ஷில்பாவின் அபாரமான குச்சுப்புடி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜன
2013
00:00

பிரம்மகான சபாவின் இசை விழா முடிந்து, நாட்டிய விழா மற்றும் அதை தொடர்ந்து நாதஸ்வர இசை விழாவும் நடைபெற உள்ளது. நாட்டிய விழாவில் இளம் கலைஞர்களுக்கான பகுதியில் ஷில்பா சேதுராமனின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தனது மூன்று வயது முதல் தனது தாயார் மதுஸ்ரீயை குருவாக கொண்டு நாட்டியம் பயின்று முறைப்படி அரங்கேற்றம் செய்துள்ளார். நாட்டியகலா பூஷணம் விருதை பெற்றும், சிகாகோ, கலிபோர்னியா நியூயார்க் போன்ற இடங்களில் மிக சிறப்பாக ஆடி விருதுகளையும் பெற்றுள்ளார்.
கலா÷க்ஷத்திராவில் கடந்த 12 வருடமாக பத்மா சொண்டி அவர்களிடம் குச்சுப்புடி நடனம் பயின்று, நூற்றுக்கணக்கில் நிகழ்ச்சிகளும் செய்துள்ளார். கலாவர்த்தினி மூலமாக பரதம் மற்றும் குச்சுப்புடி நடனத்தில் குறுந்தகடுகளையும் வெளியிட்டுள்ளார்.
உலகத்தில் இவர் நடனம் செய்யாத நாடுகளே இல்லை என்றே கூறலாம். தனது நாட்டிய நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி, பல தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்துள்ளார்.
தனது நிகழ்ச்சியின் துவக்கமாக, தனது குரு பத்மா சொண்டி நடன அமைப்பு செய்த, "பரி பரி நீ பாதமே' (ஹம்சத்வனி ராகம் - ஆதிதாளம்) பாடலில் கணேசனை தன் நடனத்தில் எவ்வித இடையூறுகளுமின்றி நடைபெற பாடலின் கருத்தை உள்வாங்கி நன்கு ஆடினார். பாடலுக்கு அமைக்கப்பட்ட சிட்டைஸ்வரம் மிக அற்புதம், அதற்கு காரணம், பாடலை எழுதியவர் பாலமுரளி கிருஷ்ணா, பாடியவர் ராதா பத்ரி. சுத்த தெலுங்கில் பாடல் தேன் போல் இனித்தது.
முரளி "மிருதங்க நாட்டியப்ரயாக' என்ற வரிகளில், மிருதங்கத்தில் கொடுத்த ஜதிக்கும், மதுஸ்ரீ கொடுத்த ஜதிக்கும் மிக அழகாக ஆடினார். அடுத்து, "ஜய ஜய துர்கே' என்ற ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த மிக அபூர்வமான நாராயண தீர்த்தர்தரங்கத்தை வர்ண அமைப்பில் செய்து, மிகப் பிரமாதமாக ஆடினார். அதுவும் அவருடைய நீண்ட முகம், கண்கள், நாசி அப்படியே துர்கையை வடித்தாற்போல் இருந்தது.
அடுத்து ஜெயதேவரின் அஷ்டபதி ராக மாலிகையில் அமர்ந்ததை எடுத்து ஆடினார். இப்பாடல் மிகப் பிரபலமான பாடல். இதற்கு மெட்டமைத்தவர்கள், பாடலின் பொருளுக்கேற்ப ராகங்கள் அமைந்ததை பாங்குடன் புரிந்து ஆடினார். சஞ்சரததர சுதா மதுரத்வனி கண்ணனின் அழகு கொஞ்சும் முகம், அதுவும் தன் காதலி ராதாவுடன் குழலூதி அவளை மட்டுமல்ல இவ்வுலகத்தாரே எப்படி மயங்கி இருப்பர் என்ற நம் சந்தேகத்தை ஷில்பாவின் நடனம் தீர்த்து வைத்தது.
அதைத் தொடர்ந்து ராதையை விட்டு கண்ணன் பிரிந்த சோகத்தை ராதா நினைத்து வருந்தும் காட்சிகளை சொல்லும் பாடல் வரிகளுக்கு ஷில்பாவின் நடனம் நிறைவை தந்தது. அதன் முடிவில் பிரிவை நினைத்து சிலை போல் நின்று விட்டார். இறுதியாக மிகவும் புதுமையாக சிவபெருமான் மீதுள்ள ஸ்தோத்திர வரிகளுக்கு ரேவதி ராகத்தில் அமைக்கப்பட்டதற்கு ஆடினார். அதனால், ஷில்பாவின் நன்கு உழைத்து, விறுவிறுப்பான நடனம் நமது கண்களுக்கு நல்ல விருந்து.
-ரசிகப்ரியா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.