அன்புள்ள அம்மாவுக்கு —
பத்தாம் வகுப்பு முடித்தவுடனே, எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். என் கணவருக்கு, அப்பா, அம்மா இல்லை; அக்கா மட்டும் உண்டு. நான், என் கணவருடன் சந்தோஷமாக இருந்தேன். எனக்கு குழந்தைகள் பிறந்தன. என் மீதும், என் குழந்தைகள் மீதும், அதிக அன்பு வைத்து, எங்களை நன்கு கவனித்தார். நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.
என் பெற்றோரின் மறைவுக்கு பின், புதிதாக வேறு வீட்டிற்கு வாடகைக்குச் சென்றோம். அங்கு உள்ள அனைவரிடமும் நன்கு பழகினேன். அங்கு ஒரு பையன், எப்போதும், "அக்கா அக்கா...' என்று வந்து பேசுவான். அவன், ஒருநாள், "நான் உங்களை காதலிக்கிறேன்...' என்று கூறினான். நான் அவனைத் திட்டி, அடித்து அனுப்பினேன். அதை, என் கணவரிடமோ, வேறு யாரிடமோ சொல்ல வில்லை. பின், அவன் சில நாட்கள் கழித்து, "சாரி... என்னை மன்னித்து விடுங்கள், தெரியாமல் சொல்லி விட்டேன். நான் எப்போதும் போல், உங்களிடம் பேŒ அனுமதிப்பீர்களா?...' என்றான். நானும் சமாதானமாகி விட்டேன். நேரிலும், போனிலும் பேச்சு தொடர்ந்து, ஒரு ஆண்டில், என் பாதை மாறி, அது, தப்பான பழக்கமாக மாறி விட்டது. இது, என் கணவருக்கு தெரிந்தவுடன், எங்களுக்குள் பிரச்னை எழுந்தது. பின், நானும், என் கணவரும், வேறு வீட்டிற்கு சென்று விட்டோம். என் கணவர், அவனை எதுவும் செய்யாமல் விட்டது தவறு என புலம்பினார். "அவனை நீ வரவழை, அவனை நாலு அடி அடிக்க வேண்டும்...' என்று கூறிக் கொண்டிருந்தார். எனக்கும், அவன் மீது கடும் வெறுப்பு இருந்தது. கணவரின் ஆத்திரத்தை நிறைவேற்ற, அவனிடம் போனில் பேசினேன். அதை, அவரிடம் சொல்லவில்லை.
இந்நிலையில், திடீரென என் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். நான் செய்த தவறினால் தான், அவர் இறந்தார் என, மனம் துடித்தது. அவனை எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். பின், என் குழந்தைகளை பார்க்க வேண்டிய பொறுப்பு இருந்ததால், அந்த எண்ணத்தை கைவிட்டேன்.
நானும், என் குழந்தைகளும், தனிமையில் அனாதைகளானோம். எங்கள் நிலைமை மோசமானது. என்னையும், என் குழந்தைகளையும் பரிதாபத்துடன் பார்த்து, எங்களுக்கு உதவியவர், என் கணவரின் அக்கா மகன். நாங்கள் எப்படி வாழ வேண்டும்; என்ன செய்ய வேண்டும் என, பல அறிவுரைகள் கூறினார். மூன்று ஆண்டுகளுக்கு மேல், எங்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
தற்போது, எங்கள் மீது அதிக பாசம், அக்கறை வைத்துள்ளார். இப்போது நானும், அவரும் நெருங்கி இருக்கிறோம். அவர், என்னை அரசு பணியில் வேலைக்கு சேர்த்து விட்டார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. அவரது வயது, 30, என் வயது 30, என் மகன் வயது 15, மகள் வயது 12. தற்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டால், உறவுகள் பாதிப்பதுடன், என் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கும் என கூறுகிறார். அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் ஆன பின்பும், எங்களை கவனித்துக் கொள்வதாகக் கூறுகிறார். அவ்வாறு செய்தால், அவர் மனைவியின் நிலை பாவம்.
