| E-paper

 
Advertisement
மருத்துவ துறையில் வேலை இருக்கு
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
00:00

எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் அரசுத் துறை சார்ந்த ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு பல்வேறு மையங்களில் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவ மனைகளில் மருத்துவம் சார்ந்த பதவிகளான லேப் அஸிஸ்டெண்ட், ஜூனியர் ரேடியோகிராபர், அலோபதிக் பார்மஸிஸ்ட், ஸ்டாப் நர்ஸ் போன்ற காலி இடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு
வருகின்றன. தற்போது மும்பை மையத்தில் உள்ள இது போன்ற காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் :






இ.எஸ்.ஐ.சி.,யில் லேப் அஸிஸ்டெண்ட் பிரிவில் 11 இடங்களும், ஜூனியர் ரேடியோகிராபர் பிரிவில் ஒரு இடமும், அலோபதிக் பார்மஸிஸ்ட் பிரிவில் 22 இடங்களும், ஸ்டாப் நர்ஸ் பிரிவில் 44 இடங்களும் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள் :






லேப் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், ஜூனியர் ரேடியோகிராபர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், அலோபதிக் பார்மஸிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க
வேண்டும். லேப் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எல்.டி.,யில் டிப்ளமோ படிப்பும், பார்மஸிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.பார்ம்., பட்டப் படிப்பும், ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இப்பிரிவில் டிப்ளமோ படிப்புடன் கவுன்சிலில் பதிந்தும் இருக்க வேண்டும்.

பிற தகவல்கள் :






எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இ.எஸ்.ஐ.சி.,யின் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி ரூ.125/- அல்லது ரூ.225/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இணையதளத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்ப படிவத்தை முழுமையாக
நிரப்பி உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 25.01.2013க்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :






Post Box No:8709,
Andheri East,
Mumbai - 400 069.

ஆன்-லைன் பதிவு செய்ய இறுதி நாள் :






16.01.2013

இணையதள முகவரி :






www.esic.nic.in/Recruitment/rec_mum281212.pdf

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.