ஐ.ஐ.எம்., உள்ளிட்ட இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில், முதுகலை மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு நடந்த "கேட்' நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜன., 9ல் வெளியிடப்பட்டது. கடந்த அக்., 11 முதல் நவ., 6 வரை நடந்த இத்தேர்வை 1,91,642 மாணவர்கள் எழுதினர். கோழிக்கோடு ஐ.ஐ.எம்., இதனை நடத்தியது. இதில் 10 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதித்துக்காட்டியுள்ளனர். இவர்களில் 8 பேர் ஐ.ஐ.டி., மாணவர்கள். மேலும் இந்த 10 பேரில், 9 பேர்
இன்ஜினியரிங் மாணவர்கள், ஒருவர் அறிவியல் பிரிவை சேர்ந்தவர். 10 பேரில் ஐந்து பேர் இறுதியாண்டு படிப்பவர்கள்.
* மாணவிகளில் அதிகபட்சமாக நான்கு மாணவிகள் 99.99 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
* 255 மாணவிகள், 1,640 மாணவர்கள் 99 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக மும்பை மண்டலத்தில் இருந்து 180 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு அடுத்து, டில்லியிலிருந்து 168 பேரும், பெங்களூருவிலிருந்து 157 பேரும், ஐதராபாத்திலிருந்து 105 பேரும், கோல்கட்டாவிலிருந்து 92 பேரும், சென்னை மண்டலத்தில் இருந்து 85 பேரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
* 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்களில், கலைப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் வெறும் ஒரு சதவீதம் பேர் தான்.இந்த வரிசையில் வணிக பிரிவில் 1.3 சதவீத பேரும், ஆர்க்கிடக்சர் 11.8 சதவீதம் பேரும், இன்ஜினியரிங் பிரிவில் 6.8 சதவீதம் பேரும், மருத்துவ பிரிவில் இருந்து 4.1 சதவீதம் பேரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
* ஆர்க்கிடக்சர் பிரிவில் இருந்து அதிகபட்ச மதிப்பெண் 99.71. மருத்துவப்பிரிவில் அதிகபட்ச மதிப்பெண் 99.97
எம்.பி.பி.எஸ்., சேர்க்கை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.