இச்சூழ்நிலையில், நாங்கள் திருமணம் செய்யலாமா? அவருக்கு திருமணம் ஆனபின், எங்களை கவனிப்பது சரியா, கவனிப்பாரா? இப்பழக்கத்தை விட்டுவிட வேண்டுமா? வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அவரது வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். நான் என்ன செய்வது என்று தெரியவில்லை அம்மா. நீங்கள் எது சொன்னாலும், அதை நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு தாங்கள் விரைவில் பதில் அளித்து, என் மனக் குழப்பத்தை போக்க வேண்டும்.
— இப்படிக்கு
அன்பு மகள்.
அன்புள்ள மகளுக்கு —
உன் திருமணத்தின் போது கணவரின் வயது, அவர் என்ன பணி செய்தார், @பான்ற விபரங்கள் உன் கடிதத்தில் இல்லை.
உன்னுடன் சந்தோஷமாய் தாம்பத்யம் செய்து, இரு மழலைச் செல்வங்களை பரிசளித்த கணவனுக்கு துரோகம் செய்திருக்கிறாய். விஷயம் கணவனுக்கு தெரிந்திருக்கிறது. உன் மீதுள்ள காதலால், <உன்னை கண்டிக்க, தண்டிக்க விரும்பாத உன் கணவன், உன் கள்ளக்காதலனை அடித்து, உதைக்க விரும்பி இருக்கிறார். "அவனை மறந்து விட்டேன்; அவன் மீது கடும் வெறுப்பு இருந்தது...' என எழுதி இருக்கிறார். கள்ளக்காதலன், உன்னுடன் பழகும்போதே, வேறொரு பெண்ணுடன் பழகி வெறுப்பேற்றினானா அல்லது உன் கேரக்டரை அடிக்கடி இழித்து, பழித்து பேசி கடுப்பேற்றிக் கொண்டிருந்தானா? உனக்கும், அவனுக்குமான பழக்கத்தை, உன் கணவரிடம் சொல்லி விடுவேன் எனக் கூறி, பணம் கேட்டு பிளாக்மெயில் செய்தானா? உனக்கும், அவனுக்குமான தொடர்பில் தவறு உன் பக்கம்தான் அதிக சதவீதம் உள்ளது.
அவனை தண்டிக்க வேண்டும் என விரும்பி, போனில் பேசி பேசி, அவனின் காதல் வலையில், மீண்டும் மீண்டும் விழுந்திருக்கிறா#. எது எப்படியிருந்தாலும், உன் கள்ளக்காதலனின் மீதான கொலைவெறி தேவையற்றது, அர்த்தமற்றது, நியாயமற்றது.
உன் கணவரின் மரணத்திற்கு பின், விடலை காதலனை நீ சந்திக்கவில்லை. கணவரின் அக்கா மகன் அரவணைப்பில் இதம் கண்டுள்ளாய். மூன்றாண்டுகளாக நீயும் உன் குழந்தைகளும், அவரின் பராமரிப்பில் இருந்து வருகிறீர்கள். புதிய காதலர், அரசு பணியும் வாங்கிக் கொடுத்து விட்டார்; பொருளாதார பாதுகாப்பும் கிடைத்து விட்டது. புதிய காதலருக்கு திருமணமாகவில்லை. அவருக்கும், உனக்கும் ஒரே வயது என எழுதியிருக்கிறாய். அவரை மறுமணம் செய்து கொண்டால், உறவுகள் பாதிப்பதுடன், குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கும் என்கிறார் உன் புதுக்காதலர். இந்த வாக்குமூலம், உன் மற்றும் <உன் குழந்தைகளின் மீதான அக்கறையில் சொல்லப்படவில்லை. வேறொரு பெண்ணை, அவர் திருமணம் செய்து கொண்ட பின்னும், உன்னையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதாக கூறுகிறார். அவர், வேறொரு பெண்ணை மணந்து கொண்ட பின், உன்னுடனான தொடர்பு மெதுமெதுவாக குறைந்து, ஒரு கட்டத்தில் துண்டிக்கப்பட்டு விடும். இதை, உன் காதலனே செய்வார் அல்லது உங்கள் தொடர்பை மோப்பம் பிடிக்கும், அவரின் புது மனைவி செய்வாள்.
