Advertisement
பெர்சனல் பிரேக்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
00:00

2012 ஆம் ஆண்டில் வெளியான பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன்களில் பல புதியனவாகவே எனக்கு இருந்தது. சிலவற்றை உடனடியாக இன்ஸ்டால் செய்துவிட்டேன். ஏன், இவை கிடைத்தவுடனேயே எங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது.
சி.இளங்குமரன், திருச்சி.

மாதவாரியாக நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன்கள் அனைத்துமே, மிகவும் பயனுள்ளவையானவை. நல்ல தேர்வு. இது போல மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கும் தரலாமே.
என். கலைச் செல்வி, சிவகாசி.

"ஆண்ட்ராய்ட் சாதனங்களில் தமிழ்' என்ற தொழில் நுட்ப முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள மிகவும் சந்தோஷமாக இருந்தது. வெளிநாட்டில் வாழும், இவர் போன்ற தமிழ் கம்ப்யூட்டர் வல்லுநர்கள், தமிழுக்குச் செய்திடும் சேவை பாராட்டுதலுக்குரியது.
பேரா. டாக்டர். சி.முத்துச் செல்வன், மதுரை.

ஜிமெயில் பேக் அப் இதுவரை சிந்திக்காத கோணத்தில் பிரச்னையையும் தந்து, தீர்வும் தந்திருக்கிறீர்கள். புத்திசாலி, ஐயா நீங்கள்.
கா.அண்ணா முத்தமிழன், மதுரை.

"கூகுள் அடுத்து என்ன?' என்ற தகவல்கள் மிகவும் சரியான கணிப்பினைச் சுட்டிக் காட்டுகின்றன. இலக்கு வைத்து அடித்து நொறுக்குகிறது கூகுள். நிச்சயம் வெற்றி பெறும்.
தா. அன்புச் செல்வன், திருப்பூர்.

ப்ரெஷ் பெயிண்ட் புரோகிராம் பற்றிய தகவல்களைப் படித்தவுடன், அதன் செயல்பாட்டுக்காகவே, விண்டோஸ் 8 சிஸ்டம் மற்றும் தொடுதிரை கொண்ட கம்ப்யூட்டரை வாங்க ஆவல் பெருகுகிறது. இதனைப் போலவே மற்ற அப்ளிகேஷன் புரோகிராம்களையும் மைக்ரோசாப்ட் நம் ஆர்வத் தினைத் தூண்டி இழுக்கும் வகையில் அமைத்திருக்கும் என நம்புகிறேன்.
சி.ஆர். கார்த்திகேயன், கோவை.

மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் பேஸ்புக் என கம்ப்யூட்டர் உலக ஜாம்பவான்களின் சாதனைகள் பற்றி கடந்த இரண்டு வாரங்களாகக் கொடுத்த தகவல்கள் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துப் படிக்க வேண்டியவை.
கே. என். கோகுல்தாஸ், சென்னை.

அதிசய, அதிவேக சாதனங்கள் என்பதைக் காட்டிலும் ஆர்வம் ஊட்டும், அதிக பயன்தரும் சாதனங்கள் என நீங்கள் சுட்டியுள்ள எதிர்கால சாதனங்களைக் குறிப்பிடலாம். இவற்றைப் பயன் படுத்தாமல் நாம் தப்பிக்கவே முடியாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் எனில், ஸ்மார்ட் போன் இனி நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிடும்.
கே. பிரனிஷா, தாம்பரம்.

வளைக்கக் கூடிய திரை கொண்ட மொபைல் போன்களா! சார், மொபைல் உலகம் எங்கே போகிறது. காண்பதற்கு ஆவலாகக் காத்திருக்கிறோம். தகவல்களை முன்கூட்டியே தருவதில் நீங்கள் கில்லாடி, சார்.
ஜ.நூர் முகம்மது, காரக்கால்.

இணையம் முடங்கிப் போவதற்கு இன்னும் பல காரணங்களும் நிச்சயம் இருக்கும். அவற்றையும் பட்டியலிட்டு எழுதவும்.
எஸ்.கே. பால்ராஜ், புதுச்சேரி.

கன்வர்ட் பைல்ஸ் தளம், பைல்களை மாற்றுவதில் சிறப்பான சேவையத் தருகிறது. குறிப்பாக அதன் வேகத்தைச் சொல்ல வேண்டும். பைல் பார்மட் மாற்றத்தினை எளிதாக மேற்கொள்ள அருமையான ஓர் தளம்.
டாக்டர் செ. வைஷ்ணவி, கோவை.

விண்டோஸ் டிபண்டர் குறித்த விளக்கம் மிக அருமை. விண்டோஸ் 8 வாங்கி, என்னைப் போல தடுமாறுபவர்களுக்கு உங்கள் டிப்ஸ் நல்ல வழிகாட்டி. நன்றி.
என்.கவிநேசன், சிதம்பரம்.

விண்டோஸ் 8 வாங்க வேண்டுமா என்ற கேள்விக்கு, மிக நல்ல பதிலை, நம் அன்றாட வாழ்வில் இருந்து எடுத்துக் காட்டிய நிகழ்வுகள் மிக அருமை. கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களிலும் இந்த எளிமையும், இதயத்தோடு பேசும் உங்கள் மொழியும் தான், கம்ப்யூட்டர் மலரின் சிறப்பு. ஆசிரியர் குழுவிற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எஸ். அனு, சென்னை.

ஜிமெயிலுக்கே பேக் அப் தேவையா? இது என்ன? என்ற கேள்வியுடனும், வியப்புடனும் படித்தேன். முடித்தவுடன், ஜிமெயில் பேக் அப் புரோகிராமினை, டவுண்லோட் செய்து வைத்துள்ளேன். விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
ஆ. சிதம்பரம், திண்டுக்கல்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.