அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2013
00:00

** ஹேமலதா ரவிச்சந்திரன், செஞ்சி: உடலில் ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணிக் கொண்டால், அதையே சாக்கு வைத்து, 10 வருடங்களானாலும் கூட, நோயாளி போல் நடந்து கொள்கின்றனரே பல பெண்கள். காரணம் என்ன?
உங்களின் ஓரகத்தி, வீட்டு வேலைகளில், உங்களுக்கு ஒத்தாசை செய்யவில்லை என நினைக் கிறேன். உங்களின் ஆதங்கம், கேள்வி கேட்டுள்ள தொனியில் புலப்படுகிறது. சின்ன ஆபரேஷனோ, பெரிதோ, மன வலிமையற்றவர்கள், தம்மை சீக்காளியாகவே நினைத்துக் கொள்வர். புரிந்து கொள்ளுங்கள்; பெண்ணை பெண்ணே குற்றம் காணும், கொடுமை செய்யும் குணத்தை விட்டொழியுங்கள்!
***

*வி.குலசேகரன், உடுமலைப்பேட்டை : டிபன் சாப்பிட்டு, கை கழுவிய பின், காபி சாப்பிடுவது, டிபன் சாப்பிட்ட உடன் காபி குடித்து கை கழுவுவது - எது நல்லது?
நல்லது - கெட்டது பிரச்னையே இங்கே எழவில்லை. ”வை எதில் என்பதுதான். என் அனுபவம், கடைசி ஐட்டத்திற்கு, "ஆர்டர்' கொடுக்கும் போதே, "காபியும் சேர்த்துக்கொண்டு வரவும்' என சப்ளையரிடம் கூறி, கடைசி ஐட்டத் திற்கு, ஒவ்வொரு விள்ளலுடன் ஒரு மடக்கு என, காபி சாப்பிடும் போது கிடைக்கும் திருப்தியும், சுவையும் இருக்கிறதே... முயற்சித்துப் பாருங் கள்!
***

** எஸ்.கணேசன், திருப்பூர் : மனைவிக்கு பயப்படாதவன் வீடு, நிதி நிலைமையில் முன்னேறுமா?
நிதி நிலையைப் பொறுத்தவரை, சந்தேகம் தான்! குடும்பத்தின் நிதி அமைச்சர் பொறுப்பு, பெண்கள் கையில் உள்ள இல்லங்கள் அனைத்தும், செழிப்புடன் இருப் பதென்னவோ உண்மைதான்!
***

*இ.ராமமூர்த்தி, கடலூர்: ஆணின், 14 வயது காதல், 21 வயது காதல் - இதில் எது நீடிக்கும்?
இரண்டுமே, "பெயிலியர்' ஆகக் கூடும்! ஆண்களுக்கு, 26 - 27க்கு பிறகுதான் மென்டல் மெச்சூரிட்டி - மனமுதிர்ச்சி ஓரளவேனும் வரும்! அதன்பின், இந்த முயற்சியில் இறங்குவது நலம்!
***

*சரஸ்வதி குமரன், கோவை: அறிவு, அடக்கம், அழகு... இம்மூன்றில் பெண்ணுக்கு மிக முக்கியமாக எது தேவை?
அறிவு... இக்காலப் பெண்களுக்கு அறிவு மிகத் தேவை! அறிவை வளர்த்துக் கொள்ளும் பெண்ணிடம், அடக்கம் போன்ற பண்புகள் தானாக வந்து ஒட்டிக் கொண்டு விடாதோ!
***

*டி.ஆறுமுகச்சாமி, பொள்ளாச்சி: பல பொது இடங்களில் பச்சிளம் குழந்தைகள், கையில் தட்டு ஏந்தி, தர்மம் கேட்கின்றனரே... தர்மம் செய்யலாமா?
அவர்களுக்கு பிச்சை போட்டால், அதர்மம் செய்தவராகி விடுவீர்கள்! சோம்பேறி பெற்று போட்டு, பிச்சை எடுக்க விட்ட பிள்ளையை, அனுதாபத்துடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்... சல்லிகாசு கூட பிச்சை இடக் கூடாது!
***

** ஜி.கவுசல்யா, அருப்புக்கோட்டை: படித்த பெண்கள் கூட, இன்னமும் மூட நம்பிக்கையிலும், வரதட்சணை கொடுமையிலும், சிக்கித் தவிக்கின்றனரே...
சிந்திக்க கற்றுத் தராத பாடத் திட்டமும், பழமைவாதிகளின் வறட்டு பேச்சும், கவுரவமே பெண்களுக்கு எதிராக செயல்படுவதால் தான் இந்த கொடுமை தொடர்கிறது. ஆனால், அங்கங்கு வெளியாகும் செய்திகளை படிக்கும் போது, பெண் களை சுற்றி உள்ள விலங்குகள் உடைப்பட்டு வருவதாகவே தோன்றுகிறது!
***

*கே.மணிமேகலை, மரக்காணம்: கல்லூரியில் படிக்கும் என் மகள், ஆண் நண்பர்களுடன் பழகுவது எனக்கு மிகவும் பயமாக உள்ளது. என் பயத்தை அவளிடம் எப்படி கூறுவது?
இக்காலப் பெண்களுக்கு ஆண்களுடன் பழகும் எல்லை நன்றாகவே தெரியும். பொத்திப் பொத்தி வளர்ப்ப தால், தைரியமற்ற வர்களாகிப் போய், எதிர்காலத் தில் ஊரை, உலகத்தை, கொடுமைக்கார புருஷன் வாய்த்தால், அவனை எதிர் கொள்ளத் தெரியாதவர் களாக, தெம்பற்ற வர்களாகி விடுகின்றனர். உங்கள் பயத்தை விட்டொழியுங்கள்!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramachandran n - madurai,இந்தியா
17-ஜன-201314:49:12 IST Report Abuse
ramachandran n டெல்லி சம்பவம் நடந்த பிறகும்? அனைத்து பெண்களுக்கும் தேவை தைரியம்
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
15-ஜன-201312:02:48 IST Report Abuse
anandhaprasadh அந்து... ரொம்பவும் பெண்களை சப்போர்ட் பண்ணுகிறீர்கள்... தப்பில்லை.. ஆனால் திருமணமான ஆண்கள் படும் கஷ்டங்களையும் அவ்வப்போது வெளியிடுங்கள் ஐயா... அதைப் படித்த பிறகாவது தவறு செய்யும் பெண்களில் சிலராவது தவறை உணரட்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.