உன் புது காதலன் வீட்டில், காதலனுக்கு பெண் பார்க்கின்றனர் அல்லவா? அதை, எந்த விதத்திலும் தடுக்க முயலாதே. உனக்கு பொருளாதார சுதந்திரம் அளித்தவர், உன்னுடன் மூன்று வருடம் தாம்பத்யம் செய்தவர், தன் புதிய வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக வாழட்டுமே! பாதியில் வந்தது பாதியில் போவது பொருத்தம்தானே?
நாற்பது வயது விதவன் யாராவது கிடைத்தால் மறுமணம் செய்துகொள். வருபவன் உன் குழந்தைகளையும், தன் குழந்தைகளாய் பாவிக்கும் குணமுள்ளவனாய் இருத்தல் வேண்டும். மறுமணம் செய்வதற்கு முன்பே வரனிடம் பேசி, அவனது குணநலன்களை அறிந்து கொள்ளுதல் நல்லது.
யாரையும் திருமணம்செய்து கொள்ள விரும்பவில்லை என கூறிவிட்டு, எந்த அ<லுவலக ஆணின் வலையிலும் விழுந்து, அவனுக்கு ஆசைநாயகியாய் மாறி விடாதே. பத்தாவது படித்த உனக்கு, அரசு பணியாக கடைநிலை ஊழியர் வேலைதான் கிடைத்திருக்கும். ஆகவே, பணியில் இருந்து கொண்டே தொலைதூர கல்வியகம் மூலம் மேலே படி. பிள்ளைகளின் படிப்பை கவனி.
இறந்து போன கணவனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். இனி நடப்பதெல்லாம் நன்மைக்கே என நம்பி செயல்படு.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் சொன்னது எது உண்மையோ எது பொய்யோ அதை பற்றி கவலை படாதிங்க. நீங்கள் சொன்னதுல கடசிய சொன்னது சகுந்தலா மேடம் சொல்றத கேகுரத சொன்னிங்க அதனால் மேடம் சொன்னத கேட்டு அதன் படி நடங்க .நான் என்ன சொல்ல வர்றேன்னா இனிமேல் உங்கள் வாழ்கை உங்கள் பிள்ளைகளுக்காக இருந்தால் நல்லது .மற்றபடி வேறு எந்த முடிவு எடுத்தாலும் கண்டிப்பாக அது உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தை கெடுக்கும் .உங்களையும் உங்கள் மனதையும் கட்டுப்படுத்த வழி என்னவேன்ன்று தினமும் யெசீங்கல் .எனது பதில்களை நீங்கள் பார்த்து நல்ல முடிவு எடுத்தால் சந்தோசம் .இது மற்றவங்களுக்கு யாரும் அவங்க மனது புண்படும் படி எழுதாதிங்க அவங்களுக்கும் மனது இருக்கு அவங்க நினைத்திருந்தால் எல்லாவற்றையும் மறைத்து எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம் திருந்த நினைப்பவர்க்கு உங்களால் முடிந்த வரை உதவி பண்ணுங்க .இல்லையெனில் உங்க வேலைய நீங்க பாருங்க..........................................................................யாரையாவது தப்பா பேசிருந்தா மன்னுசுக்கங்க............................................இப்படிக்கு கெட்டவன்......... கெட்டவங்களுக்கு.
