அமெரிக்காவைச் சேர்ந்த, ஆண்களுக்கான பிரத்யேக, இணையதள நிறுவனம், ஆண்டுதோறும், "உலகிலேயே, உங்களால் அதிகம் விரும்பப்படும் பெண் யார்?' என்ற கேள்வியை கேட்டு, அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான கருத்துக் கணிப்பில், முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளவர், பிரபல ஹாலிவுட் நடிகை, ஜெனிபர் லாரன்ஸ். இவருக்கு, 22 வயது தான் ஆகிறது. மெழுகுச் சிலை போன்ற, இவரது தோற்றமும், அசத்தலான அழகும், பலரையும் கிறங்கடித்து விட்டது.
"இவர் தான், எனக்கு பிடித்த பெண்' என, 24 லட்சம் பேர், ஏகமனதாக, ஜெனியை தேர்வு செய்துள்ளனர். மற்றொரு பிரபல ஹாலிவுட் நடிகை, மிலா குனிஸ், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இணையதள நிர்வாகி, ஜேம்ஸ் பசில் கூறுகையில்,"ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல், எப்போதும் பிரஷ்ஷாக தோற்றமளிப்பதால் தான், ஜெனியை, பலருக்கும் பிடித்துள்ளது. அத்துடன், நடிக்க வந்து, நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரை எந்த சர்ச்சையிலும் அவர் சிக்கவில்லை என்பதும், மற்றொரு முக்கிய காரணம்...'என்கிறார்.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.