E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நூல் அறிமுகம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
00:00

கணினியின் அடிப்படை
Basics of Computers
ஆசிரியர்: ஜெ. வீரநாதன்
வெளியீடு: பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், கோயம்புத்தூர் - 641 045.
தகவல் தொடர்பு: 0422 2323228
விலை: ரூ.123.

கம்ப்யூட்டர் வடிவமைப்பு, தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டு மென்பொருட்கள் ஆகியவற்றில் தொடர்ந்து பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இவை பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் புதியவர்களுக்கும், ஏற்கனவே கம்ப்யூட்டர்களைக் கையாள்பவர்களுக்கும், மாறிவரும் தொழில் நுட்பங்கள் குறித்துச் சொல்ல வேண்டியதுள்ளது. தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும், இந்த தகவல்கள் அடங்கிய இடம் ஒன்று தேவைப்படுகிறது. இந்தத் தேவைகளை நிறைவு செய்திடும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இன்று பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் விண்டோஸ் 7 சிஸ்டத்தின் இயக்கம் குறித்தும், அதன் இயக்கத்தின் அடிப்படையில் இயங்கும் மற்ற மென்பொருட்கள் குறித்தும் இதில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஹார்ட் டிஸ்க்கினைத் தயார்படுத்துதல், ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிறுவுதல், விண்டோஸ் 7 தரும் பல வசதிகள், இவற்றைக் கட்டுப்படுத்த உதவும் கண்ட்ரோல் பேனல் செயல்பாடு, கோப்புகளை உருவாக்கிப் பாதுகாத்தல் மற்றும் நீக்குதல், கீ போர்டு அமைப்பு மற்றும் அதனை இந்திய மொழிகளைக் கையாளும் வகையில் அமைத்தல், சிடி, டிவிடி அறிமுகம் மற்றும் அவற்றைக் கையாளும் விதம், வைரஸ்களின் தன்மை மற்றும் அவற்றிற்கெதிரான பாதுகாப்பு வழிகள், இணைப்பு சாதனங்களான பிரிண்டர், ஸ்கேனர் போன்றவற்றை இணைத்து இயக்குதல், கம்ப்யூட்டர் நெட்வொர்க் அமைத்தலும் இயக்குதலும், இன்டர்நெட் குறித்த அறிமுகம், எம்.எஸ். ஆபீஸ் நிறுவிப் பயன்படுத்தல், தமிழ் மொழிப் பயன்பாடு என 31 தலைப்புகளில் தகவல்கள் தரப்படுகின்றன.
எளிய தமிழில் இணையான ஆங்கிலச் சொற்களுடன் கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பதனால், அனைவரும் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு பக்கத்திலும், அந்தப் பக்கத்தில் தரப்படும் தகவல்கள் குறித்த ஸ்கிரீன் ஷாட் படங்கள் ஒன்று அல்லது அதற்கும் மேலாகத் தரப்பட்டிருப்பது, படிப்பவர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் தகவல்களைச் செயல்படுத்திப் பார்க்க உதவுகின்றன. கம்ப்யூட்டருக்கு அறிமுகம் செய்யப்பட்டு, பயன்படுத்தத் தொடங்கியிருப்பவர்களும், ஏற்கனவே பயன்படுத்தி, புதிய நிலைக் கம்ப்யூட்டர்களைக் கையாள தொடங்கி இருப்பவர்களும் இந்த நூல் வெகுவாகப் பயன்படும்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.