கர்நாடக சங்கீதத்தில் இளம் இசைக் கலைஞர்கள் தற்போது சிறப்பாக பாடி சாதனை படைத்து வருகின்றனர். மும்பை இசைக் கலைஞர்கள் எல்லாருமே இசையில் கொடி கட்டிப் பறக்கின்றனர். பிரசன்னா வெங்கட்ராமன், மும்பையில் பிரபல இசை விதூஷி பாலாமணியிடம் பயிற்சியைத் துவங்கிய உடனேயே இந்த வரிசையில் இடம் பிடிக்கப் போவார் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.
இந்த ஆண்டு சீசனில் மியூசிக் அகடமியின் சிறந்த இளம் பாடகர் விருதையும் பெற்றவர். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் மோகன ராகத்தில் பவநுத (ஆதி) என்று துவங்கும் ஒரு அதி மதுர கீர்த்தனையை பாடினார். சஞ்சயைப் போல இவருடைய ராக ஆலாபனைகளில் நிறைய நகாசு மெருகு விரிவுகளை கேட்டு ரசிக்க முடிகிறது. ஸ்வரப்ரதாரங்களை கேட்டால் வியப்பு ஏற்படுகிறது. இசை வழங்கும் முறை பிரமிப்பைத் தருகிறது.
இந்நிகழ்ச்சியில், இவர் கையாண்ட லதாங்கி ராகம் (அறுபத்து மூன்றாவது மேள ராகம்) மிகச் சிறப்பாக இருந்தது. இதன் ரிஷப, காந்தார, பஞ்சம நியாச் ஸ்வரங்களை மெருகேற்றி பாடியது அருமை. தொடர்ந்து பிரசன்னா தேர்ந்தெடுத்த இசை உருப்படிகள் எல்லாமே முத்து, ரத்தினங்களாக இருந்தன. சுவாதித் திருநாள் மகாராஜா இயற்றிய அருமையான சுமசாயக (இந்துஸ்தானி காபி ரூபகம்) பாடல் நிகழ்ச்சியில் சிகரமாக இருந்தது. இந்துஸ்தானி காபி ராக ஆலாபனை மெய் மறக்க வைத்தது.
பிரசன்னாவின் பிரதானமாக கையாண்ட கேதார கவுரி ராகம், ராகங்களில் மிகப் பழமையானது. தமிழிசை பண்களில் காந்தார பஞ்சமம் என்று அழைக்கப்பட்டது. ராம நாடகப் பாடல் ஒன்றும் இந்த ராகத்தில் பிரசித்தம். மிகவும் சுவையாகப் பாடப்படும் ராகம் இது. இதில், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் துளசி பில்வ கீர்த்தனையை மிக நயமாக கையாண்டு அழகுபடுத்திப் பாடி இதமான சவுக்ய காலத்திலும், பின் விறுவிறுப்பாகவும் ஸ்வரங்களை கையாண்டது மிகச் சிறப்பாக இருந்தது.
நிறைவாக நாடி நாடி தேடிப் பிடித்து முருகனின் திருப்புகழை (பாகேஸ்ரீ) பாடியதும் செவிகள் குளிர்ந்தன. வயலினில் ஆனந்த் நன்றாக வாசித்தார். சற்றே அனுபவம் மெருகேற்ற வேண்டும் அவரை. திருவனந்தபுரம் பாலாஜியின் மிருதங்க வாசிப்பு நல்ல நயமான நாதம், அனுசரணையுடன் இருந்தது.
- மாளவிகா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.