திண்ணை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2013
00:00

நாகர்கோவில் ஒழுகினசேரி சினிமா கொட்டகையில், ஒரு நாள் மாரியப்ப சுவாமிகள் (அக்காலத்தில் புகழ் பெற்ற பாடகர்) பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. கச்சேரி முடிந்ததும் கலைவாணர் மேடையில் ஏறி, பொதுமக்களைப் பார்த்து, "மணி என்ன?' என்று கேட்டார்.
"மணி மூன்று!' என்று மக்களிடமிருந்து பதில் வந்தது. கச்சேரி தொடங்கியதோ இரவு ஒன்பதரை மணிக்கு!
"பார்த்தீர்களா? இவ்வளவு நேரம் பொழுது போனதே தெரியவில்லை. நம்மை மறந்து மெய்மறந்து எல்லாரும் கேட்டுக் கொண்டிருந்தோம். யாருமே எழுந்திருக்கவில்லை. தூங்கவில்லை. கொட்டாவி கூட விடவில்லை. இதுதான் மாரியப்ப சுவாமிகளின் பாட்டு மகிமை. மாரி என்பதற்கு மழை என்றும் பொருள். இவர் மாரி மட்டுமல்ல; மாரி அப்பன். மாரியாகிய மழையே, நம்மை அங்கே இங்கே போகாத படி தடுத்துவிடும். அப்படியிருக்க மாரி அப்பன் மழை பெய்தால் எப்படி இருக்கும்? இருந்தவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி செய்யும் சக்தி, அதற்கு உண்டு. அதுவும் இது சாதாரண மழையா... சங்கீத மழையாயிற்றே!
மதுப்பழக்கம் இல்லாத ஒருவன் சிறிதளவு கள்ளைக் குடித்து விட்டான் என்றால், அவன் நிலை என்ன ஆகும்? அந்த நிலையிலே தான் மாரியப்ப சுவாமிகள் சங்கீதத்தைக் கேட்ட நானும் இருந்தேன்; நீங்களும் இருந்தீர்கள். காரணம் - மாரியப்ப சுவாமிகள், "கள்' ளை அருந்தியது தான் - கலைவாணர் இப்படிச் சொன்னதும் ரசிகர்களிடையே பலத்த கைத்தட்டல்!
***

காமராஜர் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், அப்போதைய பிரதமர் இந்திரா, சென்னை வந்தார். அவருடன் கவர்னர், கே.கே.ஷா, முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியம், கரண்சிங் ஆகியோர் வந்திருந்தனர்.
காமராஜரின் உடலுக்கு, மலர் வளையம் வைத்தார் இந்திரா. பிறகு, இரண்டு நிமிடம் இறுதி அஞ்சலி செலுத்தினார். காமராஜரின் உடலைத் தொட்டுக் கும்பிட்டார்.
கலங்கி நின்ற மக்களை பார்த்தார். அப்போது பிரதமர் இந்திராவின் கண்களிலிருந்து, கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதைக் கண்டதும், கூட்டத்தினரும் கதறி அழுதனர்.
ராஜாஜி மண்டபத்தில், காமராஜரின் சகோதரி மகன் ஜவகர், வைதிக முறைப்படி, சடங்குகளைச் செய்தார். காமராஜரின் உடல் குளிப்பாட்டப்பட்ட பின், திருநீறும், சந்தனப் பொட்டும், குங்குமமும் நெற்றியில் இடப்பட்டன. தூய கதராடை உடலில் அணிவிக்கப்பட்டது.
ராஜாஜி மண்டபத்தில் காமராஜர் உடல், 21 மணிநேரம் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின், ராணுவத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. உடலைச் சுற்றிலும், தரைப்படை, கப்பல் படை, விமானப்படை வீரர்கள், துப்பாக்கியைத் தரையை நோக்கிப் பிடித்தபடி தலை கவிழ்ந்த வண்ணம் அஞ்சலி செலுத்தினர்.
பின், உடலைப் பீரங்கி வண்டியில் வைத்தனர். அப்போது மரியாதை செலுத்தும் வகையில், குண்டுகள் முழங்கின. இறுதி ஊர்வலம் ராஜாஜி மண்டபத்தில் இருந்து பிற்பகல், 3:30 மணிக்குப் புறப்பட்டது.
லட்சக்கணக்கான மக்கள் பின்தொடர, ஊர்வலம் 10 கி.மீ., தூரத்தைக் கடந்து, அடையாறு காந்தி மண்டபத்தை அடைய, மூன்று மணி நேரம் பிடித்தது. மண்டபத்தின் அருகே, விசேஷமாக அமைக்கப்பட்ட மேடையில் சந்தனக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
பீரங்கி வண்டியில் இருந்து, முப்படை வீரர்கள் காமராஜரின் உடலைத் தூக்கி வந்து சிதையில் வைத்தனர். 15 நிமிடத்திற்குள், ஈமச் சடங்குகள் முடிக்கப்பட்டன. சிதைக்கு தீ மூட்டு முன், மூன்றுமுறை பீரங்கிகள் முழங்கின.
காமராஜரின் தங்கைப் பேரன் கனகவேல், சிதைக்குத் தீ மூட்டினார். எல்லாரும் கதறி அழுதனர். தம்மைப் பிரதமராக்கிய காமராஜரின் உடல், தீ மூண்டு எரிவதைக் கண்டு, கையால், வாயைப் பொத்திக் கொண்டு கதறி அழுதார் இந்திரா.
"காமராஜர் சில நினைவுகள்' நூலிலிருந்து...

