இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2013
00:00

விஜய் படத்துக்கு டைட்டில் பிரச்னை!

விஜய் நடித்த, காவலன் படத்துக்கு முதலில், காவல்காரன் என்று தான் பெயர் வைத்தனர். ஆனால், அந்த தலைப்பில் ஏற்கனவே படம் பண்ணியுள்ள, சத்யா மூவிஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, காவலன் என்று மாற்றினர். இப்போது, விஜய் நடித்து வரும் புதிய படத்துக்கு, தங்கமகன் என்று பெயர் வைப்பதற்கு, அந்த டைட்டிலில் ஏற்கனவே ரஜினியை வைத்து படம் தயாரித்துள்ள சத்யா மூவிஸ், ஆர்.எம்.வீரப்பன் டைட்டிலை விட்டுத்தர மறத்து விட்டார். ஆக, நடிகர் விஜய்யும், ஏ.எல் விஜய்யும் ஓட்டலில் ரூம் போட்டு புதிய டைட்டில் பற்றி யோசித்து வருகின்றனர்.

ரூட்டை மாற்றும் ஓவியா!

கலகலப்புக்கு பின் தன் மார்க்கெட் கலகலப்பாகும் என்று நினைத்த ஓவியாவுக்கு, எதிர்பார்த்தபடி புதிய படங்கள் இல்லாமல் கலவரத்துடன் காணப்படுகிறார். அதனால், இதுவரை ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த ஓவியா, இப்போது, "நல்ல கேரக்டர்கள், குத்தாட்ட வாய்ப்புகள் கிடைத்தாலும் நடிப்பேன்...' என்று கூறி வருகிறார். கிடைத்தா கஞ்சி தண்ணி; கிடைக்காட்டா குழாய் தண்ணி!
எலீசா

ஜூலியா ராபர்ட்சை பின்பற்றும் த்ரிஷா!

"நடிகைகள்ல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர் நடித்த படங்களை பார்ப்பதுதான், என் பொழுதுபோக்கு...' என்கிறார் த்ரிஷா. "மேலும், அவரது சில மூவ்மென்டுகளை என் நடிப்பிலும் லைட்டாக, "டச்' செய்து வருகிறேன். குறிப்பாக ஸ்டைலாக கூந்தலை கோதி விடுவது, உதடு குவித்தபடி பேசுவது இதெல்லாம் நான் அவரை பின்பற்றி நடிப்பது தான்...' என்கிறார் த்ரிஷா. அக்கரையானுக்கு ஆனது, இக்கரையானுக்கும் ஆகட்டும்!
எலீசா

பின்னணி பாடும் நடிகை சந்தியா!


காதல் சந்தியாவிடம் நடிப்பு தவிர, வேறு சில தனித்திறமைகளும் உள்ளன. அப்பா அஜீத் பாடகர் என்பதால், இவரும் சிறு வயதில் இருந்தே நன்றாக பாடுவாராம். ஏற்கனவே தமிழில், மஞ்சள் வெயில் படத்தில் பின்னணி பாடிய சந்தியா, இப்போது மலையாள படங்களிலும் அவ்வப் போது பாடி வருகிறார். அதோடு, நல்ல ஓவியரான சந்தியா, ஓவியம் வரைவதை தன் முக்கிய பொழுது போக்காக கடைபிடித்து வருகிறார். நடந்தால் நாடு எல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை!
எலீசா

வதந்தியால் வருந்தும் திவ்யா ஸ்பந்தனாஸ்!

"குத்து' மற்றும் பொல்லாதவன் உட்பட சில படங்களில் நடித்தவர், திவ்யா ஸ்பந்தனாஸ். தற்போது கன்னடத்தில், "பிசி'யாக இருக்கும் இவரைப்பற்றி, கிசுகிசுக்கள் வெளியாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மனசு நொடிந்து போன திவ்யா, சமீபத்தில் மீடியாவினரை சந்தித்து, "புதுசு புதுசாக வதந்தி பரப்பி, என் மனதை கஷ்டப்படுத்தாதீர்கள். என்னைப் பற்றி தவறான செய்திகளை கேள்விப்பட்டால், அதை என்னிடம் கேட்டு, தெளிவு பெற்று கொள்ளுங்கள்...' என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆக்கிப் பெருக்கி அரசாள வைத்தேன்; தேய்த்துப் பெருக்கித் திரிசமம் செய்யாதே!
சி.பொ.,

சொந்த வீட்டில் குடியேறிய சிம்பு!


கடந்த, 1987ல், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு. அதன் பின், 2002ல், காதல் அழிவதில்லை படத்தில், கதாநாயகனாக பிரவேசித்தவர், சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்துள்ளார். இந்நிலையில், இதுவரை தந்தை டி.ஆர்., வீட்டில் வசித்து வந்த அவர், இப்போது தன் சொந்த வருமானத்தில், புதிய வீடு ஒன்றை கட்டி, அதில் பெற்றோர், தம்பி, தங்கையுடன் குடியேறியுள்ளார். மேலும், இதுவரை அவர்கள் குடியிருந்த பழைய வீட்டில், டப்பிங், எடிட்டிங் தியேட்டர், ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஆகியவற்றை வைத்துள்ளார்.
சி.பொ.,

முன்னணி ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்கும் லாரன்ஸ்!


முனி படத்தில் தனக்கு ஜோடியாக வேதிகாவை நடிக்க வைத்த லாரன்ஸ், அப்படத்தின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில், ராஜ்கிரணை நடிக்க வைத்திருந்தார். அதே போல், முனி படத்தின் இரண்டாம் பாகமான, காஞ்சனா படத்தில் லட்சுமிராய் மற்றும் சரத்குமாரை நடிக்க வைத்தவர், இப்போது,முனி மூன்றாம் பாகமான, கங்கா படத்துக்கு டாப்ஸியை, "புக்' செய்து, ராஜ்கிரண், சரத்குமார், நடித்தது போன்ற வேடத்தில் நடிக்க, சில முன்னணி ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார். ஆனால், கதையைக் கேட்ட நடிகர்கள், நடிப்பது குறித்து லாரன்சுக்கு சாதகமான பதிலை இன்னும் சொல்லவில்லை.
சி.பொ.,

மல்டி ஹீரோ படங்களில் விதார்த்!


நடிகர் விதார்த் நடித்த முதல் இடம், கொள்ளைக்காரன் படங்களின் தோல்வி காரணமாக, அவரது மார்கெட் சரிந்து விட்டது. அதனால், பீல்டில் தன்னை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ள அவர், ஜன்னல் ஓரம், படத்தில் பார்த்திபன், விமலுடனும், கழுகு படத்தில் நடித்த கிருஷ்ணாவுடன் இணைந்து, விழித்திரு படத்திலும் நடித்து வருகிறார். இதே ரூட்டை இனி தொடர போவதாகவும், சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்.
சினிமா பொன்னனையா

அவ்ளோதான்!

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.