Advertisement
கவிதைச்சோலை!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013,00:00 IST

மனமருந்தே மாமருந்து!

* புண்ணிற்கு மருந்திடலாம்
மனதிற்கு மருந்திட முடியுமா?
முடியும்...
அன்பான ஆறுதலான வார்த்தைகளால்!

* புற அழுக்கை நீக்கலாம்
அக அழுக்கை நீக்க முடியுமா?
முடியும்...
அப்பழுக்கற்ற நேர்மை திறத்தால்!

* கை, கால் முறிவிற்கு
கட்டுப் போடலாம்
மன முறிவிற்கு கட்டுப்போட முடியுமா?
முடியும்...
பரஸ்பர சமாதான பேச்சுகளால்!

* மலச்சிக்கலுக்கு மருந்துண்டு
மனச் சிக்கலுக்கு மருந்துண்டா?
உண்டு...
மனதார மனம் விட்டு பேசுவதால்!

* உடல் சோர்வுக்கு வழி உண்டு
மனச்சோர்வுக்கு வழி உண்டா?
உண்டு...
தன்னம்பிக்கையுடன் செயலாற்றுகையில்!

* உடல் வலி போகும்
உள்ளத்து வலி போகுமா?
போகும்...
நல்ல வழியை கடைபிடிக்கையில்!

* வாய்ப்புண்ணுக்கு மருந்துண்டு
வாடிய மனதிற்கு மருந்துண்டா?
உண்டு...
வாய்விட்டு சிரிக்கையில் !

* ஆக...
அங்கத்திற்கு மருந்திடுவதை விட
அகத்திற்கு மருந்திடுவதே மேல்...
அந்த மன மருந்தே
அனைவருக்கும் தேவையான
மாமருந்து!
முத்தூஸ், தொண்டி.

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
jayaprakash - tiruppur  ( Posted via: Dinamalar Android App )
07-ஜன-201300:34:32 IST Report Abuse
jayaprakash சிறந்த கவிதை மன காயத்தி்ற்கு மருந்து போல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.