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manal sharqia - TelAviv,இஸ்ரேல்
09-ஜன-201312:32:22 IST Report Abuse
manal sharqia காமராஜர் அய்யா அவர்களை ஒரு சிறுவன் தோற்க்கடித்தான் என்பது தான் ஒரு தீராத வேதனை,, தமிழ் மக்கள் என்று இந்த திராவிட கொள்ளை கூட்டத்தை நம்பி நாட்டை கொடுத்தார்களோ நாடார் அய்யா பட்ட கஷ்டம் எல்லாம் பாழ் பட்டு போய்விட்டது.. பெருந்தலைவர் என்றால் அவர் தான் பெருந்தலைவர்,, அவருக்கு அளித்த ராணுவ மரியாதை இறுதி சடங்கு இனி யாருக்கும் கிடைக்க கூடாது..,
Rate this:
Share this comment
Cancel
Barotta Thalaiyan - Kingston,ஜமைக்கா
08-ஜன-201312:18:53 IST Report Abuse
Barotta Thalaiyan அந்த கண்ணீர் உண்மை அன்று. காமராஜர் உயிருடன் இருந்த போது மதிக்காதவர் இந்திரா. நினைவு மண்டபத்தில் ராட்டை சின்னம் இருந்ததால் வரமாட்டேன் என்றார்.
Rate this:
Share this comment
Cancel
Kalakkal Mano - Chennai,இந்தியா
07-ஜன-201315:11:24 IST Report Abuse
Kalakkal Mano கலைவாணர் என்றுமே கலை ஆனவர்தான்....
Rate this:
Share this comment
Cancel
vanaraja - Cumbum,இந்தியா
06-ஜன-201311:10:40 IST Report Abuse
vanaraja இன்றைய அரசியல்வாதிகள் இதை உணரவில்லை ஏன்? மக்களும் அதை மறந்து போனார்கள் ஏன்? வரலாறு மட்டுமே நினைவு கூறுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Ponpathar - Glasgow,யூ.எஸ்.ஏ
06-ஜன-201304:22:53 IST Report Abuse
Ponpathar தன்னலமற்ற , தன்னிகரில்லா ஒரே தலைவன் .....எதற்கும் கலங்காத இந்திரா காந்தியை கண் கலங்க வைக்க கூடிய மரணம் என்ற சொல்லின் அடி நாதத்தை உணர்த்திய தலைவன் ....தனது குடும்பத்துக்கு என்று சொத்து சேர்க்காத தலைவன் ....மரணத்தின் போது கூடியது தானாக சேர்ந்த கூட்டம் ...காசு கொடுத்து கூட்டிய கூட்டமல்ல ...
Rate this:
Share this comment
anandhaprasadh - Bangalore,இந்தியா
08-ஜன-201318:25:54 IST Report Abuse
anandhaprasadhஉண்மை சகோதரரே.. அவரின் ஆட்சிக்காலத்தில் வாழ நான் பிறக்கக் கொடுத்து வைக்கவில்லை என்றாலும் என் அம்மா, தாத்தா மூலம் திரு.காமராஜர் ஐயா அவர்களின் ஆட்சிபெருமைகளைக் கேள்விப்பட்டுள்ளேன்... அவரைப்போல் இன்னுமொரு தன்னலம் கருதாத, மக்களின் முன்னேற்றத்தையே குறிக்கோளாகக்கொண்ட தலைவன் வருவானா என்ற ஏக்கம் என் மனதில் எப்போதுமே உள்ளது... ...
Rate this:
Share this comment
anandhaprasadh - Bangalore,இந்தியா
08-ஜன-201318:48:39 IST Report Abuse
anandhaprasadhஅன்புள்ள தினமலர் வாசகர்களே... இங்கு நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் நாம் அனைவருமே தமிழகம் ஊழலற்ற, அடிப்படை வசதிகள் நிறைந்த, வளம் மிகுந்த, இலவசங்கள் இல்லாத ஒரு சிறந்த மாநிலமாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் தெரிகிறது... வெறும் எதிர்பார்ப்போடும் ஏக்கத்தோடும் நின்றுவிடாமல் நாம் ஏன் இதற்கான முயற்சிகளில் இறங்கக்கூடாது? நாம் நமது பகுதியில் இருக்கும் தன்னலமற்ற இளைஞர்களை இணைத்து, சிறு குழுக்களாக அமைத்து, மாநிலம் முழுதும் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பட்டால் நாம் நமக்குள் ஒரு நல்ல தலைவனையும் பிரதிநிதிகளையும் உருவாக்க முடியாதா... இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை என்னுடைய மின்னஞ்சலுக்கு (anandhaprasadh@gmail.com) அனுப்பும்படி கேட்டுகொள்கிறேன்.. இது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்று நன்றாகப் புரிகிறது.. ஆனால் இன்று இருக்கும் எல்லா கட்சிகளும் பழி வாங்கும் உணர்வோடும் சுயலாபத்திற்காகவும் செயல்பட்டு நம்மை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டிருப்பதைப்பார்த்து மனம் கேட்கவில்லை.. இந்த நிலை மாற ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது... இது தொடர்பான உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்... நன்றி... ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.