இதப்படிங்க முதல்ல....
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜன
2013
00:00

இளையராஜாவுக்கு சங்கீத அகாடமி விருது!


இந்தியாவில் இசை, நடனம், நாடகம், திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறைகளில் சிறந்து விளங்குவோர்க்கு, தேசிய மன்றம் சார்பில் வழங்கப்பட்டு வரும், சங்கீத அகாடமி விருது, இந்த ஆண்டு, ஒன்பது பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இசைஞானி இளையராஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் பெறும் அகாடமி விருதானது, ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை, தாமிர பட்டயம், அங்க வஸ்திரம் ஆகியவற்றைக் கொண்டது.
சினிமா பொன்னையா

ரிச்சா மார்க்கெட் சரிந்தது!


தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் மற்றும் பிரியாணி படங்களில் ஒப்பந்தமாகி பின்னர் வெளியேற்றப்பட்டவர் ரிச்சா. இருப்பினும், தெலுங்கில் மார்க்கெட் கெட்டியாக இருந்ததால், தமிழ் படங்கள் போனதை நினைத்து வருந்தவில்லை அவர். ஆனால், சில மாதங்களுக்கு முன், ஒரு போட்டோகிராபருடன் அவரை இணைத்து வெளியான கிசுகிசுக்களை அடுத்து, இப்போது, ரிச்சாவின் தெலுங்கு மார்க்கெட்டும் குடை சாய்ந்து கிடக்கிறது. அதனால், சினிமாவில் தன்னை தக்க வைத்து கொள்ளும் பொருட்டு குத்தாட்ட வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு வருகிறார். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
எலீசா

தமிழுக்கு வருகிறார் காஜல் அகர்வால்!


துப்பாக்கி பட வெற்றிக்கு பின், கோலிவுட்டில் காஜல் அகர்வாலுக்கு மரியாதை கூடியுள்ளது. மேலும், நான் மகான் அல்ல படத்துக்கு பின், மீண்டும் கார்த்தியுடன், அழகுராஜா ஆல் இன் ஆல் படத்தில் நடிக்கும் அவருக்கு, படம் கொடுக்க சில கம்பெனிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதனால், இந்தி, தெலுங்கு படங்களை குறைத்து விட்டு, அடுத்தபடியாக தமிழில் அதிக படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் காஜல். நாளும், கோளும் நன்றாக இருந்தால் விரல் மடக்க பொழுதில்லை!
எலீசா

எழுத்தாளர்களை இழுக்கும் விஷால்!


சமீபகாலமாய், தான் அதிக எதிர்பார்ப்புடன் நடிக்கும் படங்களே தோல்வியடைந்து விடுவதால், கதை விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் விஷால். குறிப்பாக தான் நடித்த, சண்டைக்கோழி, அவன் இவன் படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.ராமகிருஷ்ணனை தற்போது தான் நடித்துள்ள, சமர் படத்துக்கும் வசனம் எழுத வைத்திருப்பவர், தொடர்ந்து தன் படங்களில் திறமையான எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
சி.பொ.,

ஹாலிவுட் கனவில் ஆண்ட்ரியா!


பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஆரம்பித்த ஆண்ட்ரியாவின் சினிமா பிரவேசம், தற்போது கமலுடன் நடித்த பின், விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது. பாலிவுட், ஹாலிவுட் படங்களே அவர் பக்கம் திரும்பி நிற்கின்றன. இதற்கிடையே கமல் இயக்கும் ஹாலிவுட் படத்திலும், தன்னை இணைத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆண்ட்ரியாவுக்கு, ஹாலிவுட் படங்களிலும் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது தான் நோக்கம். ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போய் சேரும்!
எலீசா

கமல் - ஸ்ரீதேவி மீண்டும் இணைவரா?


கடந்த, 1982ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில், கமல் - ஸ்ரீதேவி நடித்த படம் மூன்றாம் பிறை. அதன் பிறகு, இந்தியில் ரீ-மேக்கான, சத்மா என்ற படத்திலும், இந்த ஜோடியே நடித்தனர். முக்கியமாக, கமலுக்கு தேசிய விருது வாங்கித் தந்த, மூன்றாம் பிறை படத்தின், இரண்டாம் பாகத்தை தமிழ், இந்தியில் படமாக்கும் முயற்சி ஒன்று தற்போது நடந்து வருகிறது. அப்படத்தில் நடிக்க ஸ்ரீதேவி தயாராக இருந்த போதும், கமல் தரப்பில் இன்னும் சாதகமான பதில் வரவில்லை.
சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.