வந்து விட்டது மீண்டும் ஒரு புத்தம் புதிய கள்ளகாதல் கதை. படித்து மகிழுங்கள்
அதை விட்டுட்டு நேரத்தை செலவு செய்து யாரும் அறிவுரை கூறாதீர்கள். இப்படி சிக்கியவரிடமெல்லாம் உறவு கொண்டதாக கூறும் இந்த கதை உண்மையா என யோசிக்க தோன்றுகிறது. அப்படி உண்மை என்றாலும் நிச்சயம் இந்த பெண் இங்கு அறிவுரை கூறும் யாருடைய கருத்தாலும் திருந்தபோவதே இல்லை. இது தான் நிச்சயம்
இந்தப் பெண்மணி நிலையில்லா மனம் கொண்டவர். காதலிக்கிறேன் என்ற சொன்ன பையனைக் கண்டித்தவர், அவனை மன்னித்து, எப்போதும் போல் பேச அனுமதித்து, அந்த தொடர்பை தவறான எல்லைக்குக் கொண்டு போனவர். அந்தப் பையனைக் கண்டித்த அந்த கண்டிப்பு தொடர்ந்திருந்தால், அவன் மீண்டும் ஏதாவது சொல்லும்போது, கண்டித்து, அறைந்து அனுப்பியிருப்பார். ஆனால் அவனை மீண்டும் தன்னுடன் பேச அனுமதித்த போதே, அவருக்குள்ளும் அவர் அறிந்தோ அல்லது அறியாமலோ அவனும் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மறைமுகமாக இருந்திருக்கலாம். அவன் சிறுபையன். இவர் திருமணம் முடிந்து, பலவற்றையும் யோசித்து, முடிவு செய்யும் நிலையில் இருக்கும், வயது கூடியவர். பதின்ம வயதில் அலைபாயும் மனதை உடையவனான அவன், பல்வேறு தவறான புத்தகங்களைப் படித்து மனம் குழம்பிய நிலையில் இருந்திருக்க்க் கூடும். அவன் கதவைத் தட்டிப் பார்த்திருக்கிறான். இவர் திறந்து விட்டிருக்கிறார். சொல்லப்போனால், அவனைக் கண்டித்த அதே நிலையில் இவர் இருந்திருந்தாரானால், அவன் பெண்களைப் பற்றி சுலபமாக நம் வழிக்கு வருவார்கள் என்று நாம் எண்ணியது தவறு என்று நினைத்து, அதற்குமேல் அது போன்று மற்றவர்களிடமும் செய்யாமலிருந்திருக்கலாம். இவர் செய்ததன் காரணமாக, இவர் அவனை விட்டு விட்டாலும், இனிமேல் அவன் எல்லா இடத்திலும், இவரிடம் பின்பற்றிய அதே வழிமுறையை பின்பற்ற முயற்சிப்பான். இப்பொழுது யோசித்துப் பார்த்தோமானால், இவருக்கு அவன்மேல் கோபம் வரவேண்டுமா அல்லது அவனுக்கு இவர்மேல் கோபம் வர வேண்டுமா. அல்லது பொது மனிதர்களான நமக்கு யார்மேல் கோபம் வரவேண்டும். இந்தப் பெண்ணிடமே தான். அந்தக் கணவனுக்கு, தன் மனைவி செய்த தவறு தெரியவில்லையா. அவனை அடிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார். "எனக்கும், அவன் மீது கடும் வெறுப்பு இருந்தது" என்ற இந்தப் பெண்ணின் வாசகம் சிரிப்பைத் தான் வரவழைக்கிறது. இந்தப்பெண் அன்பான கணவன் இருக்கும்போதே, மோசமாக நடந்து விட்டு, அவன் மேல் வெறுப்பு வந்ததாம். கணவனின் 'அடிக்கவேண்டும்' என்ற உயரிய நோக்கத்திற்காக அவனுடன் போனில் பேசினாராம். மிக அழகு பாலியல் விருப்பம் தவறு என்று சொல்லக் கூடாது. அது ஆண்பெண் இருவருக்கும் பொதுவானது. பாலியல் விருப்பத்தின் நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கணவனை இழந்த நிலையில், தம் குடும்பத்திற்கு உதவிவரும், கணவரின் அக்கா மகனுடன் தற்போது கொண்டுள்ள உறவை, அறிவுஜீவிகள் சொல்வது போன்று, கலாச்சாரக் காவலர்கள் (அதாவது ஒழுக்கமாக இருக்கவேண்டும்) என்ற நிலையில் பார்த்தால் தவறாகத் தோன்றும். ஆனால் பாலியல் வேட்கை உயிர்களின் அடிப்படைத தேவை என்று பார்த்தால் அது சரி என்று நியாயம் கூடக் கற்பிக்கலாம். ஆனால் பையனுடன் கொண்டஉறவை, அதுவும் கணவன் இருக்கும் போதே, என்னவென்று சொல்ல முடியம். அவளுக்குப் பிடித்தவனுடன் உறவு கொள்ள அவளுக்கு உரிமையில்லையா என்று பெண் உரிமைக்காக போராடும் போராளிகள் அதற்கும் பதில் வைத்திருக்க்க் கூடும். ஆனால் அதே