தொடர் இருமல் ஏற்பட்டால்...
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2013
00:00

முத்துராமன், கோவில்பட்டி: என் மகள் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறாள். அவளுடைய அறையில் தங்கியுள்ள ஒரு மாணவி, பெரும்பாலான நேரங்களில் இருமல் மற்றும் தும்மலுடன் காணப்படுகிறாள். இதனால், என் மகளுக்கும் இருமல் மற்றும் நுரையீரல் நோய் வர வாய்ப்புள்ளதா?
இருமல் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, "அலர்ஜி'யாக இருக்கலாம். மற்றொன்று, பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய் கிருமிகளால் ஏற்படலாம். ஒருவருக்கு "அலர்ஜி'யால் இருமல் மற்றும் தும்மல் இருந்தால், அது அருகில் இருப்பவர்களுக்கு தொற்றாது. ஆனால், மரபணு ரீதியாக இந்நோய் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து அடுத்த தலைமுறையினரை பாதிக்கும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமியால் பாதிப்பு ஏற்பட்டு, இருமல் இருந்தால் அது அருகில் இருப்பவர்களுக்கு தொற்றும். பாதிக்கப்பட்ட ஒருவர், இருமும்பொழுது, ஆயிரக்கணக்கான பாக்டீரியா /வைரஸ்கள் வெளியேறுகின்றன. இதனால், அருகில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். இதை, "காற்று மூலம் பரவும் நோய்கள்' என்பார்கள். இதைத் தடுப்பதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் இருமும் பொழுது வாயில் கைக்குட்டை வைத்து பொத்திக்கொண்டால், நோய் கிருமி பரவுவதை தவிர்க்கலாம். அதனால், உங்கள் மகளின் அறையில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பித்து, சரியான மருந்து எடுப்பது அவசியம்.

முத்துலட்சுமி, மதுரை: என் கணவருக்கு, 37 வயதாகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் மூச்சு திணறலுக்காக, "இன்ஹேலர்' பயன்படுத்துகிறார். இன்ஹேலரில், steroids உள்ளது. இதனால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்குமா?
"இன்ஹேலரில்' உள்ள, steroidsஆல் கண்டிப்பாக ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. இதன் அளவு, "மைக்ரோ' கிராமில் மட்டுமே உள்ளது. "இன்ஹேலர்' பயன்படுத்துவதால் வாய்ப்புண் மற்றும் குரலில் மாற்றம் ஏற்படலாம். அதுவும் இன்ஹேலரை பயன்படுத்திய பின், வாயை தண்ணீரால் நன்கு சுத்தப்படுத்துவதால், இதுபோன்ற பக்க விளைவுகளை தவிர்க்கலாம். மற்றபடி இன்ஹேலரை தொடர்ந்து பயன்படுத்துவதால், வேறு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.

பலராமன், கும்பகோணம்: எனக்கு இரண்டு மாதகாலமாக தொடர் இருமல் இருக்கிறது. என்னை பரிசோதித்த டாக்டர், lungs abscess என்று கூறுகிறார். அப்படி என்றால் என்ன?
நம் உடம்பில், பல பகுதிகளில் கிருமிகளால் சீழ் வைக்க வாய்ப்புள்ளது. அதுபோல நுரையீரலில் சீழ் வைத்திருப்பதையே, "லங்ஸ் அப்சஸ்' என்கிறோம். இப்பிரச்னை இருந்தால், நுரையீரல் மட்டுமே பாதிக்கப்படுவது இல்லை. அதை சுற்றியுள்ள ஜவ்வும் பாதிக்கலாம். இந்நோய், பெரும்பாலும் staphylococcus மற்றும் TB கிருமியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய்க்கு, 4 முதல் 6 வாரம் வரை மருந்துகள் எடுக்கலாம். மேலும், சீழ் உள்ள பகுதியை ஊசியின் மூலம் அகற்ற முடியும். அதன் பின், மருந்துகள் எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்ற வேண்டியது வரலாம்.
டாக்டர் எம். பழனியப்பன்,
94425 24147

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.