E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அரசுப்பணி வேண்டுமா
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
00:00

தமிழ் நாட்டின் அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நிரப்பி வருவது நாம் அறிந்ததுதான். மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் 1929ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1970ல் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக அரசுக் காலி இடமான சப்-இன்ஸ்பெக்டர் ஆப் பிஷரீஸ் பிரிவில் உள்ள 24 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:






டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மீன்வள துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2012 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மும்பையிலுள்ள சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பிஷரீஸ் எஜூகேஷன் வழங்கும் பிஷரீஸ் சயின்ஸ் பிரிவு அஸோசியேட் டிப்ளமோ அல்லது இந்திய அரசு வழங்கும் இன்லேண்டு அல்லது மரைன் பிஷரீஸ் வகுப்புகளை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்று, அல்லது தமிழக அரசின் தொழில் நுட்ப கல்வி வாரியம் வழங்கும் பிஷரீஸ் டெக்னாலஜி அண்டு நேவிகேஷன் பிரிவில் டிப்ளமோவை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிகளுக்கு மேற்கண்ட கல்வித் தகுதியுடன் உடல் நலம் குறித்த சில சான்றுகளையும் கூடுதலாக தர வேண்டியிருக்கும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற 2 நிலைகளிலான தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மற்றவை:






மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இதற்காக ரூ.150/-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலமாக செலுத்த வேண்டும். கட்டண விலக்கு சலுகை பெறத் தகுதியானவர்கள் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தப் பணி இடங்களுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையாக அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :






18.01.2013

கட்டணம் செலுத்த இறுதி நாள் :






22.01.2013

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் :






10.02.2013

இணையதள முகவரி:






tnpsc.gov.in/notifications/52_not_eng_sub_ins_fish2k12.pdf

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.