைகளில், தங்கள் பகுதிக்குட்பட்ட, ஒரு பொது இடத்தில், கைகளில் பெரிய தடிகளுடன் ஒன்று திரண்டு, பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்த இளம் சிவப்பு படைக்கு, சம்பத் பால் தேவி, வயது 47, என்ற பெண் தான் தலைவி. தங்கள் பகுதிக்குட்பட்ட இடங்களில், எந்த பிரச்னை என்றாலும், உடனடியாக, கைகளில் தடிகளுடன், இளம் சிவப்பு படை, அங்கு ஆஜராகி விடுகிறது.
முதலில் பேச்சு வார்த்தை; இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை என்றால், அடுத்ததாக, இவர்கள் கையில் எடுப்பது, தடிகளைத் தான். பிரச்னை செய்பவர்களை, தடிகளை பயன்படுத்தி, பிரித்து மேய்ந்து விடுகின்றனர்.
ஜாதி மோதல்களாக இருந்தாலும் சரி, ரேஷன் கடைகளில் ஒழுங்காக பொருட்களை சப்ளை செய்யவில்லை என்றாலும் சரி, தடிகள் மூலம், உடனுக்குடன் பிரச்னையை தீர்த்து விடுகின்றனர் இந்த பெண்கள். கற்பழிப்பு, கேலி, குடித்து விட்டு தகராறு செய்வது, வரதட்சணை கொடுமை, கடன் பிரச்னை உள்ளிட்ட, எந்த பிரச்னையாக இருந்தாலும், இளம் சிவப்பு படைக்கு தான், முதலில் புகார் பறக்கும்.
இவர்களின் அதிரடிக்கு, உள்ளூர் போலீசாரும் தப்பவில்லை. சமீபத்தில், உயர் வகுப்பை சேர்ந்த ஒரு இளைஞன், அடித்தட்டு சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை, கற்பழித்து விட்டான். இதுபற்றி, உள்ளூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து<, இளம் சிவப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவ்வளவு தான், அடுத்த நிமிடமே, போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்த பெண்கள் படை, அந்த இடத்தையே போர்க்களமாக்கி விட்டது.
இது மட்டுமல்லாமல், சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளை தாக்குதல், உணவுப் பொருட்களை கடத்துதல், என, இளம் சிவப்பு படை மீதான கிரைம் ரேட், எகிறிக் கொண்டே இருக்கிறது. ஏராளமான வழக்குகள், இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
"அடி உதவுவது போல், அண்ணன் தம்பி உதவுவது இல்லை. இதனால் தான், தடிகளை கையில் எடுத்துள்ளோம். நியாயமான பிரச்னைகளுக்கு மட்டுமே, நாங்கள் செல்கிறோம். எங்கள் மீது, எத்தனை வழக்குகள் போட்டாலும், கவலை இல்லை. எங்கள் பகுதிக்குட்பட்ட கிராமங்களில், யாராவது பிரச்னை செய்தால், பின்னி பெடலெடுத்து விடுவோம்...' என, கண்டிப்புடன் கூறுகிறார், இளம் சிவப்பு படை தலைவி, சம்பத் பால் தேவி.
***

சி. சண்முகநாதன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Bhaskaran - Abu Dhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜன-201318:52:37 IST Report Abuse
R Bhaskaran அருமையான் ஒரு அமைப்பு, பாரட்டப்படவேண்டிய செயல்.
Rate this:
Share this comment
Cancel
Silambarasan - Thiruvannamalai,இந்தியா
09-ஜன-201317:27:56 IST Report Abuse
Silambarasan இப்படி நல்ல நோக்கொடு தொடங்கப்பட்ட குழுக்களில் நக்சலைட்டும் (Naxalite) ஒன்று. இறுதியில் அரசியல் வாதிகள் இதுபோன்ற குழுக்களுக்கு கொடுக்கும் பெயர் தீவிரவாதம். என்ன கொடும சார்.
Rate this:
Share this comment
Cancel
varalakshmia anand - Chennai,இந்தியா
06-ஜன-201315:06:08 IST Report Abuse
varalakshmia anand சபாஷ்
Rate this:
Share this comment
Cancel
Ponpathar - Glasgow,யூ.எஸ்.ஏ
06-ஜன-201304:34:36 IST Report Abuse
Ponpathar நல்ல படை ...அரசு அதிகாரிகள் , போலிசார் தங்கல் கடமையை ஒழுங்காக செய்யாத போது இது போன்ற படைகள் நாடெங்கும் தேவை ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.