வறண்ட கோடையில் உங்கள் மல்லிகை, வெண்டைப் பயிர்களில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை கவனித்திருப்பீர்கள். வெண்டையில் காய்களும் மஞ்சள் நிறமாகி வெளுத்துப் போய்விடும். இந்நிறமாற்றம் செஞ்சிலந்தி தாக்குதலால் ஏற்படுகின்றது. செஞ்சிலந்தி தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாடு முறைகள் குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
செஞ்சிலந்தி தாக்குதல் அறிகுறிகள்:
பாதிப்பு முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றி இளம் இலைகளுக்கு பரவும். இலைகளின் மேற்புறத்தில் மஞ்சள் நிறப் புள்ளிகள் காணப்படும். பாதிக்கப்பட்ட மல்லிகை இலைகள் மற்றும் வெண்டை காய்களின் இலைகள் ஆகியவற்றை உற்று நோக்கினால் மெல்லிய நூலாம்படையும் அதனுள் சிவப்புநிற சிறிய பூச்சிகள் மெதுவாக நகர்வதையும் காணமுடியும். உருப்பெருக்கி கொண்டு பார்த்தால் அப்பூச்சிகள் எட்டுக்கால்கள் கொண்டனவாக இருப்பதைக் காண இயலும். இப்பூச்சிகள் செவ்வுண்ணி என்றும் அழைக்கப்படும். தாக்குதல் தீவிரப்பட்டால் இலைகள் முற்றிலும் வெளுத்து காய்ந்து கீழே உதிர்ந்துவிடும். வறண்ட வெப்பமான சூழ்நிலையில் செஞ்சிலந்தி தாக்குதல் விரைந்து பரவும். நன்கு மழை பெய்தால் தாக்குதல் குறையும்.
கட்டுப்படுத்த:
மல்லிகை, வெண்டைப் பயிர்களில் செஞ்சிலந்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று கிராம் வீதம் நனையும் கந்தகம் மருந்தினைக் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும். பயிரின் வளர்ச்சியினைப் பொருத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்துக் கரைசல் தேவைப்படலாம். இலையின் அடிப்புறமும் படும்படி தெளிக்க வேண்டும்.
குறிப்பு:
மருந்துக் கரைசலைத் தெளிக்கும்போது பயிரில் நன்கு படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றினை (சாண்டோவிட், இன்ட்ரான் - வணிகப் பெயர்கள்) ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். எஸ்.ஜெயராஜன் நெல்சன், பேராசிரியர் மற்றும் தலைவர் பருத்தி ஆராய்ச்சி நிலையம் ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.