அழகு பொங்க ஆடினார் அர்ச்சனா
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜன
2013
00:00

பந்தநல்லூர் பாணியில் கைதேர்ந்த நடன மணியாக ஆடி வரும் இளம் அர்ச்சனா நாராயண மூர்த்தி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் நிகழ்ச்சியில் ஆடிய விதத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவருடைய குரு பந்தநல்லூர் பாண்டியன் இவரை நடனத்தில் மிக கைதேர்ந்த சிற்பியாக உருவாக்கி இருக்கிறார்.
நிறைய நடனமணிகள் ஆடுகின்றனர். ஆனால், நாட்டியக் கலைக்கு ஒரு பாரம்பரிய கவுரவம் உள்ளது. அதைக் காப்பாற்றி அதை மீறாமல் புது உத்திகளுடன் ஆட வேண்டியது அவசியம். அதை நிறைவேற்றினார் அர்ச்சனா. இந்த நிகழ்ச்சியில் ஆடல் மரபு, அதன் தூய்மை கெடாமல் பாதுகாத்து அவர் வழங்கிய தஞ்சை நால்வர்களுள் ஒருவரான சிவானந்தம் வழங்கிய, "சகியே இந்த வேளையில் ஜாலம் செய்யாதே எந்தன் சாமியை அழைத்தோடி வா' (ஆனந்த பைரவி) (ஆதி) வர்ணம் முழுக்க முழுக்க மகிழ்ச்சியில் திணற அடித்தது.
ரசிகர்களுக்கு அடித்தது நல்ல யோகம். இல்லாவிட்டால், இவ்வளவு அருமையான நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்திருக்க முடியாது.
மகிதலம் புகழும் மெத்த மகிமை ராஜ நகரில் கையில் திகிரி - சங்கு ஏந்தி திகழும் ராஜகோபால சுவாமியே இந்த வர்ணத்தின் நாயகன். இதன் முக்தாயி ஸ்வர வரிகளுக்கு சிருங்கார உணர்வில் தவிக்கும் நாயகியாக, இந்த நிலா வீணாக காய்கிறதே இதில் உல்லாசம் புரிய அவரை அழைத்து வா என்று சிருங்கார உணர்வுகளை நயமாக விழிகளில் உணர்த்திய அழகு, ரசிகர்கள் விட்டனர் பெருமூச்சு. அடவுகளில் பொறி பறந்தன.
உடம்பு, அழகு, ஆடும் விதம் அதை விட பட்டைபோட்டு தீட்டிய ஜொலிப்புடன் அமர்க்களமாக இருந்தன. பாத வேலைகள் படுநயம். டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் பிருந்தாவன சாரங்கா தில்லானாவிற்கு, அர்ச்சனா மகுடம் சூட்டிய திறமையுடன் ஆடியபோது மனம் குளிர்ந்தது. நடனத்தில் இவர் ஒரு சுட்டி. குரு பந்தநல்லூர் பாண்டியனின் சிறப்பான நட்டுவாங்கம், நந்தினியின் அருமையான பாட்டு, மாயூரம் விசுவநாதனின் மிருதங்கம், எம்.எஸ். கண்ணனின் வயலின் எல்லாமே படு தூள்.
மாயூரம் டி.விசுவநாதன் ஒரு திறமையான மிருதங்க கலைஞர் மட்டுமின்றி நிறைய ஜதிக் கோர்வைகளையும் வடிவமைத்து அடவுகளுடன் ஆட அர்ச்சனாவிற்கு உதவி செய்யும் லயஞானம் பாராட்ட வைக்கிறது.
- மாளவிகா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.