நேரத்தில் நாமும் பத்தாம் பசலிகள் அல்ல. பெண்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். "இச்சூழ்நிலையில், நாங்கள் திருமணம் செய்யலாமா? அவருக்கு திருமணம் ஆனபின், எங்களை கவனிப்பது சரியா, கவனிப்பாரா? இப்பழக்கத்தை விட்டுவிட வேண்டுமா? வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை." -இந்தப் பெண் வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை என்று சொன்னாலும், அவ்வாறு இருக்க மாட்டார். எவனாவது இவருடைய வாழ்க்கையிலோ அல்லது இவர் எவருடைய வாழ்க்கையிலோ புகுவர். அதற்குப் பதில் திருமணம் புரிந்து கொண்டு, முறையான பாலுறவில் ஈடுபட்டு, எதிர்காலத்தில் அவருடைய குழந்தைகளின் மனநலத்தையாவது நன்றாக வைத்துக் கொள்ளலாம். இன்னும் சில ஆண்டுகளில் இவர் முறையற்ற பாலுறவில் எவருடனாவது ஈடுபட்டால், மனதால் காயமடையப் போவது, அந்தப் பிஞ்சுகள் தான். செய்யப் போவது இவர். தண்டனை அடையப் போவது குழந்தைகள். இவர் செய்யவேண்யதாக நான் கருதுவது: (1) குழந்தைகள் மகன் தன் 12 வயதிலுருந்தும், மகள் தன் 9 வயதிலிருந்தும், அந்த அக்கா மகனுடன் 3 வருடங்களாக பழகி வருவதுடன், அவர் நல்ல குணங்களை அறிந்திருக்கலாம். அவர்மேல் அன்பும் செலுத்தி வரக்கூடும். (2) முன்று வருடங்களாக அந்த ஆண் இவருடன் வாழ்க்கையில், தாம்பத்யம் அனுபவித்துவிட்டு, இன்று இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்வதுடன், மணம் கொண்ட பின் இவரைக் கைவிடமாட்டேன் என்று சொல்லி, தொடர்ந்தால், இரண்டு குடும்பங்களுக்கும் சிக்கல்கள் ஏற்படும். குழந்தைகள் மன உளச்சலுக்கு ஆளாவார்கள். அந்த ஆடவரின் மனைவி வேறு துயரம் அடைவார். (3) தொடர்பை விட வேண்டுமென்று முடிவெடுத்தால், அதன்பின் அந்த ஆண், இவரின் வாழ்க்கைக்குள் வரக்கூடாது. தொடர்ந்தால் துயரம்தான். (4) இந்தப் பெண்மணியும், சிலஆண்டுகளுக்குப் பின் யாருடனாவது தொடர்பு கொள்ளுவார். குழந்தைகள் பாதிக்கப்படும். (5) அல்லது இந்தப் பெண் இன்னும் சிலஆண்டுகள் கழித்து, வேறு யாரையாவது திருமணம் புரிந்தாலும், அப்போது வரும் கணவன் என்ற ஆண், முறையே 18, 15 வயதில் இருக்கும் இவரின் குழந்தைகளை தன்குழந்தைகளாக நினைப்பது என்பது மிகவும் சாத்தியக்குறைவு. அதுவும் வருபவனால், பெண்குழந்தையின் பாதுகாப்புக்கு என்ன நேரும் என்று யோசித்தால், அது கேள்விக்குறியாகவே இருக்கிறது. மேலும், குழந்தைகளும், இனிமேல் புதிதாக வரும் நபரை புரிந்து கொண்டு, அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் சொல்வதைவிட, ஏற்கனவே பழகிய, தம் குடும்பத்திற்கு ஆதரவு அளித்துவரும் கணவரின் அக்காமகனை இப்பெண் திருமணம் செய்வதை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கும். (6) இவர் குழந்தைகளிடமும், உறவினர்களிடமும் கலந்து பேசி, கணவரின் அக்கா மகனையே திருமணம் செய்து கொண்டால், அனைவரின் வாழ்க்கையும், எவ்வித தொல்லையும் இல்லாமல் இருக்கும். "தற்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டால், உறவுகள் பாதிப்பதுடன், என் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கும் என கூறுகிறார்"- இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல், தொடர்பைத் தொடர்ந்தால்தான் அந்தக் குழந்தைகளின் மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்க்க் கூடும் என்பதில் ஏதும் சந்தேகம் இருக்கிறதா என்ன?-அன்புடன் கண்ணன்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.