Advertisement
கூகுள் தர இருக்கும் சூப்பர் போன்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2013,00:00 IST

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போட்டிக்கு இழுக்கும் வேலையில் கூகுள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியுள்ளது. இதன் முதல் படியாக, சூப்பர் ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவமைக்கும் முயற்சிகளில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1,250 கோடி கொடுத்து கூகுள் வாங்கிய மோட்டாரோலா நிறுவனத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் போனில், தற்போது சாத்தியமாகக் கூடிய அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி, கூடுதல் வசதிகள் தரப்படும். தற்போதைய போன்களில் உள்ள கலர் கட்டமைப்பில் உள்ள எண்ணிக்கயைப் பெரும் அளவில் உயர்த்தப்படும். போனின் ஹார்ட்வேர் எளிதில் உடைந்து போகாத அளவிற்கு கடினமாக அமைக்கப்படும். வழக்கமான காட்சிகளுடன், பனாரமிக் வியூ என்று சொல்லக் கூடிய, பரந்துவிரிந்த காட்சி எடுக்கக் கூடிய கேமரா ஒன்று இணைக்கப்படும். இவற்றுடன் அதிக நாட்கள் தொடர்ந்து மின்சக்தி தரக்கூடிய திறனுடன் பேட்டரி வழங்கப்படும்.
இந்த போன் நிச்சயமாய் 2013 ஆம் ஆண்டில் விற்பனக்கு அறிமுகப்படுத்தப்படலாம். இத்துடன் எக்ஸ் டேப்ளட் என்ற பெயரில் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றையும், இந்த இரு நிறுவனங்கள் வடிவமைக்க இருக்கின்றன.இந்த தகவல்கள் குறித்து, மோட்டாரோலா தலைமை நிர்வாகியிடம் கேட்ட போது, குறிப்பாக இவை என்று குறிப்பிடாமல், அண்மையில், பொறியாளர் குழு ஒன்றை அதிக முதலீட்டில் அமைத்து, புழக்கத்தில் இல்லாத வகையில் தொழில் நுட்பம் பயன்படுத்தும் வழிகளைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.