ஷிப்பிங் கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் வேலை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜன
2013
00:00

கிழக்கு கப்பல் கட்டும் கழகத்தையும், மேற்கு கப்பல் கட்டும் கழகத்தையும் இணைத்து 1961ல் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் இந்தியக் கப்பல் கட்டுமானக் கழகம் 1961ல் நிறுவப்பட்டது. 19 கருவிகளுடன் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய கப்பல் தயாரிக்கும் நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது. கச்சா எண்ணை சுமந்து செல்லும் கப்பல்கள், பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், பயணிகள் மற்றும் சரக்கு கப்பல்கள், வேதிப் பொருட்களை சுமந்து செல்லும் கப்பல்கள், இயற்கை எரிவாயு கப்பல்கள் மற்றும் வெளி நாடுகளுக்கான கப்பல்கள் என்று பல்வேறு விதமான கப்பல்களை கட்டுமானம் செய்வதில் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் இள நிலை இன்ஜினியர்கள் பதவியில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:


எஸ்.சி.ஐ., நிறுவனத்தின் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.04.2013 அன்று அடிப்படையில் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நான்கு வருட காலம் படிக்கக் கூடிய இன்ஜினியரிங் பட்டப் படிப்பை மரைன் இன்ஜினியரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பு டைரக்டரேட் ஜெனரல் ஆப் ஷிப்பிங் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். நல்ல உடல் நிலையும், கண்களில் வண்ணக் குறைபாடு இல்லாத நிலையும் கட்டாயம் தேவைப்படும்.

மற்றவை:


ஆறு மாத காலப் பயிற்சியுடன் துவங்கும் இந்தப் பதவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஸ்டைபண்டாக வழங்கப்படும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.1000/-ஐ ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை 10972426052 என்ற அக்கவுண்ட் எண்ணில் பேக்பே ரெக்ளமேஷன் கிளையில் SBIN0001593 என்ற ஐ.எப்.எஸ்.சி., கோடு எண்ணுடன் செலுத்த வேண்டும். விண்ணப்ப படிவங்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெற வேண்டும். விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பி இதனுடன் அட்டெஸ்டு செய்யப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படங்களை இணைக்க வேண்டும்.ஒவ்வொரு செமஸ்டரின் மதிப்பெண் படிவங்களின் நகல், பட்டப் படிப்பு நகல் உள்ளிட்ட இதர ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


Vice President, Fleet Personnel Dept I/C,
Third Foor, The Shipping Corporation of India Ltd.,
Shipping House, 245 Madam Cama Road, Nariman Point, Mumbai - 400021
Maharashtra.

விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் :


15.02.2013

இணையதள முகவரி:


www.shipindia.com/pdf/MediaSpeak/JE2013&2309d8.pdf

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.