Advertisement
ஐஸ்வர்யாவின் இன்னிசை
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜன
2013
00:00

பிரபல நாடக நடிகர் ராது, அவரது வழிகாட்டுதலில் ஏற்படுத்தப்பட்டது ராது ஆர்ட்ஸ் அகடமி. மார்கழி உற்சவத்தை முற்றிலும் வித்தியாசமாக பிரபல நாடகங்கள், அழகான நாட்டியங்கள், இனிமையான கச்சேரிகள், மகளிருக்கு பல போட்டிகள் அனைவருக்கும் பயன்படக்கூடிய பலவகை பொருட்கள் கண்காட்சி என கோலாகலமாக நடத்தி வருகின்றனர்.
நாடக மாமணி விருதை மாப்பிள்ளை கணேசுக்கும், எம்.ஜி.ஆர்., விருதை பேரன் கோவில் கிருஷ்ணனுக்கும், சீரிய செயல்திறன் விருது ஒய்.ஜி.மகேந்திராவுக்கும், இளைஞர் மேம்பாட்டு விருது கீர்த்திக்கும், இவ்வருட சிறப்பு நாயகன் விருதை "உரத்த சிந்தனை' ராஜசேகருக்கும் வழங்கினர்.
ராது ஆர்ட்ஸ் அகடமியின் செயலரும், "ப்ரியமான தோழி' மாத இதழின் ஆசிரியருமான ப்ரியா கிஷோர், நிகழ்ச்சிகளை சிறப்பாக தயாரித்து அளித்தார். எல்லா நாட்களும் இளம் கலைஞர்களுக்கு ஒரு மணி நேரம் பாட வாய்ப்பளித்து, அவர்களது கலைத் திறமையை உலகிற்கு எடுத்துச் சென்றதும் ராது ஆர்ட்ஸ் அகடமியின் தனித் தன்மையை காட்டியது.
நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக டில்லி ஐஸ்வர்யா லட்சுமியின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இவருக்கு பக்கபலமாக பக்கவாத்தியத்தில் வயலினில் விஷ்ணுவும், மிருதங்கத்தில் கோபால் ரவீந்திரனும் பங்கெடுத்து சிறப்பித்தனர். "வரவல்ல பாரமணா' என்ற கணபதி வந்தன கீர்த்தனை ஹம்சத்வனி ராகத்தில் அமைந்ததை பாடி ஹரமுகோரீ பவ இடத்திற்கு கற்பனை ஸ்வரம் பாடினார். அடுத்து, தியாகராஜரின் மிகப் பிரபலமான எவரளி என்கிற தேவாம்ருத வர்ஷிணி ராக கீர்த்தனையை பாடினார்.
பிரதான ராகமாக சுப பந்துவராளி ராகத்தை எடுத்துக்கொண்டு ராக ஆலாபனை பாடி, தீட்சிதரின் ஸ்ரீசத்ய நாராயணம் கிருதியை பாடி கற்பனை ஸ்வரமும் பாடி முடித்து தனி ஆவர்த்தனத்திற்கு கொடுத்தார். சூர்தாஸ் பஜனுடன் நிகழ்ச்சியை முடித்தார்.
டில்லி ஐஸ்வர்யா லட்சுமி, நான்கு வயது முதல் இசை பயின்று அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலை குழுமத்தில் உள்ளார். ஸ்ரீமதி பத்மாவதி நடேசன் மற்றும் சுகுணா வரதாச்சாரியிடம் முறைப்படி கற்று பல விருதுகளை பெற்றவர்.
-ரசிகப்ரியா

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.