சுற்றுலா பயணிகள் மற்றும் ஆய்வாளர்கள், விண்வெளிக்குச் சென்று வர, சுவீடன் நாடு திட்டமிட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஐரோப்பா கண்டத்திலுள்ள சுவீடன் நாட்டில், கிரூனா என்ற பகுதியில், விண்வெளி பயணத்திற்கான ஆலோசனைகள் துவங்கியுள்ளன. இப்பகுதி, சுவீடன் நாட்டின், ஆர்டிக் பகுதியை ஒட்டி, நார்வே நாட்டின் எல்லை பகுதியில் அமைந்துள்ள குளிர் பிரதேசம். தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து,
953 கி.மீ., தொலைவில் உள்ள இந்த குட்டி நகரம், நள்ளிரவில் சூரியன் தெரிவது, பனிக்கட்டிகளா லான தங்கும் விடுதி, மனிதனை நாய்கள் இழுத்துச் செல்லும் வாகனங்கள் என, சுற்றுலா பயணிகளின் மனதை, அதிகளவில் கொள்ளை கொள்ளும் பகுதியாக இருந்து வருகிறது.
இங்கு, 1957ல், துவங்கப்பட்ட சுவிடிஷ் இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஸ்பேஸ் பிசிக்ஸ் (ஐ.ஆர்.எப்.) என்ற ஆய்வு நிறுவனம் தான், விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது. விண்வெளி பயணத்திற்காக, கிரூனா விமான நிலையம் பயன்படுத்தப்பட உள்ளது. இங்கிருந்து தினமும், லண்டன் மற்றும் டோக்கியோவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மையத்தின் இயக்குனர் கரீன் நில்ஸ்டாட்டர் கூறியதாவது: விண்வெளிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டு வருகிறோம். இதற்காக, கிரூனாவில் உள்ள விமான நிலையத்தை தேர்வு செய்துள்ளோம்.
ஏனெனில், விண்வெளி விமானத்திற்கு பிற விமானங்கள் மூலம் போக்குவரத்திற்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் தான், இந்த விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து, விண்வெளிக்கு விமானங்கள் மூலம், பயணிகளை அழைத்து சென்று வர உள்ளோம். வெறும் இரண்டு மணிநேரத்தில் சென்று வர முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
"விண்வெளியில் அவர்கள் தங்களது எடை குறைந்து காணப்படுவது, அங்கிருந்து பூமியின் தோற்றம் போன்ற பல்வேறு வகையான அனுபவங்களை பெற இயலும். இந்த புதிய திட்டம் குறித்து, நாங்கள் பல்வேறு வகையான, ஆய்வுகளை நடத்தி வருகிறோம். ஒரு முறை பயணத்தில் ஒன்று முதல், ஆறு பயணிகள் மட்டுமே இடம் பெற முடியும்.
"பூமியில் இருந்து, 100 கி.மீ., அப்பால் சென்று, அங்கு பயணிகள் ஐந்து நிமிடங்கள் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவர். விண்வெளி பயணத்திற்கான, சிறந்த இடமாக, கிரூனா உள்ளது என்பது தான் சிறப்பம்சம். இந்த திட்டத்திற்கு பயன்படும் விமானங்களை, அமெரிக்காவில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரித்து தர, தயாராக உள்ளன. இருப்பினும், எந்த வகை விமானம், எங்கிருந்து பெறுவது, பயண திட்டம், கட்டணம் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த திட்டத்தில், பத்தாண்டுகளில், 14 ஆயிரம் பயணிகள் பயணிப்பர் என, ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது...'
- இப்படி அவர் கூறினார்.
பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய நாடாக, சுவீடன் திகழ்ந்த போதும், அங்கு விண்வெளி பயணத்திற்கான விமானங்கள் தயாரிக்காமல், வெளிநாடுகளில் இருந்து அவற்றை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை விரைவாக துவக்கி விட, சுவீடன் முனைப்பு காட்டி வரும் நிலையில், விரைவில் விண்வெளிக்கு பயணிகள் சென்றுவரத் துவங்கி விடுவர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு போய் வருவதற்குள், விண்வெளிக்கு போய் வந்து விடலாம் போலிருக்கிறதே!
***
அ. சாந்தப்பன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.